நயன்தாரா-எமி-ஹன்சிகா போதும்; விலகி ஓடும் உதயநிதி

நயன்தாரா-எமி-ஹன்சிகா போதும்; விலகி ஓடும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udayanithiஉதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க தொடங்கிய காலங்களில் அவரது நாயகிகளாக ஹன்சிகா, நயன்தாரா, எமி ஆகியோர் நடித்தனர்.

இந்த படங்களை அவரே தயாரித்திருந்தார்.

தற்போது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆனால் தற்போது முன்னணி நடிகைகள் இல்லாமல் புதுமுக நடிகைகளையே தன் ஜோடியாக்கி வருகிறார்.

எழில் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கௌரவ் இயக்கும் படத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

தளபதி பிரபு இயக்கும் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார்.

இந்த 3 படங்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ‘நெருப்புடா’…; கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த்

மீண்டும் ‘நெருப்புடா’…; கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kabali neruppudaரஜினிகாந்த் இதுவரை 160 படங்கள் வரை நடித்துள்ளார்.

இதில் மனதில் உறுதி வேண்டும், பெத்தராயுடு, ரா ஒன் உள்ளிட்ட ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நெடு நாட்களுக்கு பின்னர், மீண்டும் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் நெருப்புடா படத்தில் அவர் நடிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை தொடர்ந்து தற்போது நெருப்புடா படத்தில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிசாக கிடைத்த பணத்தை வாரி வழங்கிய கீர்த்தி சுரேஷ்

பரிசாக கிடைத்த பணத்தை வாரி வழங்கிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

அரவிந்த் சாமி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் டெலிபோன் மூலம் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி முடிவில் கீர்த்தி சுரேஷ் பரிசுகளை வென்றார்.

அப்போது அவர் வென்ற பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார்.

அண்மையில் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

விஜய்யின் ‘பைரவா’ டைட்டில் சீக்ரெட்ஸ்…

விஜய்யின் ‘பைரவா’ டைட்டில் சீக்ரெட்ஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் 60 படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் பைரவா என்ற பெயரில் வெளியானது.

இது வெளியானது முதல், இந்த தலைப்பு குறித்த விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

மேலும் இதில் ஒளிந்துள்ள சீக்ரெட்ஸ் தகவல்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர் இளைய தளபதி ரசிகர்கள்.

இந்த தலைப்பில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து மதம் தொடர்பான அடையாள குறியீடுகள் ஒளிந்துள்ளன.

இந்த சொல்லுக்கு தமிழில் காக்கும் கடவுள் என்றும் சமஸ்கிருதத்தில் ‘பயம்கொள்ள வைப்பவர்’ என்ற அர்த்தம்.

சிவபெருமானின் திரிசூலம் டிசைன் பை எழுத்தில் அமைந்துள்ளது.

மேலும் கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளது போன்று உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் ஆலுமா டோலுமா; ஆட ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

மீண்டும் ஆலுமா டோலுமா; ஆட ரெடியாகும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith aaluma dolumaசிவா இயக்கிய வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் கடந்த 10 மாதங்களாக படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலை இன்றும் நாம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அனிருத் இசையமைத்த இப்பாடல் பட்டி முதல் சிட்டி வரை ஹிட்டாகியது.

இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இதே அஜித்-சிவா-அனிருத்-கல்யாண் கூட்டணி மீண்டும் அதே போன்ற பாடலுக்கு இணையவிருக்கிறதாம்.

சிவா இயக்கும் தல 57 படத்தில்தான் இப்பாடல் இடம்பெறுகிறது.

சூப்பர் ஸ்டார் இடத்தில் சத்யராஜ்; ஜோடியானார் அமலாபால்

சூப்பர் ஸ்டார் இடத்தில் சத்யராஜ்; ஜோடியானார் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulஅம்மா கணக்கு, வட சென்னை படங்களை தொடர்ந்து தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி வருகிறார் அமலாபால்.

தற்போது முருகவேல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லைலா ஓ லைலா என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

தமிழ் ரீமேக்கில் சத்யராஜ் நடிக்க, அமலா பாலே இங்கும் நடிக்கிறார்.

பிசினஸ்மேன் மற்றும் உளவுத்துறை ஏஜெண்டாக என இரு வேடங்களில் சத்யராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க ஜோஷி இயக்கவுள்ளார்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

More Articles
Follows