A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சைக்கோ’ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. இதற்காக மத்திய தணிக்கை வாரியத்திற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் – அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம்’ மாயோன்’. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ‘மாயோன்’ படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

மாயோனுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sibiraj starrer Maayon gets “U” certificate

‘தீ இவன்’ படத்திற்காக அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக்

‘தீ இவன்’ படத்திற்காக அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில்” தீ இவன் ” நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்த பிறகு படத்தை பற்றி நவரச நாயகன் கார்த்திக் நம்மிடம் பகிர்ந்தவை….

ஜெயமுருகன் .T. M அவர்கள் ” தீ இவன் ” கதையை சொன்ன போதே கதையில் உள்ள ஆழத்தை நான் உணர்ந்தேன். தமிழ் கலாசாரத்தின் நமது வாழ்வியலை அழகாக வடிவமைத்து இருந்தார்.

அதேபோல் படப்பிடிப்பு சமயத்தில் எந்த காம்பர்மைஸ்சும் இல்லாமல் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கினார். கொரானாவின் நெருக்கடியான நேரத்திலும் அனைத்து தேவைகளையும் எனக்குமட்டுமல்ல அனைவருக்கும் செய்து கொடுத்து படப்பிடிடப்பை அழகாக நிறைவு செய்துள்ளார்.

நான் இப்படத்தின் டப்பிங் பேசியபோது, காட்சி அமைப்புகளையும் உறையாடல்களையும் பார்த்து ரொம்பவும் ரசித்தேன். கதையின் உணர்வுகளை சொல்லும் விதமான பாடல் வரிகள் என்னை நெகிழ வைத்தது.

ராதா ரவி அவர்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, அவர் அந்தக் காட்சியில் வாழ்ந்திருப்பதாகவே உணர்த்தியது.

அதோடு ஜான் விஜய்யின் சேட்டையும், சிங்கம்புலி, சரவணசக்தியோடு நான் நடித்த காமடிக்காட்சிகளும் மிக அழகாக படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டி மிக அழகாக உருவாகியிருக்கிறது. நான்கு சண்டைகாட்சிகளில் நான் நடித்துள்ளேன்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு படத்திற்கு பிறகு ஜெயமுருகன். T. M அவர்களுக்கு “தீ இவன் “படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

அதேபோல் எனக்கும் சிறு இடைவெளிக்கு பிறகு இப் படம் என் பட வரிசையில் தரமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Karthik fights without using body double in Thee Ivan

ஜன கண மன..; இந்தியனின் மனசாட்சியை தட்டிவிட வரும் விஜய் தேவரகொண்டா

ஜன கண மன..; இந்தியனின் மனசாட்சியை தட்டிவிட வரும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் “லைகர்” என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார்.

இதன் மூலம் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை நேற்று மார்ச் 28 நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இப்படத்திற்கு “ஜன கன மன” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக JGM.

ராணுவ வீரர்களின் வேலையையும், நாட்டிற்காக மேற்கொள்ளும் தியாகத்தையும் மையப்படுத்தி இப்படம் உருவாகுகிறது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுபோல போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் 2023ல் ஆகஸ்ட் 3ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெரிவித்தார்.

இந்தப் படம் அனைத்து இந்தியர்களின் மனதை தொடும் வகையில் இருக்கும்.

தன்னுடைய கதாபாத்திரம் இதுவரை தான் நடிக்காதது – இதற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புவதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

JGM படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத்.

இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில்…

“இந்த அற்புத திரைப்படமான JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

Vijay Deverakonda & Puri Jagannadh to collaborate again for JGM

.

வித்தியாசமான படத்தலைப்பில் பா. ரஞ்சித் உடன் இணைந்த தினேஷ் & ஊர்வசி

வித்தியாசமான படத்தலைப்பில் பா. ரஞ்சித் உடன் இணைந்த தினேஷ் & ஊர்வசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்
பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது.

சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம்
நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது.

விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது.

நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Pa Ranjith and Urvasi joins for a new film titled J Baby

பான் இந்தியா படமாக THALAIVAR 169..; இந்தியர்களை கவர மாஸ் டைட்டில் வைக்கும் நெல்சன்

பான் இந்தியா படமாக THALAIVAR 169..; இந்தியர்களை கவர மாஸ் டைட்டில் வைக்கும் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன நடித்த டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார் நெல்சன். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

தற்போது தன் 4வது படத்திலேயே ரஜினியுடன் இணைந்துள்ளார் நெல்ஸ்.

இதில் ரஜினியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராயிடமும் வடிவேலுவிடமும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 169-வது படத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

(ரஜினியின் பல படங்கள் பான் இந்தியா படமாக ஏற்கெனவே ரிலீசாகியுள்ளன.)

இந்த நிலையில் தலைவர் 169 படத்திற்கு எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.

அதன்படி 5 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம்., இந்த பட்டியலில் BOSS – பாஸ் என்ற பெயரும் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

BOSS டைட்டில் MASS தானே இருக்கு…

Director Nelson plans for mass title in Thalaivar 169

ஒரே ஒரு வார்த்தையால் விஜய் ரசிகர்களை குஷியாக்கிய ‘பீஸ்ட்’ டைரக்டரின் ட்வீட்

ஒரே ஒரு வார்த்தையால் விஜய் ரசிகர்களை குஷியாக்கிய ‘பீஸ்ட்’ டைரக்டரின் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

எனவே ‘பீஸ்ட்’ படம் டீசர் / ட்ரைலர் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் நெல்சன் தன் டவிட்டர் பக்கத்தில்…. *நாளை* என ட்வீட் செய்துள்ளார்.

இது நிச்சயம் டீசர் அல்லது ட்ரைலர் வெளியீட்டுக்கான அறிவிப்பாகவே இருக்கும் என நம்பலாம்.

இந்த அறிவிப்பு நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி 4 மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Director Nelson Dilip Kumar gives an update of Beast

More Articles
Follows