வறுமையில் வாடும் பளுதூக்கும் வீராங்கனைகள்; சாதிக்க துணையாக சசிகுமார்

sasikumarசேலத்தில் உள்ள அலுமினிய பேக்டரில் வேலை செய்பவர் கண்ணன். இவருக்கு பத்மாவதி (21), நந்தினி (18), அபிராமி (16) என்று 3 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் மூவருமே பளு தூக்கும் போட்களில் கலந்துகொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆனால் ஒருவர் தினமும் 10 முட்டை மற்றும் சத்தான உணவுகள் சாப்பிடவேண்டும் என இவர்களது பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

வறுமையின் காரணமாக அது இயலாமல் போகவே, இவர்கள் தற்போது பால் விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இதனையறிந்த நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது-..

மூவரும் இனி என் சகோதரிகள். அவர்களின் செலவுகளை நானே ஏற்கிறேன். பண உதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்களுக்கு உதவ விரும்புவோர்… 84286 47850

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

மலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா…
...Read More
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம்…
...Read More
ரேனிகுண்டா பட இயக்குநர் பன்னீர் செல்வம்…
...Read More

Latest Post