சிபிராஜ்-நட்ராஜ் தலைமையில் வாஸ்து மீன்-ரோல்ஸ் ராய்ஸ் மோதல்

sibi raj and natarajமணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, லிவிஸ்டன், மைம் கோபி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கட்டப்பாவ காணோம்’.

‘விண்ட் சைம்ஸ்’ மீடியா தயாரித்துள்ள இப்படத்தில் முதன்முறையாக வாஸ்து மீன் ஒன்றும் நடித்துள்ளது.

இம்மீனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில் நட்ராஜ் நடித்துள்ள போங்கு படமும் வெளியாகிறது.

இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரித்துள்ளனர்.

இதில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்க, முன்னாள் உலக அழகி ருஹிசிங் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தாஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதையாம்.

இப்படத்தின் முக்கிய பாத்திரமாக காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Rolls Royce car and Vaasthu Fish clash on december 30th 2016

Kattapava Kaanom and Bongu movies clash on dec 30th 2016

Overall Rating : Not available

Related News

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கட்டப்பாவ காணோம்…
...Read More
சூர்யாவின் சி-3 திரைப்படம் டிசம்பர் 16ஆம்…
...Read More
வருடத்திற்கு ஒரு படத்தை ஒரு ஹீரோ…
...Read More
மணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா…
...Read More

Latest Post