விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.

இதில் அதிதி சங்கர், சூரி, மனோஜ் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்க யுவன் இணையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன் அழகுல’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் – அதிதி ஷங்கர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி பாடினார். ஆனால், அதிதி குரலில் தற்போது இப்பாடல் வெளியானதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு ஷங்கர் மகள் அதிதியைப் பாட வைத்துவிட்டார்கள் என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், ராஜலட்சுமி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

“இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றி பாட வைத்திருக்கலாம்.

விருமன் இசை விழாவில் கூட அதிதி பாடியது நன்றாகவே இருந்தது.” என ராஜலட்சுமி விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

விருமன்

Singer Rajalakshmi opens up about Viruman song controversy

Boycott LaalSinghChaddha : தூங்கவே முடியல… வருத்தம் தெரிவித்தார் அமீர்கான்

Boycott LaalSinghChaddha : தூங்கவே முடியல… வருத்தம் தெரிவித்தார் அமீர்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7 வருடங்களுக்கு முன்பு ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது” என பேசியிருந்தார் நடிகர் அமீர்கான். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே ஒவ்வொரு முறையும் ஆமீர்கானின் படங்கள் ரிலீசாகும்போது BOYCOTT (MOVIE NAME) என்ற வாசகங்கள் டிரெண்ட் ஆகும்.

தற்போது நாளை அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘லால் சிங் சத்தா’ படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

அதன்படி சமூக வலைதளங்களில் boycott laal singh chaddha) ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இது குறித்து அமீர்கான் விளக்கம் அளித்து இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த பட ப்ரமோஷனில்…

”நான் யாரையாவது, காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன்.

இந்தப் படத்தில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும்’.்

நான் தூங்கி 2 நாட்கள் ஆகிவிட்டது. நான் காமெடிக்காக சொல்லவில்லை.

என்னால் தூங்க முடியல.. நான் லால் சிங் சத்தா படத்தை பற்றியே சிந்திக்கிறேன்.

ஆகஸ்ட் 11-க்கு பிறகுதான் என்னால் தூங்க முடியும் என நினைக்கிறேன” என்றார்.

லால் சிங் சத்தா

Bollywood Super Star Aamir Khan issues apology ahead of ‘Laal Singh Chaddha’ release

சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி.. அரசியல் பிரச்சாரம் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

எனவே தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார்.

ஒரு பக்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பட பணிகளில் பிஸியாக உள்ளார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதன் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படத்தில் உதயநிதி நடிக்கிறார் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

ஆனால் இயக்குனர் யார்.? இசையமைப்பாளர் யார்.? நாயகி யார்.? என்பதை அறிவிக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்குவதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே சசிகுமார் நிகிலா வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடித்த ‘கிடாரி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் முருகேசன்

Kidaari director to direct Udhayanidhi Stalin’s next film

ரஜினி சொல்வது அவருக்கும் புரியல.; சீரியஸா எடுத்துக்க வேணாம்.. – வைகோ

ரஜினி சொல்வது அவருக்கும் புரியல.; சீரியஸா எடுத்துக்க வேணாம்.. – வைகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவையில் உள்ள ம.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர் நடிகர் ரஜினி குறித்து பேசும்போது…

தமிழக கவர்னரை சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவர் சொல்வது அவருக்கும் புரியவில்லை.. யாருக்கும் புரியவில்லை.

ஒரு நாள் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.

அதற்காக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார். உறுப்பினர்களை சேர்த்தார்.

பின்னர் இனி அரசியலுக்கு வர மாட்டேன் என்றார்.

கவர்னரை சந்தித்தார். அரசியல் பேசினேன் என்கிறார். இதனால் ரஜினி பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.”

இவ்வாறு வைகோ கூறினார்.

Vaiko on Rajini meeting with Governor

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன் புரோமோ வெளியானது

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் அடுத்த சீசன் புரோமோ வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உணவு முறை உடை என அனைத்தும் மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்பட்டாலும் எல்லா மாநில மக்களுக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’.

இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த ஐந்து சீசன்களையும் இவர் தான் தொகுத்து வழங்கினார்.

அதுபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

தெலுங்கில் கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தற்போது 6வது சீசனையும் வழங்க உள்ளார்.

அதற்கான பிரமோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஆனால் தமிழில் எப்போது பிக் பாஸ் தொடங்கும் என்பது தெரியவில்லை.

இதற்கான காரணம் என்னவென்றால்.. தற்போது பட தயாரிப்பிலும் நடிக்க உள்ள படங்களிலும் கமல் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்ஜுனா

Actor Nagarjuna unveils Bigg Boss Telugu 6 promo

ராஜு முருகனுடன் ஒரு படம்.. மீண்டும் லோகேஷுடன் ஒரு படம்.; கன்ஃபார்ம் செய்த கார்த்தி

ராஜு முருகனுடன் ஒரு படம்.. மீண்டும் லோகேஷுடன் ஒரு படம்.; கன்ஃபார்ம் செய்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் மலேசியாவில் ப்ரோமோஷன் செய்த பட குழுவினர் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அதன்பின்னர் நேற்று கேரளா சென்று அங்கு பிரமோஷன் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் கார்த்தியிடம் சில கேள்விகளை கேட்டனர்.

கார்த்தி பதிலளிக்கும் போது…

“விரைவில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்.

விஜய் 67 படத்தை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் வரும்போது ‘கைதி 2’ படம் தொடங்கும் எனவும் தெரிவித்தார் கார்த்தி.

கார்த்தி

Karthi confirmed his project with Lokesh Kanagaraj and Raju Murugan

More Articles
Follows