பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த பர்த்டே பாய் சிவகார்த்திகேயன்

Seema Raja first look released on Sivakarthikeyan birth dayவருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன் ஆகிய இரு படங்களையும் இந்த நிறுவனமே தயாரித்திருந்தது.

சிவகார்த்திகேயனின் 12வது படமாக உருவாகிவரும் இப்ப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.

இவர்களுடன் சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் நடிக்க, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் (பிப்ரவரி 17) முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு சீமராஜா என பெயரிட்டுள்ளனர்.

மேலும் இப்படம் இந்த 2018 வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்பதை அந்த பட போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

Seema Raja first look released on Sivakarthikeyan birth day

Overall Rating : Not available

Latest Post