கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை சரளா

கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை சரளா

kovai saralaதமிழ் சினிமாவில் காமெடி செய்ய, ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் நடிகைகளில் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் முக்கியமானவர் கோவை சரளா.

பல படங்களில் காமெடி வேடம் செய்திருந்தாலும், சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

தற்போது மீண்டும் ஒரு படத்தில்  நாயகியாக  நடிக்கவிருக்கிறாராம். (ஒருவேளை இரண்டாவது நாயகியோ?)

பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகன் சசிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடாரி இசையமைப்பாளர் தர்புகா சிவாவே இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இதில் சங்கிலி முருகனின் ஜோடியாக சரளா நடிப்பார் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘ஹீரோயின் அம்மாவை சைட் அடிக்க சொன்னார் டைரக்டர்’ – ரவிமரியா

‘ஹீரோயின் அம்மாவை சைட் அடிக்க சொன்னார் டைரக்டர்’ – ரவிமரியா

actor ravi mariaகாமெடி கலந்த வில்லன் வேடமா? கூப்பிடுங்கள் ரவிமரியாவை என்கிற அளவுக்கு முத்திரை பதித்து இருக்கிறார்.

தொடர் வெற்றி கனிகளை சுவைத்து வரும் இவரது நடிப்பில் நாளை பகிரி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படம் குறித்து ரவிமரியா தெரிவித்துள்ளதாவது….

‘’இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

இதில் எனக்கு கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன் தான் ஸ்பாட் போனேன்.

ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குனர்.

ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்.

இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கும். ஒரு பார் காட்சி எடுக்கும்போதே எல்லோரும் கைதட்டினார்கள்.

இந்த படத்துக்கு பகிரி என்று டைட்டில் வைத்தார் இயக்குனர். எங்கு படப்பிடிப்பு போனாலும் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் பகிரிக்கு விளக்கம் கேட்போம். எல்லோருமே முழிப்பார்கள்.

நம் தமிழ் மொழியின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பகிரி என்பதற்கு வாட்ஸ் அப் என்று அர்த்தம் என்பது படம் வந்தபின்பு எல்லோருமே அறிந்துகொள்வார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற தூய தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்’’.

இவ்வாறு தெரிவித்தார் ரவிமரியா

‘காவிரி பிரச்சினையை ரஜினி பேசி தீர்க்கலாம்’ – பார்த்திபன்

‘காவிரி பிரச்சினையை ரஜினி பேசி தீர்க்கலாம்’ – பார்த்திபன்

cauvery issue can be solved my rajinikanth says Parthiepanகாவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கு பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.

தற்போதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் வன்முறை நடந்து வருகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் நாளை தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி நெருங்கிய நண்பர். எனவே பிரதமரிடம் ரஜினி பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சொல்லலாம்’ என தெரிவித்துள்ளார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத் தலைப்பு வெளியானது.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத் தலைப்பு வெளியானது.

udayanithi raginaவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் எழில்.

இதில் இவரின் ஆஸ்தான் காமெடி நடிகர் சூரியும் நடிக்கிறார்.

படத்தின் நாயகியாக ரெஜினா நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

தன் ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி தயாரிக்கிறார்.

காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு சரவணன் இருக்க பயமேன் என பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் சுரபி

சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் சுரபி

suriya and surabhiஹரி இயக்கும் சிங்கம்-3 படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

அனிருத் இசையமைக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் சுரபி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பதிலடி கொடுக்க பாய்ந்து வரும் சிம்பு

பதிலடி கொடுக்க பாய்ந்து வரும் சிம்பு

actor simbuஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இவருடன் தமன்னா, ஸ்ரேயா நடித்து வருகின்றனர்.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால், ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு டீசரை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவின் பாடலை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த டீசர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

More Articles
Follows