தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘நானே வருவேன்’. இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார்.

யுவன் இசையமைத்து வரும் இந்தப்பட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் முக்கிய வேடத்தில் செல்வராகவனும் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான அவரின் பிறந்தநாள் போஸ்டரில் அவரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

சாணிக் காயிதம், பீஸ்ட் படங்களில் செல்வராகவன் நடித்து வந்தாலும் தனது இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் ‘நானே வருவேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Selva Raghavan to act with Dhanush in his new film

‘அரபிக்குத்து’ பாடலுக்கு சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது இதுதான்..

‘அரபிக்குத்து’ பாடலுக்கு சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது இதுதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மார்ச் 7ஆம் தேதி ஒரு தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த விழாவில் பீஸ்ட் பட “அரபிக்குத்து பாடல் எழுதியதிற்கு விஜய் என்ன சொன்னார்? என கேட்கப்பட்டது.

அதற்கு சிவா கூறியதாவது…

“‘அரபிக்குத்து ப்ரோமோ வீடியோ ஷுட் செய்த சமயத்தில் விஜய் போன் செய்தார். “பாட்டு சூப்பர் பா. ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்றார்.

சார்.. உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார். அவர் விட்ட இடத்தை நாம சும்மா நிரப்ப வேண்டியது தான் என சொன்னேன்.. ‘அரபிக்குத்து’ பாட்டு அவருக்கு ரொம்ப பிடிச்சிட்டு” என சிவகார்த்திகேயன் மேடையில் தெரிவித்தார்.

Actor Sivakarthikeyan talks about Arabic Kuthu song

இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து தயாரித்த சூரரைப் போற்று 2020 மற்றும் ஜெய்பீம் 2021 ஆகிய படங்கள் பல எதிர்ப்புகளை மீறி தியேட்டர்களில் வெளியாகாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன் படம் உலகமெங்கும் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‛எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் பா.ம.கட்சியனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெய் பீம் படம் பலரின் பாராட்டுக்களை அள்ளினாலும் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பு உருவானது. அந்த படம் வெளியானபோதே பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் சூர்யா விளக்கம் மட்டுமே அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சூர்யா படம் திரையிடுவதில் பிரச்சினை உருவாகி உள்ளது.

Cuddalore PMK party oppose Suriya’s Etharkum Thunindhavan

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஜனவரியில் தன் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவானதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பிறகு தனுஷ் தன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவும் தன் அப்பா ரஜினியுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் இயக்கும் முஷாஃபிர் என்ற பாடல் வீடியோ பணியில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அவரின் ருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் இன்ஸ்டாவில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்… அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தன் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் நாய்களுடன் ரியூனியன் என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush social media post creates controversy

மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர் இயக்குனர் பாலா.

சேது, நான் கடவுள், நந்தா, பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட பல படைப்புகள் இவரது பெயரை இன்றளவும் சொல்லும்.

இவரது பட நாயர்கள் எப்படி காட்சிகளில் இருப்பார்களோ..? அப்படியே பாடல்களில் இருப்பார்கள். (ஆனால் மற்ற இயக்குனர்களின் பட பாடல்களில் நாயகன் நாயகி வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார்கள்.)

அப்படி ஒரு யதார்த்த வாழ்வியல் படைப்புகளை கொடுப்பத்தில் சிறந்தவர் இயக்குனர் பாலா.

நடிகர் விக்ரமுக்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்று தந்து இருக்கிறார் பாலா. மேலும் சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர்தான் என்றால் அது மிகையல்ல.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் தேனியை சேர்ந்த முத்துமலர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் பாலாவின் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்ட நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்கள் மனைவியை பிரிவதாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Bala and his wife Muthumalar get divorced after 18 years of togetherness

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது பல நடிகர்கள் டூப் கலைஞர்களையே பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஒரு சிலர் நடிகர்கள் தாங்கள் அந்த காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்.

இவர் பலமுறை ரிஸ்க் எடுத்து அடிப்பட்டு சிகிச்சைக்காக தன் உடலில் ஆப்பரேசன் செய்துள்ளார்.

இந்த நிலையில் வலிமை படத்திலும் ஒரு விபத்து ஏற்பட்டது.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பைக் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கும்போது அஜித் கீழே விழுந்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த காயங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காட்சிகளை உடனடியாக முடித்தும் கொடுத்தார் அஜித்.

தற்போது அஜித்துக்கு ஒரு டாக்டர் காயத்திற்கு மருந்து போட்டுவிடும் புகைப்படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

Ajith kumar’s doctor reveals he Was close to suffering paralysis, says the actor worries about his fans

More Articles
Follows