விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது ‘மதயானைக் கூட்டம்’ புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் “இராவண கோட்டம்” என்ற படத்தை இயக்குகிறார்.

மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார்.

தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது, “வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு, இந்திய மண்ணின், குறிப்பாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது, அத்தகைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆவலோடு இருந்தேன். அது என் சொந்த ஆர்வத்தின் காரணமாக மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் மண் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி. இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களை நான் சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். உண்மையில் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையாக அது இருந்தது” என்றார்.

சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பதை பற்றி அவர் கூறும்போது, “நாயகனை தேர்ந்தெடுக்கும்போது தனிப்பட்ட இமேஜ் உடைய ஒரு நட்சத்திர நடிகரை நடிக்க வைக்க விரும்பவில்லை, மாறாக மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இது குறித்து கூறும்போது, “மதயானைக் கூட்டம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். நகரத்து பையனாக இருந்து, கிராமத்து பையனாக தோற்றம் உட்பட அனைத்திலும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். இராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். அப்பாவிதனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் நாயகியினுடையது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

சாரே கொல மாஸ்; கொலைகாரன் ட்ரைலர் சாதனை.; ஏப்.29ல் ரிலீஸ் அப்டேட்

சாரே கொல மாஸ்; கொலைகாரன் ட்ரைலர் சாதனை.; ஏப்.29ல் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kolaigaran trailer records in Youtube Release date announcement on 29th April 2019விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் என இரண்டு ஹீரோக்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’.

ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

தியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, முகேஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை போப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பெற்றுள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது. இதுவரை சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) பேர் இதனை பார்த்துள்ளனர்.

இதனால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ரீலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நாளை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Kolaigaran trailer records in Youtube Release date announcement on 29th April 2019

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்றிய தமிழக அரசு.?

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்றிய தமிழக அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Government action against Tamil cinema Producers councilதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக உள்ளார் நடிகர் விஷால்.

இவரின் தலைமையை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

எதிரணியில் உள்ள டி.சிவா, ஏஎல். அழகப்பன், சுரேஷ் காமாட்சி, எஸ்வி. சேகர் உள்ளிட்டோர் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டும் போட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார்.

அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என்றும் புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Government action against Tamil cinema Producers council

அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும் கார்த்தி.; அப்பாவாக சத்யராஜ்

அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும் கார்த்தி.; அப்பாவாக சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika Sathyaraj and Karthis film with Jeethu Joseph starts rollingகமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்.

இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் கார்த்தியின் அண்ணி என்பது தங்களுக்கு தெரிந்த ஒன்றுதானே.

இவர்களின் தந்தையாக சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

வில்லனாக மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இன்று ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

வயாகாம் 18 என்ற நிறுவனம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்தை தயாரிக்கிறது.

Jyothika Sathyaraj and Karthis film with Jeethu Joseph starts rolling

karthi jothika and sathyaraj

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam will be telecasted on Sun tv on Ajith Birthday2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம் அஜித்தின் ‘விஸ்வாசம்’.

இயக்குனர் சிவா இயக்கிய இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது. நயன்தாரா நாயகியாக நடிக்க, இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளியது.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்லைட் உரிமையை வாங்கியிருக்கும் சன் டிவி நிறுவனம் ‘விஸ்வாசம்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த அறிவிப்பால் தல ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Viswasam will be telecasted on Sun tv on Ajith Birthday

விஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.? உள்ளே படிங்க

விஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.? உள்ளே படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Laila released rare movie click with Vijay goes viralவிக்ரம், அஜித், சூர்யா, பிரசாந்த் ஆகியோருடன் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.

இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இந்நிலையில் இவர் விஜய்யுடன் ஜோடியாக போட்டோவை வெளியிட்டு ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என கமெண்ட் அடித்திருந்தார்.

இது என்ன திரைப்படம்? என சவாலும் விட்டிருந்தார்.

விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே? அப்புறம் எப்படி என பலர் கன்ப்யூஸ் ஆனார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் சரியாக கண்டு பிடித்தனர்.

விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக படத்தில் காதலை போற்றும் வகையில் தன் இதயத்தில் ஒருத்திக்கே இடம் என டயலாக் பேசியிருப்பார் விஜய். இப்படம் விஜய் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர்தான் உன்னை நினைத்து படத்தில் கமிட் ஆனார்.

இந்த படத்தில் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மணப்பதாக கதை இருந்தது.

எனவே, பூவே உனக்காக ஏற்படுத்திய தாக்கத்தை உடனே மாற்றக்கூடாது என விஜய் அப்போது முடிவெடுத்தாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Actress Laila released rare movie click with Vijay goes viral

More Articles
Follows