வித்தியாசமான டிசைனில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

sivakarthikeyan rd raja24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இரண்டு படங்களையும், நிவின்பாலி நடிக்கவுள்ள ஒரு படத்தையும் தயாரிக்கிறது.

எஸ்.கே. (சிவகார்த்திகேயன்) நடிக்கவுள்ள ஒரு படத்தை மோகன்ராஜாவும், மற்றொரு படத்தை பொன்ராமும் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தின் சூட்டிங் பற்றிய தகவலை வித்தியாசமாக சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை வருகிற 11-11-2016 தேதி தொடங்க உள்ளனர்.

இந்த டிசைனில் இப்படத்தில் பணியாற்ற உள்ள சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, அனிருத், நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், ரோகினி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

 

Overall Rating : Not available

Latest Post