ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடிக்கு கீ கொடுக்கும் கௌதம் மேனன்

ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடிக்கு கீ கொடுக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham menonபுதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு…’ என்ற சிங்கிள் பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிடவுள்ளார்.

இப்பாடலை நாளை நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு அவர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி அரசு ஆதரவுடன் உருவான சல்மான் கான் படம்

அபுதாபி அரசு ஆதரவுடன் உருவான சல்மான் கான் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tiger zinda hai movie stillsசல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம்.

படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர்.

இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார்.

இதைப்பற்றி இயக்குனர் அலி அபாஸ் கூறும் பொழுது,

படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக, நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம். படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினை தேர்வு செய்தோம்.

ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். குதிரை சாவரியில் நடக்கும் கடினமான சண்டை காட்சி மொராக்கோவில் படமாக்கப்பட்டது, அந்நாட்டு நிலப்பரப்பின் அமைப்பு படத்தின் காட்சிக்கு தேவையான விஷூவல்ஸை தந்தது.

ஹாலிவுட் படங்களான ட்ராய் மற்றும் மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட டிரெய்ண்ட் குதிரைகளும் கிடைத்தன.

‘ஸ்வாஹ் சே கரேங்கே சப்கா ஸ்வாகத்’ என்ற பாடலுக்கு கிரீஸ் நாட்டின் எழில்மிகு இடங்கள் பொருத்தமாயிருந்தது. அபுதாபி ஒரு பாலைவன நிலப்பரப்பை கொடுத்தது.

அபுதாபி அரசு எங்களுக்கு பெரும் ஆதரவை கொடுத்தது, புரொடக்ஷ்ன், இராணுவம் மற்றும் விமானப்படை போன்ற உதவிகள் அபுதாபி அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கிடைத்தது.

டில்லியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் இரண்டுக் காட்சிகளை படமாக்கினோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும் உள்ளது மற்றும் கதையின் திருப்புமுனையும் அதில் அடங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷ்ன் அதிரடி படமான டைகர் ஜிந்தா ஹே படத்தை உலகத்தரத்தில் உருவாக்க பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் பணிபுரிந்த குழுவினருடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளோம்.

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் திரில்லான அனுபவத்தை கொண்ட, சல்மான் கான் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.

முதலில் உழைப்பை முதலீடு செய்; கார்த்திக்கு சூர்யா அட்வைஸ்

முதலில் உழைப்பை முதலீடு செய்; கார்த்திக்கு சூர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and karthiவினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான படம் தீரன் அதிகாரம் ஒன்று.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றும் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசும்போது…

நான் எவ்வளவோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் என் முதல்படமான பருத்தி வீரன் படம் போன்று மற்ற படங்கள் இல்லையே என பலரும் சொல்கிறார்கள்.

முதல் படமே வெற்றிப் படமாக பலருக்கும் அமையாது. ஆனால் பல வருடங்கள் பலரும் அதையே சொன்னபோது வருத்தமாக இருந்தது.

தற்போது நீங்கள் நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்றால் அது தீரன் அதிகாரம் ஒன்று படம்தான் என சொல்கின்றனர். இது மகிழ்ச்சியை தந்துள்ளது.

என் அண்ணன் (சூர்யா) அடிக்கடி சொல்வார். பிக்சட் டெப்பாசிட் போல நம் உழைப்பை சேவிங் செய்துக் கொண்டே இருப்போம். அது பிற்காலத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்பார். அதையே நான் செய்து வருகிறேன்.

தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம்.

இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர்.

தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள்.

வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோதான் என்று கூறுவார். பயத்துலேயே நானே படிப்பேன்.

எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம்.

சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.” என்று பேசினார்.

8 முறை தேசியவிருது பெற்றவர் விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்தார்

8 முறை தேசியவிருது பெற்றவர் விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sreekar prasadமெர்சல் படத்தை அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் சூட்டிங்கை ஜனவரி 3ஆம் வாரத்தில் தொடங்கி 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மலையாளத்தில் பிரபலமான கிரிஷ் கங்காதரன் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும் படத்தின் எடிட்டராக 8 முறை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர் ஏற்கெனவே விஜய், முருகதாஸ் கூட்டணியின் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் தம்பி ஜெயம்ரவி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான் : மோகன்ராஜா

என் தம்பி ஜெயம்ரவி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான் : மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My brother Jayam Ravi acted in English movies says Mohan Raja to praise Tik Tik Tik movie

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வளர்ந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

இமான் இசையமைத்துள்ள இப்படம் இந்தியாவின் முதல் விண்வெளிப்படமாக உருவாகியுள்ளது.

ஹாலிவுட் படங்களின் லெவலுக்கு இந்த டிரைலர் உருவாகியுள்ளதால் இதன் டிரைலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ட்ரைலர் வெளியான இரண்டே நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களை இது பெற்றுள்ளது.

மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ட்ரைலரை லைக் செய்ய, வெறும் ஆயிரம் பேர் மட்டுமே டிஸ்லைக் செய்துள்ளனர்.

இதனிடையில் ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜ தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரைலரை பார்த்து பதிவிட்டுள்ளதாவது…

‘என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான். தம்பிடா’ என்று பதிவிட்டுள்ளார்.

My brother Jayam Ravi acted in English movies says Mohan Raja to praise Tik Tik Tik movie

Mohan Raja‏Verified account @jayam_mohanraja
Mohan Raja Retweeted Jayam Ravi
Yen Thambi English padathula nadichuttaannnnn Wowwwwww to the team .. Astonishing .., Thanks for setting the standards of our industry sooooooo high .. Love u Aarav Kutty #Thambida

 

என் ரசிகர்களுக்கு தீரன் போலீஸை பிடிக்கல..; கார்த்தி ஓபன் டாக்

என் ரசிகர்களுக்கு தீரன் போலீஸை பிடிக்கல..; கார்த்தி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My fans dont like Theeran police says Karthiவினோத் இயக்கத்தில் கார்த்தி-ரகுல் பிரித்தி சிங் நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கடந்த நவம்பர் 17ஆம் தேதி வெளியானது.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் இப்படம் தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நாயகி ரகுல் பிரித்தி சிங் தவிர மற்ற கலைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

இச்சந்திப்பில் கார்த்தி தன் பட அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது…

எனக்கு ரொமான்ஸ் வராது என பலரும் சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் ரகுல் பிரித்தியுடன் காதல் காட்சிகள் நன்றாக இருந்தது என்றார்கள்.

ஒரு 55 வயது மிக்கவர் என்னுடன் பேசும்போது வீட்டிற்கு போவேன். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்போன். ஆனால் வேலை காரணமாக என் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யவில்லை. இந்த படத்தை பார்த்தபோது மனதில் அது பட்டது என்றார்.

இதற்கு முன் சிறுத்தை படத்தில் நான் ரத்னவேல் பாண்டியன் என்ற போலீஸ் வேடத்தில் நடித்திருந்தேன். அது மாஸ் காட்டும் போலீஸ்.

எனவே என் ரசிகர்களுக்கு தீரன் போன்ற போலீஸை பிடிக்கவில்லை” என்றனர்.

My fans dont like Theeran police says Karthi

theeran movie success meet

More Articles
Follows