சர்வதேச அங்கீகாரம்.; ஆனந்தத்தில் ‘மாயோன் 2’ பட பணிகளை ஆரம்பித்த அருண்மொழி

சர்வதேச அங்கீகாரம்.; ஆனந்தத்தில் ‘மாயோன் 2’ பட பணிகளை ஆரம்பித்த அருண்மொழி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனடாவில் நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்’ திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன், அதற்குரிய வர்த்தகமும், அங்கீகாரமும் கிடைக்கிறது.

அந்த வகையில் கனடாவில் உள்ள டொரன்டோ மாநகரில் செப்டம்பர் எட்டாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் இந்தியாவிலிருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட ‘மாயோன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

ஆங்கில மொழி பெயர்ப்புடன் இடம்பெற்ற இந்த திரைப்படத்தை பார்வையிட்ட நடுவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள், தொல் பொருள் ஆய்வு செய்து, தற்காலத்திற்கேற்ற வகையில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்த படத்தின் திரைக்கதையை வியந்து பாராட்டியதுடன், படம் நிறைவடைந்ததும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

‘மாயோன்’ திரைப்படம் தமிழில் வெளியாகி, ஐந்து வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பட குழுவினர் மேலும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்த தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசுகையில்…

” மாயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி அடைய செய்தது. தற்போது மாயோன் திரைப்படத்திற்கு ‘சிறந்த சர்வதேச திரைப்பட விருதினைப் பெற்றிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

தற்போது ‘மாயோன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த சர்வதேச விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது.

டொரன்டோ சர்வதேச திரைப்படவிழாவைத் தொடர்ந்து, ‘மாயோன்’ திரைப்படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் ‘மாயோன்’ தொடர்ந்து சர்வதேச அளவில் கவனமும் வரவேற்பும் பெறும்.”என்றார்.

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகி, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ படத்திற்கு சர்வதேச விழுது கிடைத்திருப்பது, தமிழ் திரை உலகுக்கு ஆரோக்கியமான விஷயம் என திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.

இதனிடையே பகவான் கிருஷ்ணனின் லீலைகளை மையப்படுத்தி, தெலுங்கில் தயாராகி, இந்தியில் வெளியிடப்பட்ட ‘கார்த்திகேயா 2’ படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ‘மாயோன்’
படத்தையும் இந்தியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Mayon 2’ movie working start on Arunmozhi

‘குழலி’ ரிலீஸ் அப்டேட் : ‘காக்கா முட்டை-யில் கலக்கிய விக்னேஷுக்கு ஜோடியான ஆரா’.

‘குழலி’ ரிலீஸ் அப்டேட் : ‘காக்கா முட்டை-யில் கலக்கிய விக்னேஷுக்கு ஜோடியான ஆரா’.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கத்தில் உருவான படம் ‘குழலி’.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார்

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது.

குழலி

இப்படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்றதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானது.

இந்த நிலையில் அடுத்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரா

Award Winning Film Kuzhali to release on September 23

#Aara #Vignesh
@Cherakalaioffl

#MukkuziFilms
@OorvasiJayaram

@iamKarthikNetha

@Music_UdhayDM

@editorthiyagu

@RIAZtheboss

@V4umedia_

@zeemusicsouth

‘நானே வருவேன்’ பட டீசரை தாறுமாறாக கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்

‘நானே வருவேன்’ பட டீசரை தாறுமாறாக கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான V. கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’.

இந்ததில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

நானே வருவேன்

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர், நேற்று மாலை 6.40 மணிக்கு வெளியானது.

மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்டாட்டத்துடன் மிகப் பிரமாண்டமாக ரோகிணி திரையரங்க வளாகத்தில் LED திரையில் பிரத்தியேகமாக காட்சியிடப்பட்டது.

நானே வருவேன்

இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

*நடிகர்கள்*

தனுஷ்
இந்துஜா
எல்லி அவரம்
‘இளைய திலகம்’ பிரபு
யோகி பாபு
ஹியா தவே
பிரணவ்
பிரபவ்
ஃபிராங்க்கிங்ஸ்டன்
சில்வென்ஸ்டன்
துளசி
சரவண சுப்பையா
ஷெல்லி N குமார்
மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன்

*தொழில்நுட்ப குழுவினர்*

இயக்குனர் : K செல்வராகவன்
தயாரிப்பு : கலைப்புலி S தாணு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பு : R K விஜய முருகன்
நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்
சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா
தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன்
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன்
ஆடை வடிவமைப்பு: காவியா ஸ்ரீ ராம்
DI : நாக் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர்
பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ்
ஸ்டில்ஸ் : தேனி முருகன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹமத், டைமண்ட் பாபு

டீசருக்கே இப்டின்னா.. தனுஷ் வெறியன்ஸ் ஆட்டம் Naane Varuven Teaser l Dhanush Selvaragavan Yuvan Thanu https://youtu.be/VTpt-Pz3Fgw

Enga Annan Local… சிம்புவை சீண்டும் தனுஷ் ரசிகர்கள் l Naane Varuven Teaser l Dhanush Selvaragavan Yuvan Thanu ? filmistreet ?
https://youtu.be/yAvoOKEXH_c

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி அறிவிப்பை 10000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெளியிட்டனர்.!

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி அறிவிப்பை 10000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெளியிட்டனர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக அரங்கில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரது இசைக்கென்று உலகெங்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

இந்த நிலையில் மிகப்பிரமாண்டமான இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார் ரஹ்மான்.

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துகிறது.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation chairman Dato Mohamed Yusoff அவர்களே 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிஃகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும்.

இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.

இரு மொழி நாயகர்கள் கூட்டணியில் மஹிந்திரா பிக்சர்ஸ் மகத்தான ஆரம்பம்

இரு மொழி நாயகர்கள் கூட்டணியில் மஹிந்திரா பிக்சர்ஸ் மகத்தான ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது.

இந்த நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது…

‘வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்’ என்றார்.

இதுகுறித்து சாய் கார்த்திக் கூறியதாவது..

‘புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன.

புதிய இயக்குனர் சின்னாவை பல OTT நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசைக்கு ஏற்ப இந்தப் படத்தை பெரிய படமாக உருவாக்குகிறோம்.

அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்’ என்றார்.

Mahindra pictures

யார் எதிரின்னே தெரியல.; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற பாக்யராஜ் பேச்சு

யார் எதிரின்னே தெரியல.; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற பாக்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இந்த தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செப்.14ல் நடைபெற்றது.

நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்ட இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும் இயக்குனருமான கே. பாக்கியராஜ் பதவி ஏற்று கொண்டார்.

இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.

தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது…

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

இந்த தேர்தல் மிக முக்கியமானது இதுவரை நடந்தது போராட்டம் இல்லை இனிமேல் தான் போராட்டம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாவது எதிரி யாரென்று தெரியும் ஆனால் இப்போது யாரெல்லாம் எதிரி என்பதே தெரியவில்லை.

இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எனக்கு கிடைக்கும் பாராட்டு எதிர் அணியினருக்கும் உரித்தானது. சங்கம் சிறக்க அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன்.

அளவோட பேசுபவர்கள் உலகம் பாராட்டும் அதனால் அளவோடு பேசுகிறேன். சாமி என்பது உனக்குள்ளே இருக்கும் மனசாட்சி தான் சாமி, அந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் தான். கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்களது கடமை, எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது எங்களது உரிமையை கேட்போம்.

நான் பெரிதாக எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை.. இருப்பினும் என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். இனி அவர்களுக்காக பாடுபடுவேன்.

எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணி தான். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன் என்றார்.

2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhagyaraj

More Articles
Follows