சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை ‘கயல்’ ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

படத்தின் டிரெய்லர் ஜனவரி 11, 2023 நாளை வெளியாக உள்ள நிலையில், சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தை விரைவில் திரைக்கு வெளியிட தயாராக உள்ளது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனைப் பற்றி குறிப்பிட்டு நடிகர் சாந்தனு எழுதினார், “உங்களுடன் இந்த பயணத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா அருமையான பாடல்களுக்கு நன்றி… அனைவரும் அதைக் கேட்க காத்திருக்கிறேன்” என கூறி இருந்தார்.

Shanthnu’s ‘Raavana Kottam’ First look poster released

ஆந்திராவில் வாரிசு படத்தை பிரமோட் செய்ய வருகிறாரா விஜய்?

ஆந்திராவில் வாரிசு படத்தை பிரமோட் செய்ய வருகிறாரா விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பரபரப்பான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்த தளபதி விஜய் ஹைதராபாத் வருவார் என்று தில் ராஜு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தளபதி விஜய் ஹைதராபாத் வரவுள்ளார்.

ஜனவரி 11ம் தேதி படம் வெளியானால் கஷ்டமாக இருந்திருக்கும்.

இப்படம் ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதால், தெலுங்கு ப்ரோமோஷனுக்கு விஜய்யை அழைத்து வர பேசி வருகிறேன்,” என்றார்.

Will Vijay promote Varisu in Andhra?

துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு & அஜித் நடித்த துணிவு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த இரு படங்களுக்கும் டிக்கெட் விலை 3000 வரை விற்கப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜக பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள (Thunivu & Varisu) படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய். 1,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.

ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே, இந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.

பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில தி மு க அரசை கண்டிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும்.

நாராயணன் திருப்பதி.
Vice-President, Tamil Nadu BJP

thunivu – varisu ticket in rs.3000 sale upto

கருப்பு சிவப்பு கலர் நாத்திகம் அல்ல.. அது கடவுளின் கலர்.; அர்ஜுன் சம்பத் அதிரடி

கருப்பு சிவப்பு கலர் நாத்திகம் அல்ல.. அது கடவுளின் கலர்.; அர்ஜுன் சம்பத் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்..

“ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வணக்கம்.

இந்த படத்தின் டிரைலர் ஒரு வசனம்வருகிறது, பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என்று யார்? சொன்னது என்று. அதேபோல், இசையமைப்பாளர் பேசும் போது, பெண்கள் சபரிமலைக்கு போகலாம் என்று சொன்னார். உண்மை தான், சபரிமலை இந்தியாவின் புதிதமான மலை.

இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதமான இடம், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் புனிதமான இடம். அதுபோல், ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை புனிதமானது.

அந்த சபரிமலை புனிதத்தை பாதுகாப்பதற்காக, ஐயப்பன் வழிபாடு வெறும் வழிபாடு இல்லை. மற்ற வழிபாடு போல் இல்லை. இந்த வழிபாடு என்பது நம்மை நாம் ஐயப்பனாக மாறுவது. சபரிமலை சாஸ்தா தான் இந்த வழிபாடு, விரதம் அனைத்தையும் நமக்கு வகுத்து கொடுத்தது. மற்ற விரதம் போல் சாதாரண விரதம் இல்லை. உடல், மனம் என அனைத்தும் பக்குவமாக இருப்பதோடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, இறைவனிடம் சரணாகதியடைய வேண்டும். பக்தி இல்லாமல் இந்த உலகம் இல்லை.

நம்முடைய எந்த ஒரு காரியம் என்றாலும் இறைபக்தியோடு செய்தால் வெற்றி கிடைக்கும். திருக்குறளே பக்தியோடு தான் தொடங்கும். பெரியபுராணமும், கம்ப ராமாயணமும் கடவுள் வாழ்த்தோடு தான் ஆரம்பிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்ல கூடிய நாத்திகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நம்ம கடவுல்களை தான் அவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மற்ற மத கடவுல்களை அப்படி சொல்வதில்லை, அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு துவக்கி வைப்பார்கள், முடித்து வைப்பார்கள். அதனால் தான் ஐயப்பன் பார்த்தார்.

நாத்தீகம் பேசுபவர்கள் கருப்பை அவர்களுடைய வண்ணம் என்று சொல்கிறார்கள். அதை ஐயப்பன் பக்தி வண்ணமாக மாற்றி விட்டார். மாலை போடுபவர்கள் கருப்பு உடை அணிகிறார்கள், இப்போது அது ஐயப்பன் வண்ணமாக மாறிவிட்டது. அதுபோல் சிவப்பு வண்ணத்தை பார்த்தால் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியே என்று வணங்குகிறார்கள்.

33 வருடங்களுக்கு பிறகு ஐயப்பன் படம் வருகிறது. இதை மக்கள் கொண்டாட வேண்டும், ஐயப்பன் பக்தர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் இந்து சமயநிலைத்துறை அமைச்சருக்கு, அரசுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

எங்கேயோ இருக்கிற நாட்டுக்கு செல்ல பிற மதத்தினருக்கு நிதி உதவி செய்யும் அரசு, தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களில் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.

ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்படத்தின் டிரைலர் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஐயப்பனின் பெருமை உலகறிய செய்வதோடு, இந்து மதத்தின் பெருமையும் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு படக்குழுவினர் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தின் நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். மேலும், திருத்தணி முருகன் கோவிலில் படக்குழுவினருக்கு சிறப்பு அர்ச்சணை செய்யப்பட்ட பிரஷாதத்தை கோவில் குருக்கள் வழங்கினார்.

Red and Black colors became Gods Color says Arjun Sambath

கனவை துரத்தும் தில்லான மனிதனின் உண்மைக் கதை ‘தில் திலீப்’

கனவை துரத்தும் தில்லான மனிதனின் உண்மைக் கதை ‘தில் திலீப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தில் திலீப்

பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

பாடலாசிரியர் அகிலன் கங்காதரன் பாடல்கள் எழுத, பின்னணி பாடகர்களான அந்தோணி தாசன், பென்னி தயாள், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, எம் சி பாஸீ ஆகியோர் பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர்கள் சின்னையன் மற்றும் வெங்கடேஷ் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தில் திலீப்

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

‘ திரைப்படப் படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை தான் ‘தில் திலீப்’.

நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

தில் திலீப்

https://www.youtube.com/watch?v=kYK2BR9Zhso

vijay sethupathi released dil dileep movie poster

இஸ்லாமியர் – கிறிஸ்தவர் கடவுளை புகழ்வார்கள்.; சில தமிழர்கள் மட்டுமே கடவுளை மறுக்கின்றனர் – பேரரசு

இஸ்லாமியர் – கிறிஸ்தவர் கடவுளை புகழ்வார்கள்.; சில தமிழர்கள் மட்டுமே கடவுளை மறுக்கின்றனர் – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில்…

“பிரசாத் லேபில் நடைபெற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் கூட்டம் வரும், ஆனால் இன்று வந்திருக்கும் கூட்டத்தை போல் எந்த நிகழ்ச்சியிலும் நான் பார்த்ததில்லை.

அப்படி என்றால் பக்தி படங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்று பாருங்கள். சில மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் என் மதம் தான் பெரியது என்று சொல்வார்கள்.

வேறு சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை பெரிதாக பேசுவார்கள், பல மாநிலங்களில் இந்து கடவுகளை பெருமையாக பேசுவார்கள்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், தமிழகம் புன்னியபூமி. கடவுள்கள் நடமாடிய பூமி, இங்கு ஆன்மீகத்திற்கு எப்போதும் அதிகமான வரவேற்பு உண்டு.

33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்பன் பக்தி படமான ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போதே படம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. இதுபோன்ற ஆன்மீக படங்கள் அதிகமாக வர வேண்டும்.

அது கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து என எந்த மதத்தை சேர்ந்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பக்தி படங்கள் அதிகமாக வரண்டும். இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதேபோல், ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தையும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்க்க வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் சென்று படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இதுபோன்ற பக்தி படங்கள் அதிகமாக வரும், மக்கள் வாழ்க்கையும் வலம் பெறும்.” என்றார்.

Tamilnadu is spiritual state says Perarasu at Sri Sabari Ayyappan Audio launch

More Articles
Follows