30 நாட்கள் டார்கெட்டில் வளரும் ஜீவாவின் ‘கீ‘

30 நாட்கள் டார்கெட்டில் வளரும் ஜீவாவின் ‘கீ‘

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Nikki Galrani starrer Kee movie updatesசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கி வரும் படம் கீ.

இதில் ஜீவா நாயகனாக நடிக்க, நிக்கி கல்ராணி மற்றும் அணைகா சோடி நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இசை விஷால் சந்திரசேகர்.

கடந்த மாதம் ஏப்ரல் 21 ஆம் தேதி சூட்டிங்கை தொடங்கி வருகிற மே 20 இல் சூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் டைரக்டர்.

சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்து வரும் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படம் இந்த நிறுவனத்தின் 10வது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Jiiva and Nikki Galrani starrer Kee movie updates

V சென்டிமெண்டை தக்க வைத்து வெற்றி பெறுவாரா தல.?

V சென்டிமெண்டை தக்க வைத்து வெற்றி பெறுவாரா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and his movies starts with V letterஅஜித் நடித்துள்ள விவேகம் பட டீசர் வருகிற மே 11ஆம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை சிவா இயக்கி வருகிறார்.

இதற்குமுன் அஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய இரு படங்களையும் இவரே இயக்கியிருந்தார்.

தொடர்ந்து இந்த கூட்டணி வி (V) என்ற செண்டிமென்ட் எழுத்தை குறிவைக்கிறது.

மேலும் இவர்களின் படம் தொடர்பாக டீசர், டிரைலர், பட ரிலீஸ் ஆகியவற்றை (வி) வியாழக்கிழமையே வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் அஜித் நடிப்பில் உருவான சில படங்கள் வி எழுத்தில் தொடங்கப்பட்டு வெற்றிப் பெற்றுள்ளன.

அது எந்தெந்த படங்கள் என்பதை பார்ப்போமோ?

அகத்தியன் இயக்கிய வான்மதி
எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய வில்லன் மற்றும் வரலாறு
சிவா இயக்கிய வீரம் மற்றும் வேதாளம்.

இந்த வரிசையில் விவேகம் படம் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganesh venkatramஅபியும் நானும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அதனைத் தொடர்ந்து கமலுடன் உன்னை போல் ஒருவன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது 7 நாட்கள், இணையத்தளம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன் பட வெற்றி விழா பார்ட்டியின் போது அஜித்தை சந்தித்த அனுபவம் பற்றி தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுபோன்ற சக்ஸஸ் பார்ட்டி எனக்கு புதுசு. சிறிது தயக்கம் இருந்தது. எனவே நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது யாரோ என் பின்னால் தட்டுவதை உணர்ந்தேன். திரும்பினால் அஜித் சார்.

என் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு, என்னிடம் கை குலுக்கு ஆரத்தழுவி, வெல்கம் டூ தமிழ் சினிமா” என்றாராம் அஜித்.

இதனை இப்போதும் ஒரு மலரும் நினைவாக கூறிவருகிறார் இந்த இணையதள நாயகன்.

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and jayam raviஇயக்குநர் விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் காட்டு வாசியான ஜெயம்ரவிக்கு வசனங்கள் கிடையாது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது முதலில் சூர்யா தான் இப்படத்தில் நடிக்கவிருந்தாராம்.

ஆனால் அப்போதுதான் 24 என்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருந்தார்.

உடனே அதுபோன்ற கதைக்களம் வேண்டாம் என்பதால்தான் மறுத்துவிட்டாராம்.

ஆனால் தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்கள் சந்திப்பேன் என்று தெரிவித்தாராம் இந்த சிங்கம்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal and Karthiநாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் கொண்ட அணியினர் நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான செயல்கள் செய்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ரஜினி, கமல் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து இந்த நடிகர் சங்க கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.

மேலும் நீதிபதிகள், ”நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

வடசென்னை-யிலிருந்து விஜய்சேதுபதி-அமலாபால் விலகல் குறித்து தனுஷ்

வடசென்னை-யிலிருந்து விஜய்சேதுபதி-அமலாபால் விலகல் குறித்து தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay sethupathiபவர் பாண்டி படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி மற்றும் அமலா பால் இருவரும் விலகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அமலாபால் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் விலகல் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதால், 3 மாதங்கள் வரை ‘வடசென்னை’ சூட்டிங்கை நிறுத்தினோம்.

இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டோம்.

ஒரு படம் தனக்கு என்ன தேவையோ அதை தேடிக்கொள்ளும். தானாகவே அமையும்.

யார் விலகினார்கள், யாரை இயக்குனர் வெற்றி மாறன் மாற்றினார் என்பதற்குள் போக வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

இப்போது படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush clarifies about Vijay Sethupathi and Amala Paul Call sheet issue in Vada Chennai movie

More Articles
Follows