கிராபிக்ஸ் டிசைனர்களாக மாறும் சிபிராஜ்-நிகிலா விமல்

Sibiraj Nikhila Vimalசிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம் திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சிபிராஜ் தன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

இதில் நாயகியாக சசிகுமாரின் வெற்றிவேல் மற்றும் கிடாரி ஆகிய படங்களில் நடித்த, நிகிலா விமல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் V.Z துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றிய வினோத் இந்த திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்தை ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து நிகிலா கூறியதாவது…

“நான் முன்பு நடித்த படங்கள் மூலம் என்னை ஒரு கிராமத்து பெண்ணாக தான் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் முதல் முறையாக நகர கலாச்சாரத்தில் வாழ கூடிய பெண் கதாபாத்திரத்தில் என்னை அவர்கள் இந்த படம் மூலம் காண்பார்கள்.

ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷன் கலைஞர்களாக நானும், சிபிராஜும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றோம்.

சமூதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கின்றது” என்றார்.

காஷ்மீரிலும், அதனை தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இதன் சூட்டிங்கை நடத்தவிருக்கிறார்களாம்.

Sibiraj and Nikhila Vimal teams up for first time

Overall Rating : Not available

Related News

அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள்,…
...Read More
மலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா…
...Read More
ஒரு படத்தின் சூட்டிங்கே இறுதிக் கட்டத்தை…
...Read More

Latest Post