ஜீவா-நிக்கி ஜோடிக்கு கீ கொடுத்து உதவும் சிம்பு

ஜீவா-நிக்கி ஜோடிக்கு கீ கொடுத்து உதவும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kee movie stillsசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கி வரும் படம் கீ.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்ட்டரை இன்று இரவு 8 மணிக்கு சிம்பு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சிம்புவின் மன்மத(ன்) ரகசியம்

மீண்டும் சிம்புவின் மன்மத(ன்) ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuதன் புதிய படத்தின் அறிவிப்பையும் அப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் எனவும் ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார் சிம்பு.

புதிய முயற்சியாக பாடல்கள் மற்றும் இடைவேளை இல்லாமல் இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் யுவனின் பின்னணி இசையை முழுவதுமாக முடித்துவிட்டு சூட்டிங்குக்கு செல்லவிருக்கிறோம் என்றார்.

ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும் படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணிபுரியவிருக்கிறார்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சிம்பு-யுவன்-ஆண்டனி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற மன்மதன் (2004) படத்தில் இணைந்திருந்தது.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Simbu coming back with Manmadhan team after 13 years

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யாவுடன் டூயட் பாடும் ஹீரோயின்

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யாவுடன் டூயட் பாடும் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakul preet singhதானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

இந்நிலையில் மெர்சல் படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திலும் ராகுல் பிரித்தி சிங்கே நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Vijay and Suriya going to romance with Rakul Preet singh

பெஃப்சி ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் ரஜினி-விஜய் பட சூட்டிங்

பெஃப்சி ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் ரஜினி-விஜய் பட சூட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI President RK Selvamani announced strike has been cancelledபெஃப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சம்பள பிரச்சினை எழுந்ததையடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.

மேலும் ரஜினியின் ‘காலா’, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

கடந்த 3 நாட்களாக பல்வேறு திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன.

ரஜினி சார் மற்றும் கமல் சார் போன்ற மூத்த கலைஞர்களும் எங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

எனவே இது சம்பந்தமாக தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து ஓர் நல்ல முடிவு காண வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.

மேலும் பல அமைப்புகளும், பல்வேறு துறையினரும் வேண்டுகோள் வைத்த அடிப்படையில் நாளை முதல் பணிக்குச் செல்வது என முடிவெடுத்திருக்கிறோம்.

முதலில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார்கள். நாளை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் மட்டுமே பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எந்தவித நிபந்தனையும் வைக்க விரும்பவில்லை.

எங்களை பிளவுப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி தன் படங்களில் பெப்சி தொழிலாளர்களும் அந்த அமைப்பை சாராத தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.” என்றார்.

எனவே நாளை முதல் நிறுத்திக் வைக்கப்பட்ட காலா, மெர்சல் பட படப்பிடிப்புகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

FEFSI President RK Selvamani announced strike has been cancelled

நான் பலசாலியானவள்; வைரலாகும் த்ரிஷாவின் பாக்ஸிங்

நான் பலசாலியானவள்; வைரலாகும் த்ரிஷாவின் பாக்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha Boxing video goes Viral13 வருடங்களை கடந்து இன்றும் தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் த்ரிஷா.

தற்போது, 96, ஹே ஜுட், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

அந்த வகையில், இவரின் பாக்சிங் பயிற்சி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார் த்ரிஷா.

மேலும், பாக்சிங்கை ‘my current love’ எனவும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘நீ என்னை அடிக்கும் படி கனவு கண்டால் கூட, விழிக்கும்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தான் எழுவாய்.. நான் அவ்வளவு பலசாலியானவள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Trisha Boxing video goes Viral

“If u even dream of beating me,u better wake up n apologise”-MA 

உலகளவில் விவேகம் டைட்டில் ட்ராக்; வியக்கும் விக்னேஷ் சிவன்

உலகளவில் விவேகம் டைட்டில் ட்ராக்; வியக்கும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Sivan praises Anirudh musical and Vivegam Title Trackஒரே நேரத்தில் அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இதில் சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இவர் விவேகம் படத்தின் டைட்டில் ட்ராக்கை கேட்டிருக்கிறாராம். அதுகுறித்த தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது….

விவேகம் டைட்டில் டிராக்கை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அனிருத் இசை உலகளவில் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

அனிருத், ராஜகுமாரி மற்றும் விவியன் டிவைன் ஆகியோர் இந்த டைட்டில் ட்ராக் குழுவினர் என தெரியவந்துள்ளது.

Director Vignesh Sivan praises Anirudh musical and Vivegam Title Track

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Was lucky to hear #VivegamTitleTrack Completely blown over! Trippin on it ! Truly international @anirudhofficial F*** Yenna sir

anirudh vignesh sivan

More Articles
Follows