‘பிரின்ஸ்’ கொடுத்த பிஃயர்.: வழுக்கும் ‘வாரிசு’.; வருத்தத்தில் ‘வாத்தி’

‘பிரின்ஸ்’ கொடுத்த பிஃயர்.: வழுக்கும் ‘வாரிசு’.; வருத்தத்தில் ‘வாத்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவில் தமிழ் சினிமாவுக்கு நிகராக தெலுங்கு சினிமாவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.

தெலுங்கில் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அதுபோல தமிழ் சினிமாவில் ஓரிரு தெலுங்கு நடிகர்களுக்கும் மார்க்கெட் உள்ளது.

எனவே ஒரு மொழியில் தயாராகும் படத்தை மற்ற மொழியில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினி, கமல், சூர்யா,விஷால், கார்த்தி உள்ளிட்டோருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் தான் நடிகர்கள் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து அழைப்பு வந்தது.

இதனையடுத்து இவர்கள் மூவரும் தெலுங்கு இயக்குனரின் படங்களில் நடித்து வருகின்றனர்.

அனுதீப் இயக்கிய சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளிக்கு ருலீசாகிவிட்டது.

வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கி அல்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த மூன்று படங்களும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களாக உருவாகி வருகிறது.

தீபாவளிக்கு வெளியான ‘பிரின்ஸ்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததால் தோல்வியை தழுவியுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடல் வெளியானது.

இந்த பாடலும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதில் விஜய் பயன்படுத்திய நடன அசைவுகள் ஏற்கனவே சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் பயன்படுத்தியது.

மேலும் இந்த பாடலும் பழைய பாடலின் மெட்டு போல உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமன் இசையும் போதுமான வரவேற்பை பெறவில்லை.

இதனால் விஜய் ரசிகர்களும் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

தெலுங்கு இயக்குனரின் படங்கள் தமிழ் நடிகர்களுக்கு ஒத்து வரவில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.

இது தனுஷ் ரசிகர்களிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கூடுதல் தகவல்…

தெலுங்கு நடிகர்களை வைத்து தெலுங்கு இயக்குனர்கள் இயக்கிய பாகுபலி, ஆர் ஆர் ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இங்கு கவனிக்கத்தக்கது.

Telugu director’s films are not suitable for Tamil actors.

OFFICIAL ‘சர்தார்’ படைத்த சாதனை.; சந்தோஷத்தில் படக்குழு

OFFICIAL ‘சர்தார்’ படைத்த சாதனை.; சந்தோஷத்தில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் “சர்தார்”.

உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் உலகமெங்கும் ரூபாய் 100 கோடியை ‘சர்தார்’ படம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடனத்தை காப்பியடித்த விஜய்.; வாரிசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

சிவகார்த்திகேயன் நடனத்தை காப்பியடித்த விஜய்.; வாரிசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டனர்.

இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர்.

இந்த பாடல் இதுவரை 2.2 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது.

இந்தப் பாடல் & நடனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குனர் ஜானி என நெட்டிசன் என்ற வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான ‘முத்து முத்து பல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் ரஞ்சிதமே என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028oPkM7Pf35w21DEMAvrGGGkfRWS9Bne2Wv7raExQNV4cnVCY8C2EPM8ZuvkDyryGl&id=100036368776950&sfnsn=wiwspwa

கார்த்தி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

கார்த்தி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஹாப்பியில் இருக்கிறார் நடிகர் கார்த்தி.

இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

இந்த படத்தில் நாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அனு என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஜப்பான்’ என்று பெயரிட்டுள்ளனர்.

பதட்டமான சூழலில் ‘குருமூர்த்தி’ படப்பிடிப்பு.. திகிலுடன் நடித்தோம் – நட்டி

பதட்டமான சூழலில் ‘குருமூர்த்தி’ படப்பிடிப்பு.. திகிலுடன் நடித்தோம் – நட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நட்டி பேசும்போது…

“ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்த படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது.

படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா..? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டி விட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

‘செக்கச் சிவந்த சுந்தரி…’ பாடலில் ராம்கி மூன்று நடிகைகளுடன் நடனமாடியுள்ளார். அந்தப்பாடலில் எனக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டபோது உங்களுக்கு இதில் வேலை என்று இல்லை என ஒதுக்கி விட்டனர்” என்று ஜாலியாகப் பேசினார்.

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குனரே காரணம் – கே.ராஜன்

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குனரே காரணம் – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே ராஜன் பேசும்போது…

“நட்டி எப்போதுமே ஒரு ஹேண்ட்சம் ஹீரோ. இந்தியில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக இருப்பவர். அவருடன் ‘பகாசுரன்’ என்கிற ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எனக்கு செல்வராகவனின் அப்பா வேடம். அந்தப் படத்தில் நடிக்கும்போது கறுப்பாக இருந்தார்.

இப்போது என்ன வெள்ளையாக இருக்கிறாரே என்று பார்த்தால், அந்த பாடலில் நாயகியுடன் உரசி உரசி நடனமாடி கலராக மாறி விட்டார் போல.. நான் சர்ச்சையாகப் பேசுபவன் என்று கூறுகிறார்கள்.. நான் இந்த சினிமா தொழில் பாதிப்புக்கு காரணமானவர்களை நிச்சயம் விமர்சிப்பேன்.. பட விழாக்களுக்கு நடிகர்கள் வரவேண்டும் என சொல்வது எங்களுக்காக அல்ல.. வந்தால் உங்களுக்குத் தான் லாபம்.. தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டாலும் கூட அது நடிகர்களுக்குத் தான் லாபம்.

படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குநர் தான் காரணம்.. ஆனால் படம் வெற்றி பெறும்போது ஹீரோ சம்பளத்தை ஏற்றுகிறார். தோல்வி அடையும் போது அவர் சம்பளத்தைக் குறைப்பதில்லை..

ஆனால் இயக்குநர் தான் பாதிக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரோடு அந்த படத்தின் விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

‘பொன்னியின் செல்வன் ‘ மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் கூட ஆந்திராவில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார்.

இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தினால் தான் இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.. இங்கு இருப்பவர்கள் ஆந்திராவில் சென்று தீபம் ஏற்ற வேண்டுமா..?

அதேபோல பெரிய நடிகர்கள் நடித்தால்தான் திரையரங்குகளுக்குக் கூட்டம் வரும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் கடந்த 3 நாட்களாக ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. சிறிய படமாக பெரிய அளவில் பிரபலம் இல்லாத இயக்குநர் அவரே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள ‘லவ் டுடே’ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப படம் இருப்பதை தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் மூலம் காணமுடிகிறது. நல்ல படங்களைக் கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு நிச்சயம் வருவார்கள்.. அதற்கு பெரிய நடிகர்கள் தான் வேண்டும் என்கிற அவசியமில்லை” என்று கூறினார்.

More Articles
Follows