‘பிரின்ஸ்’ மேடையில் இணையும் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி

‘பிரின்ஸ்’ மேடையில் இணையும் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பிரின்ஸ்’.

ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

‘பிரின்ஸ்’ டத்தின் ரிலீசை முன்னிட்டு பட குழுவினர் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பட புரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது என்ற செய்திகளை நாம் FILMISTREET இணையதளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் PRE RELEASE EVENT நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா & ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijay Deverakonda & Rana as Chief Guests at SivaKarthikeyans Prince Event

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு போலீஸ் பாதுகாப்பு..!

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு போலீஸ் பாதுகாப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதில் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பிற்காக ரஜினி புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பை அளித்தனர்.

Police protection for shooting of Jailer movie

இந்தியாவை கலக்கிய கன்னட நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.?!

இந்தியாவை கலக்கிய கன்னட நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட படங்கள் என்றாலே ஓரிரு சில நடிகர்களை மட்டுமே அனைவருக்கும் தெரியும்.

அதில் முக்கியமாக மறைந்த கன்னட நடிகர் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்ப நடிகர்களே பிரபலமாக இருந்தனர்.

இதற்கு முக்கிய காரணம் கன்னட படங்கள் கர்நாடகாவில் மட்டுமே ரிலீஸ் ஆகும். மேலும் மற்ற மொழி படங்களையும் கர்நாடகாவில் வெளியிட மாட்டார்கள். இதனால் குறுகிய வட்டத்திற்கு கன்னட சினிமாவினர் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது பேன் இந்தியா படங்கள் மூலமாக இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது கன்னட திரைப்படங்கள்.

சுதீப்..யஷ் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட கன்னட நடிகர்கள் பான் இந்தியா படங்கள் மூலம் பிரபலமாகி வருகின்றனர்.

கே ஜி எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் யஸ் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் யஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘கைதி 2’ மற்றும் விஜய்யின் 67வது படத்தை முடித்துவிட்டு யஸ் படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது.

யஷ்

KGF Actor Yash and Director Lokesh will join for new venture

‘வாரிசு’ & ‘துணிவு’ படங்களுடன் மோதும் விமல் & யோகிபாபு கூட்டணி

‘வாரிசு’ & ‘துணிவு’ படங்களுடன் மோதும் விமல் & யோகிபாபு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த “தமிழன்” மற்றும் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல வெற்றிப்படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத்.

இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார்.

இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.

இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சில புரோக்கர்கள் தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

அதனால் மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் , அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து ஜனரஞ்ஜகமாக இப்படம் சொல்கிறது.

ஹீரோ விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது.

கான்ஃபிடன்ட் பிலிம் கேப் (Confident Film Cafe) சார்பில் இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து டைரக்டு செய்கிறார் அப்துல் மஜீத்.

2023 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது.

2023 பொங்கலுக்கு விஜய் நடித்த ‘வாரிசு & அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

விமல்- யோகி பாபு

Vimal and Yogibabu starring in Majjid Direction

JUST IN ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.; சசிகலா குற்றவாளி; ஆறுமுகசாமி ஆணையம் அப்டேட்

JUST IN ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.; சசிகலா குற்றவாளி; ஆறுமுகசாமி ஆணையம் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

22-9-2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை?

அமெரிக்க மருத்துவர் ரிச்சர்ட் பிலே பரிந்துரை செய்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படவில்லை.

இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்..

சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன – ஆறுமுகசாமி ஆணையம்.

ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் 2 மாதத்திற்கு பின் இங்கிலாந்து மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு மாற்றம்.

மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவை பரிசோதிக்காமல் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என இங்கிலாந்து மருத்துவர் முடிவு செய்துள்ளார்.

கூடுதல் தகவல்…

ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4.12.2016 அன்று, பிற்பகல் 3.50 மணிக்கு காலமானார்

CPRல் சிகிச்சை என்பது அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டன – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை.

டிசம்பர் 4ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்தார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை

2016 டிசம்பர் 5ம் தேதி அப்பலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வெளியான அறிக்கை.

Arumugan Commission submits Jayalalithaas Death probe report at TN Assembly

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி பான் இந்தியா பட பர்ஸ்ட் லுக்

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி பான் இந்தியா பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”.

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார்.

நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் அவர் தனது காலை அசைக்க, அதே நேரத்தில் டிரம்மர்கள் அவரது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அடிக்கிறார்கள்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் பார்த்தவுடன் பெரும் உற்சாகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய்குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு – சுதாகர் செருக்குரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
சண்டைப்பயிற்சி – அன்பறிவு
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் – சிவா (AIM) (தமிழ்) – வம்சி-சேகர் (தெலுங்கு)

Dasara movie keerthy Suresh first look released

More Articles
Follows