ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Gautam Menonஒரு படத்தின் சூட்டிங்கே இறுதிக் கட்டத்தை எட்டினாலும் படத்தின் பெயரை சிலர் அறிவிக்க மாட்டார்கள்.

ஆனால் படத்தின் தலைப்பு, டீசர் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட்டாலும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் பெயர் இதுவரை எதிலும் வெளியாகவில்லை.

இப்படம் தொடங்கப்படும் போது, வழக்கம்போல தன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று கவுதம் மேனன் நாயகனிடம் கூறினாராம்.

எனவேதான் தனுஷ்ம் நடிக்க ஒப்புக் கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் வேறொருவர்தான் இசையமைப்பாளர் என்று தெரிய வந்துள்ளது.

கிடாரி படத்தின் இசையமைப்பாளரான தர்புகா சிவாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

இவர் ‘ராஜதந்திரம்’ படத்தில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?

ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini vijay ajith2017 புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடித்த பைரவா பட ட்ரைலர் வெளியானது.

இது குறைந்த நாட்களில் 50 லட்சம் பார்வையாளர்கள், 2 லட்சம் லைக்ஸ்கள் பெற்று மாபெரும் சாதனையை யுடியூபில் பெற்று வருகிறது.

எனவே விஜய் ரசிகர்கள் இதை கொண்டாட்டி வருகின்றனர்.

மேலும் இச்சாதனைகளை முறியடிக்க வேண்டுமென்றால் அது சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும் என்கிறார்களாம்.

அப்படியென்றால் இது அஜித்திற்கான சவாலா? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ‘கபாலி’… சிம்பு-ஜி.வி. பிரகாஷுக்கு ‘பாட்ஷா’

சிவகார்த்திகேயனுக்கு ‘கபாலி’… சிம்பு-ஜி.வி. பிரகாஷுக்கு ‘பாட்ஷா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu GV Prakashசில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ வெளியானது.

இப்படத்தின் சில காட்சிகளில் கபாலி பேனரையும் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகன் என்பதையும் தெளிவாக காட்டியிருந்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சுமார் மூஞ்சி குமாரு..’ என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கானா வினோத் எழுதியுள்ள இப்பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இப்பாடலில் நான் பாட்ஷா போல் ஒரு டான் என்றும், நாங்கள் பாட்ஷா ரஜினியின் ரசிகன் என்றும் ஜி.வி. பிரகாஷ் ஆடிப்பாடுவதாக பாடல் காட்சிகள் அமைந்துள்ளது.

இதில் ரஜினியின் பாட்ஷா பேனர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அரசியலில் ரஜினி..? தலைமை ஏற்க அழைக்கும் ரசிகர்கள்

அரசியலில் ரஜினி..? தலைமை ஏற்க அழைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

அதுபோல் அவரது மேடை பேச்சு, வாய்ஸ் ஆகியவையும் பெரியளவில் ரீச் ஆகும்.

இதனால் ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தை ஆள வேண்டும் என நெடுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு ரஜினி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உயிர் பிழைத்து வந்தாலே போதும் என்று கூறி வந்தனர்.

லிங்கா, கபாலி படங்களின் வெளியீட்டின் போது ரசிகர்கள் அரசியல் பேச்சை எடுக்கவில்லை.

ஆனால் தற்போது, தலைவா தலைமையேற்க வா என்று ரஜினிகாந்தை அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக போஸ்டர் அடித்து தமிழகமெங்கும் ஒட்டி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

2016ல் நட்சத்திரங்களின் திருமணங்களும் விவாகரத்தும்

2016ல் நட்சத்திரங்களின் திருமணங்களும் விவாகரத்தும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Amala Paul Soundarya Ashwinஉங்கள் அபிமான சினிமா நட்சத்திரங்கள் யார்? யார்? கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பதை பார்ப்போம்.

நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் நிறுவனரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் காதல் திருமணம்

சூர்யாவின் 24 பட இயக்குனர் விக்ரம் குமார் காதல் திருமணம்

நடிகர் பாபி சிம்ஹா நடிகை ரேஸ்மி மேனன் காதல் திருமணம்

நடிகை பூஜா இலங்கையை சார்ந்த தொழிலதிபர் திருமணம் செய்தார்.

சோனாலி என்பவரை நடிகர் அஸ்வின் திருமணம் செய்துக்கொண்டார்.

முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை பிரிந்த திலிப், விவாகரத்து ஆன நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்தார்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி – இசையமைப்பாளர் சந்தோஷ் (நிச்சயத்தார்த்தம்) 2017 மார்ச் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

விவாகரத்துக்கள்…

இயக்குனர் விஜய் – நடகை அமலா பால்

சௌந்தர்யா ரஜினிகாந்த் – தொழிலதிபர் அஸ்வின்

கமல்ஹாசன்-கௌதமி பிரிவு (திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த தம்பதி இவர்கள்)

விஜய் டிவி விஜே ரம்யா அவரது கணவரை பிரிந்தார்.

நடிகை ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால் அவர் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

‘மாரியப்பன்’ கேரக்டரில் யார் நடிக்க வேண்டும்.?’ மாரியப்பன் தகவல்

‘மாரியப்பன்’ கேரக்டரில் யார் நடிக்க வேண்டும்.?’ மாரியப்பன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mariappan Thangaveluஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனைகள் படமாக உருவாகவுள்ளது.

மாரியப்பன் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயக்குகிறார்.

இப்படம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் மாரியப்பன் கூறியுள்ளதாவது…

‘என்னை போல் கிராமத்தில் உள்ள திறமையான இளைஞர்கள் இப்படத்தை பார்த்து, ஊக்குவிக்கப்பட்டு பதக்கம் பெற்றால் அதுதான் எனக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி.

என்னுடைய கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.

அதை டைரக்டர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் வசனம் எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows