விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fans upset with Hero movie flop result சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடீயோஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்ட அளவில் வெளியிட்டது.

ரஜினியின் பேட்ட படத்துடன் இந்த படம் மோதியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படமும் இந்த வருடத்தின் வெற்றிப் பட வரிசையில் இணைந்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இதன் நிறுவனர் ராஜேஷ் கூறும்போது..

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் எப்படி அமைந்ததோ அதுபோல சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹீரோ படம் அமையும் என கூறியிருந்தார்.

ஆனால் படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வெறும் அறிவுரையாக மட்டுமே உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sivakarthikeyan fans upset with Hero movie flop result

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

எங்களை மதிக்காத நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம்.. -திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie lossகோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.

உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் தரப்பில், ‘சம்பளம் பெற்று நடிப்பவர்களிடம், இழப்பீடு கேட்பது சரியல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது.. ”மாவட்ட ஆட்சியருக்கே, 1 லட்சம் தான் சம்பளம். நடிகர்களோ, கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எங்கள் தீர்மானத்தை மதிக்காத நடிகர்கள் படங்களை திரையிட மாட்டோம்,” என கூறியுள்ளார்.

Distributor Tirupur Subramaniam talk about Top hero movie loss

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaஇந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள் இல்லாமல் தமிழர்கள் ஒரு நாளையும் கடந்திருக்க முடியாது.

அன்னக்கிளியில் தொடங்கி இதுவரை 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

தற்போதும் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் மீண்டும் போலீஸாக அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaபடத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான

மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‘ஈட்டி’ படத்தில் அதர்வா நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அதே தயாரிப்பாளருடன் இணைகிறார்.

இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

ரவீந்த்ர மாதவா என்பவர் டைரக்டு செய்கிறார். இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகியோருடன் உதவி டைரக்டராக இருந்தவராம்.

அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியும் இருக்கிறார்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் நாயகி இன்னும் தேர்வாகவில்லை.

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

பாலியல் தொல்லைக்கும் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் தரலாம்… சின்மயி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu chinmayiதனியார் பல்கலைக்கழகம் SRM சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை டிசம்பர் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது கடந்த ஆண்டே நிறைய பாலியல் புகார் அளித்திருந்தார் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி.

இந்த நிலையில் டாக்டர் பட்டம் வழங்கவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை தனது டுவிட்டர் பகிர்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் கொடுக்க போகிறாராம்.

துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை வழங்கப்பட்டுள்ளது.

கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத் திறனுக்காக வழங்கப்படுகிறது.

இத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் SRM பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார்.

“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Aishwarya Duttas PUBG movie updatesபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் புகழின் உச்சிக்கே போய்விடலாம் என அதில் கலந்துக் கொண்ட பலரும் நினைத்தனர்.

அதாவது, பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தனர்.

இதுவரை தமிழகத்தில் பிக்பாஸ் 3 சீசன்கள் நடைபெற்றுள்ளது.

ஆனால் இதில் கலந்துக் கொண்ட எவருக்கும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

யாருக்குமே கிடைக்காத புகழ் ஓவியாவுக்கு கிடைத்தது. ஆனால் அவருக்கே சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவிலை.

இந்த நிலையில், நடந்து முடிந்த 3 ஆவது சீசனில், கலந்து கொண்ட போட்டியாளர்களில், சாக்‌ஷி அகர்வால், ரேஷ்மா, அபிராமி, மீரா மிதுன் ஆகியோர் மாடல் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் தோல்வியை தழுவியது.

சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார்.

2ஆவது சீசனில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களில் யாஷிகா ஆனந்த், மகத், ரித்விகா ஆகியோர் மட்டுமே ஓரிரு படங்களில் நடித்து வருகின்றனர்.

இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கு 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் PUBG என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் தந்த பிக் லாஸ் இல் இருந்து மீண்டு வருவாரா ஐஸ்வர்யா தத்தா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss fame Aishwarya Duttas PUBG movie updates

More Articles
Follows