மிஷ்கின் பாணியில் விஷால் பெர்மான்ஸ்; துப்பறிவாளனை பாராட்டும் ஷங்கர்

மிஷ்கின் பாணியில் விஷால் பெர்மான்ஸ்; துப்பறிவாளனை பாராட்டும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar praises Mysskin Vishal combo movie Thupparivaalanகடந்த செப்டம்பர் 14ஆம் தேதி துப்பறிவாளன் படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

மிஷ்கின் இயக்கிய இப்படத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் முதலானோர் நடித்திருந்தனர்.

நல்ல விமர்சனங்களை பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் இதன் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரித்து நடிப்பேன் என விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது… ‘‘மிஷ்கின் பாணியில் ரசிக்கும்படியான த்ரில்லர் படம் துப்பறிவாளன்.

விஷாலின் கேரக்டர் வடிவமைப்பும், பெர்ஃபார்மென்ஸும் அருமையாக இருந்தது.” என பதிவிட்டுள்ளார்.

Shankar praises Mysskin Vishal and Thupparivaalan team

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh

Thupparivalan-an engaging thriller with Mysskin’s unique style. Vishal’s characterization n performance is good. Cheers to the whole team

ரயில் பயணத்தில் ரவுடியிடம் கேட்ட கதையே ‘இமை’ படமானது

ரயில் பயணத்தில் ரவுடியிடம் கேட்ட கதையே ‘இமை’ படமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imai movie based on True story of Local donமுற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை ‘.

இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார்.

‘இமை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள், முன்னிலையில் பாடல்கள் வெளியிடப் பட்டன.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விஜய் கே. மோகன். நாயகன் சரிஷ், நாயகி அக்ஷயப்பிரியா, ஒளிப்பதிவாளர்வி,கே,பிரதீப்,இசையமைப்பாளர்கள் மிக்கு காவில்,ஆதிப், பாடலாசிரியர் சீர்காழி சிற்பி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய் கே. மோகன் பேசும் போது.

“நான் ரயிலில் பயணம் செய்த போது ஒருவர் என் எதிர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். ஊர் கோயமுத்தூர் என்றார்.

என்ன வேலை பார்க்கிறீர்கள் என்ற போது ரவுடியாக இருக்கிறேன் என்றார். அவர் ஒரு ரவுடி என்றதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவரிடம் சற்றுநேரம் பேசினேன்.

நல்ல கதை இருக்கும் போல் தோன்றியது. அவரது போன் நம்பரைக் கேட்டேன். கொடுத்தார். ஊர் வந்ததும் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் பேசிய போது நேரில் சந்தித்து பேசினேன். அவருக்கு ஒரு காதல் இருந்தது தெரிந்தது. அவரிடம் விரிவாகப் பேசினேன்.

அவரது கதையைப் படமாக எடுக்க விரும்புகிறேன் என்று அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார். அவரது கதையைத் திரைக்கதையாக மாற்றி மறுபடியும் கூறினேன். க்ளைமாக்ஸ் மாறியுள்ளதே என்றார்.
சினிமாவுக்காக மாற்றங்கள் செய்திருப்பதையும் சொன்னேன்.

அப்படி உருவான கதைதான் இமை. இப்படத்தில் நாயகனாக நடிக்க சரிஷ் கிடைத்தார் அவர் 15 ஆண்டுகளாக நடிக்கப் போராடி வருபவர்.

அவர் மூலம் தயாரிப்பாளர் கிடைத்தார். அவர் குஜராத்திக் காரர். எங்களை நம்பி தயாரிக்க முன் வந்தார். நாயகி அக்ஷயா, சில கன்னடப் படங்களில் நடித்தவர்.

இப்படி படக்குழு தாயராகி படம் முடித்து இன்று ஆடியோ வெளியீடு நடந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவுள்ளது.

எவ்வளவோ படங்கள் வரலாம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப் பட்டு இருப்பதால் எங்கள் படத்துக்கு கூடுதல் பலமும் நம்பிக்கையும் உள்ளன.” என்றார்

நாயகன் சரிஷ் பேசும் போது,

“எனக்கு நடிக்க ஆசை, கனவு, லட்சியம் எல்லாமும் இருந்தன. சரியான வாய்ப்பு தேடியபோது இயக்குநர் விஜய் கே. மோகன் சொன்ன கதை பிடித்து இருந்தது. ஒரு கனவுபோல படம் முடிந்து விட்டது. இதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அனைவருக்கும் பிடிக்கும் படமாக ‘இமை’ இருக்கும்.” என்றார்.

நாயகி அக்ஷயப்பிரியா பேசும்போது,

” தமிழில் இது எனக்கு முதல்படம்.நல்ல கதையம்சம் உள்ள படம் இது. இதில் எனக்கு முரட்டு சுபாவமும்,ரவுடித்தனமும் கொண்ட ரவுடியை துரத்தித்துரத்திக் காதலிக்கும் பெண் பாத்திரம்.

தமிழில்முதல் படவாய்ப்பு தான் இது என்றாலும், எனக்கு ஏதோ பிக்னிக் போய் வந்தது போல படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது..

படப்பிடிப்பில் எல்லாரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். படக்குழுவினர் என் சௌகரியம் முக்கியம் என்பதை உணர்ந்து நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி ” என்றார்.

பாடலாசிரியர் சீர்காழி சிற்பி பேசும்போது,

“நான் இதுவரை ‘மகான் கணக்கு’,’வனபத்ரகாளி’,’ஓநாய்கள் ஜாக்கிரதை’,’செம்பட்டை’, ‘கெத்து’ போன்ற 25 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன்.

‘கெத்து’ படத்தில் நான்எ ழுதிய ‘தில்லுமுல்லு பண்ணலை’ பாடல் சூப்பர் ஹிட். ‘இமை ‘படத்தில் நான் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

‘வால் முளச்ச பொண்ணு பிளேடு வச்ச கண்ணு ‘, ‘காதல் வந்தால்’, ‘ விழிகள் மூடும்போது ‘ என்று ஆரம்பிக்கும் இப்பாடல்கள் எல்லாமே நன்றாக வந்துள்ளன.

படமும் எல்லாரையும் கவரும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும்” என்றார்.

விழாவில் ஒளிப்பதிவாளர் வி,கே,பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிப், நடிகர் வெற்றிவேல் ஆகியோரும் பேசினர்.

Imai movie based on True story of Local don

imai audio launch stills

அஜித்துக்கு 100; விஜய்க்கு 101 கொடுத்த நிறுவனம் விக்ரமுக்கு 102 கொடுக்குமா?

அஜித்துக்கு 100; விஜய்க்கு 101 கொடுத்த நிறுவனம் விக்ரமுக்கு 102 கொடுக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram KV Anand teams up for Vijaya Productions 102 projectஎம்ஜிஆர், ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ்.

சில காலமாக படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த இந்நிறுவனம் மீண்டும் தன் தயாரிப்பு பணியை தொடங்கியது.

அதன்படி அஜித் நடித்த வீரம் படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை தன் 101வது படைப்பாக தயாரித்தது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

விஜயா புரொடக்ஷன்ஸின் 102வது படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Vikram KV Anand teams up for Vijaya Productions 102 project

மெர்சல் புரோமோசன்… தமிழகத்தை ஓவர்டேக் செய்யும் கேரளா

மெர்சல் புரோமோசன்… தமிழகத்தை ஓவர்டேக் செய்யும் கேரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala distributor Started Mersal promo in Kerala alreadyதமிழகத்தை தொடர்ந்து விஜய்க்கு கேரளாவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே அவரது படங்கள் நிறைய தியேட்டர்களில் கேரளாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் கேரள உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ. 7 கோடிக்கும் அதிகமான விலையில் பெற்றுள்ளது.

அதன்படி தற்போதே மெர்சல் படத்தின் புரமோசன் பணிகளை அந்த நிறுவனம் கேரளாவில் தொடங்கியுள்ளது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala distributor Started Mersal promo in Kerala already

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ்சிவன்

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Shivan celebrated his birthday with Nayantharaசிம்பு நடித்த போடா போடி, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

தற்போது சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே தன் பிறந்தநாளை இவரது நெருங்கிய தோழி நயன்தாராவுடன் நியூயார்க் நகரில் கொண்டாடி வருகிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Vignesh Shivan celebrated his birthday with Nayanthara

மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijay deviஜெயம் ரவி, சாயிஷா நடித்த ‘வனமகன்’ படத்தை தொடர்ந்து, சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்.

இதனையடுத்து மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்புதிய படத்துக்கான பூஜை நடைபெற்றது.

பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பே தேவி என்ற பிரபுதேவாவை இயக்கியிருந்தார் விஜய் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘யங் மங் சங்’, ‘குலேபகாவலி’, கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை பிரபுதேவா முடித்துவிட்டு விஜய் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

கார்த்தி, விஷால், சாயிஷா ஆகியோர் நடிப்பில் பிரபுதேவா இயக்கி, தயாரிப்பதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Again Prabudeva teams up with Vijay for new project

alvijayprabhudeva

More Articles
Follows