சாந்தனு ஆனந்தி இணைந்த ‘இராவண கோட்டம்’ பட ரிலீஸ் அப்டேட்

சாந்தனு ஆனந்தி இணைந்த ‘இராவண கோட்டம்’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ‘கயல்’ நடிகை ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் இறுதியாக அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு உண்மையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இராவண கோட்டம்

Shanthnu’s Raavana Kottam to release May 12

OFFICIAL #AyalaanUpdate : 4500+ VFX சீன்ஸ்; பான் இந்தியா படமானது ‘அயலான்’

OFFICIAL #AyalaanUpdate : 4500+ VFX சீன்ஸ்; பான் இந்தியா படமானது ‘அயலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நாயகன் தாயகியாக நடித்து ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு ‘அயலான்’ பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்’ அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

“அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.

அயலான்

அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அயலான்

இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.

‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்!

உங்கள்,
KJR

Presenting you with a message from Space 👽

அயலான்

sivakarthikeyan’s ‘Ayalan’ 4500 plus VFX Scenes release

SHOCKING விஜய் – அஜித் ரசிகர்களே தேவலாம்.; பவன் கல்யாண் ரசிகரை கொலை செய்த பிரபாஸ் ரசிகர்

SHOCKING விஜய் – அஜித் ரசிகர்களே தேவலாம்.; பவன் கல்யாண் ரசிகரை கொலை செய்த பிரபாஸ் ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களில் முக்கியமானவர்கள்.

எனவே தான் தமிழ் & தெலுங்கில் தலா வருடத்திற்கு 200+ படங்கள் வரை தயாராகி வருகின்றன.

அந்த அளவிற்கு நடிகர்கள் மீது ரசிகர்களின் மோகம் இருக்கிறது. மேலும் ரசிகர்கள் அடிக்கடி தங்கள் நடிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.

விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் அடிக்கடி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதே நிலைதான் தெலுங்கு சினிமாவிலும் நீடிக்கிறது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நடிகர் பிரபாஸை அவதூறு செய்துஉள்ளூர் பவன் கல்யான் ரசிகர்.

ஒரு கட்டத்தில் இருவரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.

இதனையடுத்து கோபத்தில் பவன் கல்யாண் ரசிகரை கொலை செய்த பிரபாஸ் ரசிகர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது

இந்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சண்டைகளை தடுக்க சம்பந்தப்பட்ட நடிகர்கள் இனியாவது குரல் கொடுத்தால் தான் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தல – தளபதி குரல் கொடுப்பார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.?!

Prabhas fan kills Powerstar Pawan Kalyan fan

நயன்தாரா வீட்டு சமையலறையில்…. அன்பால் தானா சேர்ந்த பிரியாணி..!

நயன்தாரா வீட்டு சமையலறையில்…. அன்பால் தானா சேர்ந்த பிரியாணி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார. நடிகை நயன்தாரா.

இந்த தம்பதியர் கடந்த 2022 ஆம் வருடம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

தற்போது 75 வது படத்தை நெருங்கி இருக்கும் நயன்தாரா அந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

விரைவில் முதன்முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அப்போது தனக்கு இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்து வந்த பிரியாணி & இதர ஐட்டங்களை படம் பிடித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இத்துடன் “அன்பால் தானா சேர்ந்த பிரியாணி..” என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

Ramzan briyani at Nayantara Kitchen

ஒரே படம்தான் ரிலீஸ்.. அரை டஜன் படங்களில் கமிட்டான சந்தோஷ் சரவணன்.; இது கதையல்ல நிஜம்.!

ஒரே படம்தான் ரிலீஸ்.. அரை டஜன் படங்களில் கமிட்டான சந்தோஷ் சரவணன்.; இது கதையல்ல நிஜம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தரமான சினிமா தனக்கான கலைஞர்களை அதுவே தானாக தேர்ந்தெடுக்கும் என கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

அது போல சினிமாவை நேசிப்பவர்களை சினிமா என்றுமே கைவிட்டது இல்லை, என்று ஜாம்பவான்கள் பலர் சொல்வதை நிஜமாக்கும் விதத்தில் பலர் சினிமாவில் வெற்றி பெற்று உயரங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், எந்தவித சினிமா பின்புலமும் இன்றி நம்பிக்கையோடு கோலிவுட்டில் நுழைந்த நடிகர் சந்தோஷ் சரவணன், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘இது கதையல்ல நிஜம்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணனின், நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக பாராட்டிய நிலையில், அவரை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறதாம்.

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கும் இளம் ஹீரோ சந்தோஷ் சரவணன், தனது சினிமா பயணம் குறித்து கூறுகையில்…

“சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோல்காரனூர் என்ற கிராமம் தான் என் ஊர். நான் என் கல்லூரி படிப்பை ஈரோடு மாவட்டத்தில் முடித்தேன். பொறியியல் பட்டதாரியான நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

சந்தோஷ் சரவணன்

எங்கள் ஊரில் ‘ மேச்சேரி வனபத்ரகாளி ’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த படத்தின் இயக்குநர் ஆனந்தன் சார் எனது அப்பாவின் நண்பர் என்பதால், அந்த படத்தில் என்னை முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. எனது குடும்பத்தினரும் என்னை சினிமாவில் பயணிக்க
அனுமதியளித்தார்கள் .

அப்பா, அம்மாவின் அனுமதியோடு வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். ஆனால், வேலை செய்துக்கொண்டே வாய்ப்பு தேடுவது கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது.

இதை என் அப்பாவிடம் சொன்னதும் அவர், “சினிமா துறையில் உனக்கு ஆர்வம் இருந்தால், வேலையை விட்டுவிட்டு அதில் முழுமூச்சாக ஈடுபடு” என்று சொல்லிவிட்டார். அதே சமயம், என் அப்பாவிடம் இரண்டு வருடங்கள் முயற்சிப்பேன், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திரும்பு வந்துவிடுவேன், என்று கூறிவிட்டு சென்னைக்கு வந்தேன்.

இனி சினிமா தான் என்று முடிவாகிவிட்டது, எனவே அதற்காக என்னை தயாரிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி பெற்றேன்.

ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டேன். தியேட்டர்லேப் ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பு பயிற்சியை முடிப்பதற்கு முன்பாகவே ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

சந்தோஷ் சரவணன்

குற்றாலத்தில் மூன்று நாட்கள் டெஸ்ட் ஷூட் என்று சொல்லி தான் அழைத்தார்கள். அப்போது எனக்கு ஹீரோ என்பது தெரியாது. இயக்குநர் அருவியில் குதிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு நீச்சல் கூட தெரியாது, ஆனால் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதால் குதித்துவிட்டேன், பல காயங்களும் அடைந்தேன் பிறகுதான் இயக்குநர் கண்ணன் சார் சொன்னார் நீ தான் இந்த படத்தின் ஹீரோ என்று.

’இது கதையல்ல நிஜம்’ படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். முக்கியமாக நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படம் முடிந்து பிரிவியூ போட்டார்கள். அதை பார்த்துவிட்டு தான் எனக்கு ‘கால் டாக்ஸி மற்றும் ‘கண்மணி பாப்பா’ பட வாய்ப்புகள் வந்தது.

அந்த படங்களை முடித்த உடன் ‘உதிர்’, ’ரவாளி’ படங்களின் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களும் முடிவடைந்து விட்டது, விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ‘நொடிகள் ஆயிரம்’ படத்தில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களின் கதைகளை கேட்டு வருகிறேன். நல்ல நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக தான் கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இதுவரை நான் நடித்த படங்கள் அனைவரிடத்திலும் பாராட்டு பெற்றது. இனியும் அப்படிப்பட்ட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இனி சினிமா தான் என் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அதனால் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சினிமாவுக்காக நான் உழைப்பேன்.

எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என் மீது வைக்கும் நம்பிக்கையை என்றுமே காப்பாற்றுவேன்.

எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. என் நடிப்பை பார்த்து வருகிறதா, இல்லை என் அதிர்ஷ்ட்டமா, இல்லை என் அப்பாவின் ஆசையா, என்னவென்று தெரியவில்லை. ஆனால், எப்போதும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ” என்றார்.

சந்தோஷ் சரவணன்

Upcoming Actor Santhosh Saravanan committed in 6 movies

‘மாவீரன்’ சிவகார்த்திகேயன் தியேட்டருக்கு வரும் நாளை அறிவித்தது படக்குழு

‘மாவீரன்’ சிவகார்த்திகேயன் தியேட்டருக்கு வரும் நாளை அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவான ‘மண்டேலா’ திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘மாவீரன்’.

இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இவருடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ‘மாவீரன்’ திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்து சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th 😊👍

https://t.co/P3yWVCvk2r https://t.co/TRzMmRrXHM

maaveeran movie released date augest 11

More Articles
Follows