தன் சம்பளத்தை நா. முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan given his salary to Na Muthukumar familyநடிகர், தயாரிப்பாளர், பாடகர் என வலம் வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக கோலமாவு கோகிலா படத்திற்காக பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார்.

நயன்தாரா நாயகியாக நடித்த இப்படத்தை லைக்கா தயாரிக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் கல்யாண வயசு என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இப்பாடலில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பார் யோகி பாபு.

இந்த பாடல் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிரபலமானது.

ஆனால் இந்த பாடலுக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதையும் வாங்கவில்லையாம்.

தனக்கு கொடுக்க நினைக்கும் தொகையை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுக்க சொல்லிவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் நடித்த முதல் படத்தில் நா.முத்துக்குமார் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan given his salary to Na Muthukumar family

Overall Rating : Not available

Latest Post