விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி-சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி-சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaathu Vaakula Rendu Kaadhalகடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் வெற்றிபெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் அனிருத் இசையமைக்க விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணையும் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி.?

2016-ம் ஆண்டே இந்த படம் குறித்த தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

தற்போது செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் மற்றொரு நாயகியாக சமந்தாவும் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கவுள்ளதாம்.

கோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு !

கோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Jaiஅழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை அமைப்பில் நவீனம், உருவாக்கத்தில், தொழில்நுட்ப வல்லமை என அசத்தும் படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும், எல்லை தாண்டி பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையம் பரவிவிட்ட நவீன இந்தியாவில், ஒரு மொழியில் ஹிட்டடிக்கும் படங்களுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் ஹிந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நம் தென்னிந்திய படங்களில் தமிழ் படங்களுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் அங்கே இருந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழுவிற்கு தேன் தடவிய உற்சாக செய்தியாக தற்போது மாறியுள்ளது. இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் “ப்ரேக்கிங் நியூஸ்” படம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹிந்தியில் 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து ராகுல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது…

தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்திய நகரங்களில் கிடைக்கும் மிகப்பெரும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. வட இந்திய பகுதிகளில் வாழும் மக்கள், நம் தமிழ் படங்களை வெகுவாக ரசிக்கிறார்கள். நம் படங்களில் உள்ள நேர்த்தியும், உணர்வூப்பூர்வமிக்க உறவுகளின் கதைகளும், அவர்களை பெரிதளவில் ஈர்க்கின்றன. எங்கள் “ப்ரேக்கிங் நியூஸ்” படத்தில் இவை அனைத்தும் அச்சு பிசகாமல் அட்டகாசமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியனின் அற்புதமான உருவாக்கத்தில், “ப்ரேக்கிங் நியூஸ்” படம் உலக ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும், அதிரடியான திரைக்கதையில், வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை ஒரு திரில் பயணமாக மூளைக்கு வேலை தரும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளையும் சரியாக சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஜெய்யின் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிளிரும். பட வெளியீட்டிற்கு முன்பே வெற்றிக்கு அடையாளமாய் ஹிந்தி ரைட்ஸ் பெரும் விலைக்கு விற்கப்பட்டது படக்குழு அனைவருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரையும். தற்போது படப்பிடிப்பு முடிந்து, இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கவரும் படத்தை வருகிற 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் “ப்ரேக்கிங் நியூஸ்” தமிழில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர்ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. “வேதாளம்” புகழ் ராகுல் தேவ், “சுறா” புகழ் தேவ் கில் ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பானு ஶ்ரீ நாயகன் ஜெய் மனைவியாக, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞரகள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள். N M மகேஷ் கலை இயக்கம் செய்ய, ராதிகா நடன அமைப்பை செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநராக ஸ்டன்னர் சாம் பணியாற்ற, தேனி சீனு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

என் 20 வருச சினிமாவுல இதான் பெஸ்ட்; ஏர் போர்ட்டில் சூர்யா பேச்சு

என் 20 வருச சினிமாவுல இதான் பெஸ்ட்; ஏர் போர்ட்டில் சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya emotional speech at Soorarai Pottru Veyyon Silli song launchசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அசுரனை அடுத்து ஜிவி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார்.

இதில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

அண்மையில் ஊர்க்குருவி பருந்தாகுது என்ற முதல் பாடல் வெளியானது.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

இரண்டாவது பாடலான வெய்யோன் சில்லி ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தில் இன்று சென்னை விமான நிலையத்தில் வெளியானது.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்துள்ளனர்.

இதையடுத்து 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், நடிகர் சிவக்குமார், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சக்தி பிலிம் பேக்டர் சக்திவேல், 2டி ராஜசேகரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

இந்த நிகழ்வில் சூர்யா பேசியதாவது…

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 1% குறைவான மக்களே விமானத்தில் பறக்கும் வசதியை பெற்று இருந்தனர்.

இதனை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் மாற்றியமைத்து கிட்டதட்ட ஒரு ரூபாய் செலவில் விமானத்தில் பறக்க வைத்தார். அவரின் கதையை தான் படமாக்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் நடித்துள்ள மோகன் பாபுக்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவரின் ஒத்துழைப்பு மறக்க முடியாது.

அதுபோல் எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்த ஸ்பைஸ் ஜெட் அஜய் சிங் அவர்களுக்கும் நன்றி.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கிட்டதட்ட 10 வருட உழைப்பை இதற்காக அவர் செலவிட்டுள்ளார்.

அவரை தவிர யாராலும் இதுபோன்ற படத்தை எடுத்துவிட முடியாது.

ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா

என் 20 வருட சினிமா கேரியரில் இதுதான் பெஸ்ட் டைம் என்பேன்.

இந்த விமானத்தில் 70 குழந்தைகளை பறக்க (பயணிக்க) வைத்துள்ளோம். அவர்களுக்கு இதுதான் முதல் விமான பயணம். இதற்காக ஒரு சின்ன தேர்வு போல வைத்து அவர்களை தேர்வு செய்தோம்.

அவர்கள் எல்லாருக்கும் தங்களை விட தங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது ஒருவரை பயணிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

இந்த வெயிலும் இந்த செய்தியை பதிய வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என பேசினார் சூர்யா.

இந்நிகழ்வில் குறிப்பிட்ட முன்னணி பத்திரிகையாளர்கள் மற்றும் ட்விட்டர் குழுவினர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

Suriya emotional speech at Soorarai Pottru Veyyon Silli song launch

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anushka in silenceபீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைகளமாக அமைகிறது. இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து, அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத, காட்சிகளுக்கு ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசைக்கு கிரீஷ் கோவிந்தன் பொறுப்பேற்று இருக்கிறார்.

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வ பிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில், மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், 5 மொழிகளில் உருவாகியிருக்கும் திகில் படமான ‘சைலன்ஸ்’, உலகமெங்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்
மாதவன்
அனுஷ்கா ஷெட்டி
அஞ்சலி
ஷாலினி பாண்டே
மைக்கேல் மேட்சன்
சுப்பராஜூ,
ஸ்ரீநிவாஸ் அவசரளா
ஹன்டர் ஓ’ஹேரோ உள்ளிட்ட பலர்

தயாரிப்பு: பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத், கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட்
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா
ஒளிப்பதிவு: ஷானில் தியோ
படத்தொகுப்பு: பிரவீன் புடி
இசை: கோபி சுந்தர்
பின்னணி இசை: கிரீஷ் கோவிந்தன்
பாடல்கள்: கருணாகரன்
கலை: சாட் ராப்டர்
சண்டை பயிற்சி: அலெக்ஸ் டெர்சிஃப்
ஸ்டைலிஸ்ட்: நீரஜா கோனா
திரைக்கதை, வசனம்: மணி சியான்
கதை, இயக்கம்: ஹேமந்த் மதுக்கர்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கல்தா

சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கல்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaltha audio launchமலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது…

இந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.

நடிகர் ராதாரவி பேசியது….

“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும் நன்றி.

நடிகர் ராஜ சிம்மன் பேசியதாவது…

இந்தப்படத்தின் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். ஹரி உத்ரா நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நன்றி.

நடிகர் ஆண்டனி பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

நடிகை திவ்யா பேசியது….

இந்தப்படத்தில் இயக்குநர் இரவு பகலாக தூக்கமே இல்லாமல் உழைத்துள்ளார். படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய ஒரு படம் நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

இசையமைப்பாளர் ஜெய் கிரிஷ் பேசியதாவது….

இயக்குநர் இப்படத்தில் மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார். அவர் எனக்கு நண்பர். இயக்குநர் சமூக அக்கறை கொண்டவர். வைரமுத்து சார் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப்படம் மிக முக்கியமான பிரச்சனையை பற்றி பேசுகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் நன்றி.

நாயகி ஐரா பேசியது….

இந்தப்படத்தில் நடித்தது சந்தோஷம். ஒரு சமூக பிரச்சனையை படம் பேசுகிறது. இப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் நன்றி

நாயகன் சிவ நிஷாந்த் பேசியது…

இந்தப்படம் தான் என்னை தேர்ந்தெடுத்தது. இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இப்படியான படத்தில் நாயகனாக நடித்தது சந்தோஷம். எனக்கு நடனம் சுத்தமாக வராது. நடனம் வராத என்னை இப்படத்தில் நடனம் ஆட வைத்துள்ளார்கள். எல்லோரும் புதுமுகங்களாக இருந்தாலும் கடுமையாக உழைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். உண்மையான உழைப்பு ஜெயிக்கும். இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.

இயக்குநர் லெனின் பாரதி பேசியது….

கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும் நன்றி.

தயாரிப்பாளர் ரகுபதி பேசியது…

எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் ஹரி உத்ரா பேசியதாவது..

“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது…

நல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர்கள் – மலர்க்கொடி, ரகுபதி, செ.ஹரி உத்ரா,
ரா.உஷா

எழுத்து இயக்கம் – S.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு – B.வா

படத்தொகுப்பு – முத்து முனியசாமி

இசை – ஜெய் கிரிஷ்

பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர்

கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ்

சண்டை – கோட்டி

நடனம் – சுரேஷ் S

ஸ்டில்ஸ் – பா. லக்‌ஷ்மண்

வரைகலை – பிளசைன்

“ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – அசோக் செல்வன் !

“ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – அசோக் செல்வன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oh my kadavule stillsஇளமை ததும்பும் காதல், இளைஞர்களின் நவீன வாழ்வியல் என அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில், டிரெய்லரிலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது “ஓ மை கடவுளே” படம். டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை YouTube தளத்தில் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பிப்ரவரி 14 படம் வெளியாகவுள்ளது.

படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது…

கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இத்தனை பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இக்கதை திரைக்கதை மீது மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. எங்கள் திரை வடிவம் அனைவரையும் கவரும் என்று நம்பினோம் ஆனால் ரசிகர்களின் இத்தகைய பிரமாண்ட வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது. “ஓ மை கடவுளே” படத்தில் கதையின் பின்னிருக்கும் ரகசியம், கொஞ்சமேனும் மாற்றி, வித்தியாசமாக யோசிக்கலாமே எனும் சிறு பொறி தான். நாம் கண்டிப்பாக பல காதல் கதைகளை கடந்து வந்திருக்கிறோம் ஆனால் இதில் கொஞ்சம் ஃபேண்டஸியும் கலந்திருக்கிறது. அது மற்றிலும் புதிதாக இருக்கும். இயக்குநர் அஷ்வத் உடனான எனது நட்பு, பல்லாண்டு கால வரலாறு கொண்டது. நாளைய இயக்குநரில் குறும்படங்கள் இயக்கிய காலத்தில் இருந்து, எங்கள் நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது. அப்போதே இருவரும் படம் செய்வதாக உறுதிபூண்டிருந்தோம். எனது சகோதரி அபிநயா செல்வம் தான் இந்தப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார். தயாரிப்பாளர் டில்லிபாபு சார் தந்த ஆதரவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது. “ராட்சசன்” போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்திற்கு பிறகு எங்களின் இந்த சின்ன படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உருவாக்க ஒப்புக்கொண்டார். அவரது தயாரிப்பு படத்திற்கு பெரும் பலமாக மாறியிருக்கிறது.
இப்படத்தில் நாயகி கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது. ரித்திகா சிங் செய்தால் நன்றாக இருக்குமென நினைத்தோம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து வெகு சில படங்களே செய்துகொண்டிருந்தார். அவர் ஒப்புக்கொள்வரா ? என ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவருக்கு பிடித்திருந்தது. படமே அவரை சுற்றி தான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு பேருதவியாக இருந்தது. படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவருக்கு இது தமிழில் முதல் படம் நன்றாக செய்துள்ளார். எல்லோருடைய கிரஷ்ஷாக அவர் மாறிவிடுவார்.

விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து கூறியபோது…

படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு ரசிகர்களிடம் எளிதாக சென்றடையும் பிரபல ஆளுமை தேவைப்பட்டது. விஜய் சேதுபதி அண்ணாவிடம் கேட்டோம். அவர் என் சகோதரர் போல்தான். ஆரம்பம் முதலே நான் நன்றாக இருக்கவேண்டுமென உண்மையாக விரும்பும் நபர் அவர். கதாப்பாத்திரம் குறித்து ஏதுமே கேட்கமால் ‘நடிக்கிறேன் என்ன செய்யனும் சொல்’ என்றார். அவருக்கு பெரிய மனது. எளிமையா வந்து நடித்து கொடுத்துவிட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் சக்திகள் கொண்ட நபராக நடிக்கிறார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் திலக் வருகிறார். அவரது பாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். இதை தவிர இப்போதைக்கு படம் பற்றி ஏதும் சொல்லமுடியாது. படத்தில் அந்த சுவாரஸ்யங்களை நீங்களே கண்டுகளியுங்கள். இந்தப்படம் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் கொண்டாட்டமானதாக இருக்கும் என்பது உறுதி என்றார்.

More Articles
Follows