மாயோனுக்கும் பக்ரீத் பண்டிகைக்கும் என்ன தொடர்பு தெரியுமா.?

மாயோனுக்கும் பக்ரீத் பண்டிகைக்கும் என்ன தொடர்பு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம், எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “மாயோன்” திரைப்படக்குழு
“பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களை கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பை தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

“மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு
ஒரு அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பை பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாயோன் படக்குழு.

மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை பறை சாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஒரு அதிரடி திரில்லராக மாயோன் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடதக்கது.

Do you know what is the connection between Maayon and Bakrid?

வீடு திரும்பினார் விக்ரம்.; ஆனால் சீயான் பேசும் அந்த வீடியோ ரொம்ப பழசாச்சே.!

வீடு திரும்பினார் விக்ரம்.; ஆனால் சீயான் பேசும் அந்த வீடியோ ரொம்ப பழசாச்சே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புகென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.

சினிமாவில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

மலையாளம் & தமிழ் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.

மேலும் பல பிரபல நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தில் தனது முழு திறமையும் காட்டி மக்கள் மனங்களை வென்றார்.

இந்த படத்திற்கு பின் பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விக்ரம்.

தில் தூள் சாமி ஜெமினி காசி என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வேடத்தில் அசத்தியிருந்தார் விக்ரம்.

அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர் விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

தற்போது இவரது மகன் துருவ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஓடிடியில் வெளியான மகான் படத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

தற்போது மணிரத்ன இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் விக்ரம். மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான கோபுரா திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

இந்த நிலையில் ஜூலை 9ம் தேதி இவருக்கு நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசவுகர்யத்தால் 2 நாட்களாக ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் விக்ரம்.

தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடு திரும்பியவுடன் விக்ரம் பேசுவதாக ஒரு வீடியோ வெளியானது. இதை சில நபர்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது அல்ல.. 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை இப்படி எடிட்டிங் செய்து பரப்பி வருகின்றனர்.

செய்திகளை தொடர்ந்து அறிந்துக் கொள்ள எங்களுடன் இணைப்பில் இருங்கள்..

Vikram returned home.; But that video of Chiyaan talking is very old.

‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ‘நானும் வருவேன்’ என தனுஷ் செல்வராகவன் முடிவு

‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ‘நானும் வருவேன்’ என தனுஷ் செல்வராகவன் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கொண்டேன் மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷ் மற்றும் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

இந்த இரு படங்களும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

எனவே இவர்கள் இணைந்து மீண்டும் பணியாற்றுவது எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென இரண்டு பட அறிவிப்புகள் வெளியானது.

ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ‘நானே வருவேன்’ படம் அறிவிப்பும் தான்.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிரபு, செல்வராகவன், இந்துஜா, யோகிபாபு, சுவீடவ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம் ஆகியோரும் நடித்துள்ளனர் .

விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதே நாளில் தான் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் வெளியாக உள்ளது.

அந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி ஐஸ்வர்யாராய் த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக ‘நானே ஒருவன்’ படம் வெளியாவது உறுதி என்றால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

எனவே நானே வருவேன் படம் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என நம்பலாம்.

Dhanush in Naane Varuven to clash with Ponniyin Selvan ?

சூர்யா பிறந்தநாளில் ‘வாடிவாசல்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுக்கும் பட குழு

சூர்யா பிறந்தநாளில் ‘வாடிவாசல்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுக்கும் பட குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் வெளியானது.

தற்போது சூரரை போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சூர்யா.

அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ‘வாடிவாசல்’ படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாடிவாசல்’ படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

மதுரை, திருநெல்வேலி, காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து காளை மாடுகளும் வரவைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

தற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த நிலையில் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த வீடியோ வாடிவாசலுக்காக நடைபெற்ற ஒத்திகை படப்பிடிப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Movie crew giving super update of ‘Vadivasal’ on Suriya’s birthday

பாக்யராஜின் சூப்பர் ஹிட்டான படத்தலைப்பில் இணையும் விதார்த் – விக்ராந்த்

பாக்யராஜின் சூப்பர் ஹிட்டான படத்தலைப்பில் இணையும் விதார்த் – விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடியும் வரை காத்திரு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி பேசிய ரவீந்திரன்…

“ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக ‘விடியும் வரை காத்திரு’ இருக்கும் என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறினார்.

“ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட், அவர்கள் வந்த கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு.

இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்,” என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

நடிகர்கள் தேர்வு பற்றி அவர் கூறுகையில்…

“சலீம் இந்த கதையை என்னிடம் சொல்லும்போது இந்த நடிகர்கள் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது.

விதார்த், விக்ராந்த் மற்றும் கார்த்திக் மூவருமே மிகவும் நேர்த்தியான கலைஞர்கள். சரியான கதையை தேர்வு செய்வதில் விதார்த் திறமைசாலி, விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர்.

நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன். இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் வருண்,” என்று தெரிவித்தார்.

படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவீந்திரன் மேலும் கூறினார்.

படத்தின் தலைப்பை பற்றி பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன்…

“பல வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விடியும் வரை காத்திரு’.

இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்,” என்றார்.

“ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப் படவுள்ளன.

முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த படத்திற்காக இயக்குநர் சலீம் பல விதமான புதிய யுக்திகளை கையாள உள்ளார் என்று ரவீந்திரன் தெரிவித்தார்.

‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சந்தோஷ் மேற்கொள்கிறார்.

மேலும் இசை – அஸ்வத், படத்தொகுப்பு – ஜெரோம் ஆலென், கலை – நர்மதா வேணி, ஆடை வடிவமைப்பு – மின்னி பாஸ்டின் ஆகியோர் கையாள்கின்றனர்.

அசோகன் ஜி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில் ஷாஜி சலீம் இயக்கவுள்ளார்.

*Libra Productions V C Ravindhran to bankroll ‘Vidiyum Varai Kaathiru’ directed by Saji Saleem and starring Viddharth, Vikranth, Karthik Kumar and Varun*

கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கிய பஹத் பாசிலின் ‘நிலை மறந்தவன்’ தமிழில் ரிலீஸ்

கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கிய பஹத் பாசிலின் ‘நிலை மறந்தவன்’ தமிழில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்து வரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகிறது.

ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.. படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

இயக்கம் ; அன்வர் ரஷீத்

இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; அமல் நீரத்

படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்

வசனம் ; சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்)

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

Fahadh Faasil’s Nilai Marandhavan gets release date

More Articles
Follows