துப்பறிவாளன் படம் பார்த்தால் நீங்களும் விவசாயிகளுக்கு உதவலாம்

thupparivaalan stillsமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படம் இன்று (செப்டம்பர் 14) வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான பின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, ‘துப்பறிவாளன் ‘ படத்தின் திரையரங்க வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் 380க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அதில் எத்தனை காட்சிகள் திரையிடப்படவுள்ளதோ,அந்த காட்சிக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகள் நலனுக்கு கொடுக்கப்படவுள்ளது.

படம் பார்க்கும் ரசிகர்கள் இப்படியும் விவசாயிகளுக்கு உதவலாம்.

Overall Rating : Not available

Related News

‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்துள்ள…
...Read More
துப்பறிவாளன்’ படத்தை இயக்கிய மிஷ்கின் தற்போது…
...Read More

Latest Post