தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ரசிகர்கள் இப்பாடலை பெரிதும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
ஆனால் அப்பாடல் இதுவரை படமாக்கவில்லை என்றும் அதற்கு சிம்பு ஒத்துழைக்க இல்லை எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.
சிம்புவுக்கு சம்பள பாக்கி உள்ளது எனவேதான் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என சிம்பு தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
எனவே சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாகி விட்டது.
இதற்கு சிம்பு ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது..
‘கௌதம் மேனன் நிதி நெருக்கடியில் இருந்த போது முதல் ஆளாக கால்ஷீட் கொடுத்தவர் சிம்புதான்.
ஆனால், அஜித்தின் என்னை அறிந்தால் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்றார் கௌதம்.
அதற்கும் சிம்பு விட்டுக் கொடுத்தார். ஆனால் அவர் தற்போது சிம்புவை பற்றி பேசியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளனர்.