அடுத்த வருஷம் திருமணம்; என்ன சொல்கிறார் ஸ்ருதிஹாசன்.?

அடுத்த வருஷம் திருமணம்; என்ன சொல்கிறார் ஸ்ருதிஹாசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruthihassan weddingதென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டிலும் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன்.

இவர் தற்போது தன் தந்தை கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் திருமணம் பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் 29 வயதான ஸ்ருதிக்கு அடுத்த வருடம் திருமணம் நடைபெறவுள்ளது. நடிகை அசினை போல இவரும் ஒரு தொழிலதிபரை மணமுடிக்க இருக்கிறார் என பதிவிட்டு இருந்தனர்.

அதற்கு…. ஹா…ஹா… ஓகே. அப்புறம்..? என்று பதிலளித்து இருக்கிறார் ஸ்ருதி.

கமல்-விஜய்க்கு பொங்கல்; அஜித்துக்கு புத்தாண்டு; ரஜினிக்கு தீபாவளி

கமல்-விஜய்க்கு பொங்கல்; அஜித்துக்கு புத்தாண்டு; ரஜினிக்கு தீபாவளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamal vijay ajith stillsசபாஷ் நாயுடு படத்தை இவ்வருட இறுதிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்தார் கமல்ஹாசன்.

ஆனால் அறுவை சிகிச்சைப் பின்னர் தற்போது ஓய்வில் இருப்பதால், இதன் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் தாமதமாகும் எனத் தெரிகிறது.

எனவே அடுத்த ஆண்டு (2017) பொங்கல் தினத்தில் சபாஷ் நாயுடு வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.

இத்துடன் பரதன் இயக்கத்தில் விஜய் 60 படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அஜித் 57 படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும், 2.0 படத்தை அடுத்த ஆண்டு (2017) தீபாவளிக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இதில் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமாரும் நடித்திருப்பதால், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளான தீபாவளியே சரியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

மீண்டும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார் ‘கபாலி’

மீண்டும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார் ‘கபாலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali posterகடந்த மாதம் ஜீலை 22ஆம் தேதி சினிமா ரசிகர்களாலும், திரையுலகினராலும் கபாலி தினமாகவே கொண்டாடப்பட்டது.

அன்றைய தினம் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இதற்கு அடுத்த வாரம் ஜீலை 29ஆம் தேதி கபாலி படம் மலேசியா நாட்டில் மலாய் மொழியில் வெளியானது.

அங்கும் வசூலில் பல சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது.

இந்நிலையில் மலாய் மொழியில் தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சீனா நாடுகளில் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி இப்படம் வெளியாகிறதாம்.

அஜித், தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்..?

அஜித், தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanபிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்தடுத்த படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

தனுஷ் நடித்த தொடரி படத்தை தயாரித்துள்ளது. செப்டம்பரில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

செப்டம்பரில் இணைய காத்திருக்கும் தனுஷ்-சிம்பு

செப்டம்பரில் இணைய காத்திருக்கும் தனுஷ்-சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanushசுதந்திர தின ஸ்பெஷலாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தனுஷின் தொடரி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இப்படத்தின் இறுதியான ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படமும் செப்டம்பரில் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப்பட்டவுடன் இதன் ரிலீஸ் தேதியும் உறுதியாகும் எனத் தெரிகிறது.

ஆகையால், செப்டம்பரில் சிம்பு-தனுஷ் ஆகிய இருவரது படங்களும் இணைந்தே வர வாய்ப்புள்ளது.

கபாலி கோட்-ஜோக்கர் கோட்… என்ன வித்தியாசம்.?

கபாலி கோட்-ஜோக்கர் கோட்… என்ன வித்தியாசம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joker movie stillsஎன்னங்க சார் உங்க சட்டம்..? ஜோக்கர் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

குக்கூ இயக்குனர் ராஜீமுருகன் இயக்கியுள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டி, காயத்ரி, மு,ராமசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஷான் ரோல்டன்.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கபாலி படத்தில் ஏழைகளின் உரிமைக்காக ரஜினி போராடுவார். அதில் சூப்பர் ஸ்டார் கோட் சூட் அணிந்திருப்பார்.

ஜோக்கர் படத்திலும் நாயகன் சோமு கோட் அணிந்துள்ளார். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டார்?

அது ‘சூப்பர் ஸ்டார் கோட். இது புவர் ஸ்டார் கோட்’ என ராஜீமுருகன் பதிலளித்தார்.

More Articles
Follows