சண்டக்கோழி 2 குழுவுக்கு தங்கத்தை பரிசளித்த விஷால்-கீர்த்தி-லிங்குசாமி

sandakozhi 2லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் `சண்டக்கோழி-2′.

விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார் என்பதை பார்த்தோம்.

அதைத் தொடர்ந்து பட நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோரும், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.

இது விஷாலின் 25-வது படமாக உருவாகி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய `செங்கரட்டான் பாறையில’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post