‘இராவண கோட்டம்’ இசை விழாவில் குஷ்பூ – மீனா.; பட ரிலீஸ் அப்டேட் இதோ..

‘இராவண கோட்டம்’ இசை விழாவில் குஷ்பூ – மீனா.; பட ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை ‘கயல்’ ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

‘இராவண கோட்டம்’ படம் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றியது என்று கூறப்படுகிறது

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ படத்தை மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி அன்று துபாயில் நடைபெற்றது.

இதில் பாக்யராஜ், நாசர், பிரசன்னா, சுந்தர் சி, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், மீனா, குஷ்பு, யுவன் சங்கர் ராஜா மற்றும் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.

Shantanu’s ‘Raavan Kottam’ is release in may 12

மோகன் ஜீ இயக்கிய ‘பகாசூரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…

மோகன் ஜீ இயக்கிய ‘பகாசூரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ல் ‘பகாசூரன்’ படம் வெளியானது

இதில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், கே ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் கூல் சுரேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இது அவரின் நூறாவது படமாக அமைந்தது.

தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச்சை இயக்குனர் மோகனுக்கு தயாரிப்பாளர் கௌதம் வழங்கினார்.

இந்நிலையில் வரும் மார்ச் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘பகாசூரன்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Here is the OTT release date of Mohan G’s ‘Bakasuran’

கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராம் சரண். இவர் நடிக்க வருவதற்கு முன்பே பிரபலம் தான்.

ஏனென்றால் இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு…’ என்ற பாடல் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட்டர் வீராட் கோலி பயோபிக்கில் தனக்கு நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“வீராட் கோலி கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவர் ஊக்கமளிக்கும் நபர். மேலும் நானும் அவரைப் போலவே இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார் ராம்சரண்.

RRR actor wants to act in Virat Kohli biopic

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு தன் காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

சில மாதங்களாகவே குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இது இவரின் 75வது படமாக உருவாகியுள்ளது.

இதில் நயன்தாரா உடன் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைகின்றனர்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் மீண்டும் இணைகின்றனர்.

காமெடியன் ரெடின் கிங்ஸ்லியும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் & டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்..

ஷாருக்கான் உடன் ‘ஜவான்’ & ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’ ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Nayanthara 75 movie updates here

படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

படப்பிடிப்புக்கு குதிரையுடன் ரெடியான ஷங்கர்.; எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ குழு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை மீண்டும் சேணத்தில் வைத்திருக்கும் பயணம் RC15 நோக்கி” என்று எழுதி இருந்தார்.

A journey that has me back to back in the saddle! Towards #RC15
https://t.co/spv0c18y9R

Director Shankar back on the sets of ‘RC15’

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

மாஸ்டர் நடிகரை இயக்கும் மிஷ்கின் ; முழு விவரம் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதியை நடிக்க வைக்கும் தனது அடுத்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளை மிஷ்கின் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் படத்தைப் பற்றி நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம், இப்போது இந்த ஆண்டு மே முதல் வாரத்தில் தயாரிப்பாளர், இதர நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையா மற்றும் பூர்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Director Mysskin’s next film with Master actor

More Articles
Follows