தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தம்பி நடிகர் தனுஷ்… அண்ணன் இயக்குனர் செல்வராகவன்.. இவர்கள் இணைந்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம்தான்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் இந்த கூட்டணியில் யுவன் இணைந்தால் அது பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.. எனவே இவர்களின் கூட்டணிக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றி வருகின்ற படம் தான் ‘நானே வருவேன்’.
தற்போது நானே தருவேன் அப்டேட் வழங்கியுள்ளார் செல்வராகவன்.
“யுவனுடன் ‘நானே’ வருவேன் பாடல்களை தற்போதுதான் முடித்தேன். இதை உங்களுடன் ஷேர் செய்யாமல் இருக்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என பதிவிட்டுள்ளார்.
இத்துடன் செல்வராகவன் யுவனுடன் எடுத்த ஒரு செஃல்பி போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
Selva Raghavan gives Dhanush starrer Naane Varuven film update