பிப்ரவரியில் 2 படங்களுடன் களமிறங்கும் ஜீவா-நிக்கிகல்ராணி

Jiiva and Nikki Galraniஅறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ராஜேந்திர பிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கீ.

மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் மேற்கொண்டுள்ளார்.

142 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இதே மாத்த்தில் ஜீவா நடித்துள்ள மற்றொரு படமான கலகலப்பு 2 படம் வெளியாகவுள்ளது.

சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா உடன் ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பாக நடிகை குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post