இராவண கோட்டத்திற்காக இரத்தம் சிந்திய நடிகர் சஞ்சய்

இராவண கோட்டத்திற்காக இரத்தம் சிந்திய நடிகர் சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசியதாவது..

மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப்படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார்.

கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சஞ்சய் பேசியதாவது…

எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.

இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம்,.

இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் நர்மதா பேசியதாவது…

எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றி, இது மிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

Actor Sanjay shed his blood for Raavana Kottam

கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட சூட்டிங் அப்டேட்

கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.

இப்படத்தை இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நதியா நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மே 1 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

மேலும், ‘எல்.ஜி.எம்’ படத்தின் வெளியீட்டுத் திட்டத்தை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni’s ‘LGM’ movie shooting wrapped

PS2 Box Office Update : கோடிகளை குவிக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’

PS2 Box Office Update : கோடிகளை குவிக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ரூ.200 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2′ box office collected more than Rs.200 cr in 4 days

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு 2’ சூட்டிங் எப்போது ? வெளிவந்த அதிகார பூர்வ தகவல்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு 2’ சூட்டிங் எப்போது ? வெளிவந்த அதிகார பூர்வ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெந்து தணிந்தது காடு சிறந்த கதையம்சம் கொண்ட கேங்ஸ்டர் படம், செப்டம்பர் 2022 இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது.

VTK இன் தொடர்ச்சியை உருவாக்க GVM திட்டமிட்டுள்ளார் என்பதும், தயாரிப்பாளர் ஏற்கனவே முதல் பாகத்தில் அதற்கான முன்னுரையை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறுகையில், “கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் திரைக்கதையில் பணிபுரிந்து வருகிறார் என்றும் ஜிவிஎம் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

When will Simbu’s ‘Vendhu Thanindhathu Kaadu 2’ begin? – Producer opens up

இளையராஜா குடும்ப இசைக்கலைஞர் மரணம்.; இசையமைப்பாளர் தீனா இரங்கல்

இளையராஜா குடும்ப இசைக்கலைஞர் மரணம்.; இசையமைப்பாளர் தீனா இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தை இசை குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இளையராஜாவின் வாரிசுகள் அவரது மகன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி உள்ளிட்ட பலரும் இசை துறையில் பயணித்து வருகின்றனர்.

அது போல இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் ஆவார்.

இவரது மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் கலைத்துறையில் பயணித்து வருகின்றனர். இதில் நடிகர் பிரேம்ஜி சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதே போல இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனும் ஒரு இசையமைப்பாளர் தான். ஒரு காலகட்டத்தில் இவர்களை பாவலர் பிரதர்ஸ் என்றும் அழைப்பதும் உண்டு.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.

இவர் கடந்த 1973-ம் ஆண்டே மரணம் அடைந்தார்.

இவரது மகன் சிவராமன் என்ற பாவலர் சிவன். கிதார் இசைக்கலைஞரான இவர் இளையராஜா குழுவில் சில ஆண்டுகள் பயணித்து வந்தார்.

மேலும் ஓரிரு படங்களுக்கு சிவன் இசையமைத்து உள்ளார்.

புதுச்சேரியில் வசித்து வந்த சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சில மாதங்கள் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை காலமானார்.

இசையமைப்பாளர் தீனா தன் இரங்கல் பதிவில்…

இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் https://t.co/LJPl21hdKl

Ilayaraja family musician dies.; Music composer Dheena’s condolence message

வரலாற்றில் முதன்முறையாக போட்டோ சூட் நடத்தி விவாகரத்தை கொண்டாடிய நடிகை ஷாலினி

வரலாற்றில் முதன்முறையாக போட்டோ சூட் நடத்தி விவாகரத்தை கொண்டாடிய நடிகை ஷாலினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘முள்ளும் மலரும்’. முனீஷ்ராஜ், தர்ஷா குப்தா நடித்த இந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷாலினி.

இவர் சிறந்த டான்ஸ்ரும் கூட. மேலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் பங்கேற்றார்.

நடிகை ஷாலினிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த இல்லற வாழ்க்கை சில மாதங்கள் கூட நீடிக்க வில்லையாம்.

அதன்பின்னர் ஒரு ரசிகராக அறிமுகமான ரியாஸ் என்பவருடன் நடிகை ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டது. ரியாஸ் ஏற்கெனவே விவாகரத்து ஆனவராம்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து கொண்டனர். ஆனாலும் சில மாதங்களிலேயே இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்கு மற்ற பெண்களுடன் உறவு இருப்பதாகவும் ஷாலினி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் விவகாரத்து முடிவுக்கு வந்துவிட்டார்.

இது போன்ற விவகாரத்து சம்பவங்களை சப்தமில்லாமல் தான் பலரும் செய்வார்கள்.

ஆனால் முதன்முறையாக ஷாலினி வித்தியாசமாக தன் விவகாரத்தை பகிரங்கமாக போட்டோ ஷூட் நடத்தி அறிவித்துள்ளார்.

தன்னுடைய கணவர் படத்தை கிழித்து போடுவது போலவும் கையில் சரக்கு பாட்டில் வைத்திருப்பது போலவும் பல புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. இவர் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து குறித்து ஷாலினி கூறியதாவது…

“தவறான திருமணத்தை விட்டு விலகுவதும் நல்லது தான். உங்களது மகிழ்ச்சி தான் முக்கியம். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு தேவையான மாற்றத்தை செய்யுங்கள்.

விவாகரத்து ஒரு தோல்வி அல்ல. இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழி வகுத்தது. திருமணத்தை விட்டு விலகி தனிமையில் நிற்பதற்கு அதிக தைரியம் தேவை.

அதனால் வெளியில் இருக்கும் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை ஷாலினி.

வைரலாகும் ‘விவாகரத்து’ போட்டோ ஷுட்! | நடிகை Shalini செய்த காரியம் | serial actress shalini
https://www.youtube.com/shorts/oMmNvTqnNPU

Actress Shalini celebrated the divorce by holding a photo shoot

More Articles
Follows