சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும்.

‘மாயோன்’ பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் ‘மாயோன்’ பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.

இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியாவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது.

பாடல் முழுவதும் பரவிய ஆன்மீக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு ‘மாயோன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் அதிகரித்துவிட்டது. படக்குழுவினர் ‘மேஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘ சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர்.

இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் ‘பகவான் கிருஷ்ணரின் ஆந்தம்’ என குறிப்பிட்டு இந்த பாடலையும் இணையத்தில் கொண்டாடினர்.

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் வெளியானபோது மக்களிடத்தில் வழக்கத்திற்கு மாறாக படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணர்ந்து நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தின் வெளியீட்டை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

The Screening Date of Maayon is announced

TRIP FACTORY சென்னை திறப்பு விழாவில் நடிகர் பிரசன்னா

TRIP FACTORY சென்னை திறப்பு விழாவில் நடிகர் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது.

இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் .

Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது.

கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.

இதை திரைப்பட நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார்.

Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. *JP* அவர்கள் கூறியதாவது.
எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது.

Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கும் .

சுற்றுப்பயணங்கள் மட்டும் இல்லாமல் வியாபார வளர்ச்சியின் ரீதியான பயணங்களையும் மிகச் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.

Trip Factory யின் சுற்றுலா package மற்ற சுற்றுலா நிறுவனங்களை விட மிகவும் குறைவானது குறிப்பிடத்தக்கது

வாடிக்கையாளர்களின் தேவையே எங்களின் சேவை..!

என்றென்றும் உங்களின் சேவையில் Trip Factory.
என்றென்றும் நன்றியுடன்
*JP*
(நிர்வாகஇயக்குநர்)
Trip Factory.

Address: No:44, Basement, Krishna Enclave, Gandhi Nagar,1st Main Road Adyar, Chennai-600020

Trip factory new branch launched by actor Prasanna

‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்டார் வடிவேலு

‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்டார் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.

இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

இந்த நூலை மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டார்.

தற்போது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

Actor vadivelu released director mari selvaraj new book

தலைவர் 169 அப்டேட் : விஜய் பட ரிசல்ட்டால் ரஜினி பட வாய்ப்பை இழக்கும் நெல்சன்..??

தலைவர் 169 அப்டேட் : விஜய் பட ரிசல்ட்டால் ரஜினி பட வாய்ப்பை இழக்கும் நெல்சன்..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி-யில் பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றிய நெல்சன் நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

டார்க் காமெடி திரில்லர் படமான இது ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார்.

அதுவும் சூப்பர் ஹிட்டடிக்க விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். இது சில விஜய் ரசிகர்களை கவர்ந்தாலும் நெகட்டிவ் ரிசல்ட்டால் சர்ச்சையானது.

பீஸ்ட் ரிலீசுக்கு முன்பே ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு வந்த விமர்சனங்களின் எதிரொலியால் நெல்சன் – ரஜினி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. நெல்சனிற்கு பதிலாக தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து நெல்சன் தன் ட்விட்டர் ப்ரொபைலில் தலைவர் 169 படத்தை சேர்த்துள்ளார்.

எனவே ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகிவிட்டது.

Rajinikanth to change the director for ‘Thalaivar 169’ ?

’மிஸ்டர் லோக்கல்’ பட நடிகரை மணமுடிக்கும் டிவி தொகுப்பாளினி

’மிஸ்டர் லோக்கல்’ பட நடிகரை மணமுடிக்கும் டிவி தொகுப்பாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயா டிவி் & காவேரி டிவி உள்ளிட்ட சில டிவி-களில் தொகுப்பாளினியாக இருந்தவர் கண்மணி.

தற்போது சன் டிவி-யில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் .

இவருக்கும் டிவி சீரியல் நடிகர் நவீன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

தற்போது ’இதயத்தை திருடாதே’ என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார் நவீன்..

தமிழில் ’பூலோகம்’ ’மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்களிலும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சன் டிவி தொகுப்பாளினி கண்மணி தனது திருமண நிச்சயதார்த்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எனவே நவீன்-கண்மணி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Navin Kumar to Marry News Presenter Kanmani Sekar

ஷிங் இன் த ரெயின்…. வைகைப் புயல் வடிவேலுவை ஆட்டம் போட வைத்த பிரபுதேவா

ஷிங் இன் த ரெயின்…. வைகைப் புயல் வடிவேலுவை ஆட்டம் போட வைத்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுதேவா – வடிவேலு இருவரும் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இவர்கள் இணைந்த படத்தின் கிளாஸிக் காமெடியான… ‘சிங் இன் த ரெயின்…’ என்ற பாடலை அந்த வீடியோவில் வடிவேலு பாடியிருந்தார்.

தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது.

AK-61-62-63 படங்களின் அப்டேட்.. அஜித்துடன் இணையும் நயன்தாரா & வடிவேலு

இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது.

தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்திய நடன மேதை நடிகர் இயக்குநர் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு படத்தை தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள் லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை லைகா புரடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

தயாரிப்பு பணிகளை லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் செய்து வருகிறார். ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத்தொகுப்பு- செல்வா RK,
கலை இயக்கம் – உமேஷ் J குமார்,
ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

Prabhu Deva Shares A Video Of Vadivelu Crooning ‘Sing In The Rain’

More Articles
Follows