ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

ஹர்பஜன்சிங் இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்ரீசாந்த்

தமிழ் சினிமாவில் நடிக்க கிரிக்கெட் உலகின் பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். பின்னர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து இர்பாஃன் பதானும் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் அடுத்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

இவர் ஏற்கெனவே மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cricketer Sri Santh to debut in tamil film

அருண்விஜய்யின் பார்டரை முடித்துவிட்டு மாதவனுடன் இணையும் இயக்குனர்

அருண்விஜய்யின் பார்டரை முடித்துவிட்டு மாதவனுடன் இணையும் இயக்குனர்

நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மாதவன் முதன்முறையாக இயக்கியுள்ள படம் ராக்கெட்ரி. இதில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் மாதவன்.

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அறிவழகன் அவர்கள் அருண் விஜய் இணைந்துள்ள படம் பார்டர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்ததாக மாதவன் நடிக்கவுள்ள படத்தை அவர் இயக்கப் போகிறாராம் அறிவழகன்.

Madhavan’s next with Arun Vijay’s hit film director

சொல்லப்படாத காதலை சொல்லும் ‘ஐஸ்வர்யா முருகன்’.; சூப்பர் சிங்கர் முத்து சிற்பியும் இணைந்தார்

சொல்லப்படாத காதலை சொல்லும் ‘ஐஸ்வர்யா முருகன்’.; சூப்பர் சிங்கர் முத்து சிற்பியும் இணைந்தார்

ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.

காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் – மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல்.

“காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது.

பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோர்களாக இளங்கோ, கவுசல்யா மற்றும், ஹீரோயின் வித்யா பிள்ளை பெற்றோர்களாக புதுமுகம் தெய்வேந்திரன், நிமிஷா போன்றோர்கள் நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையில், விஜய் சூப்பர் சிங்கர் புகழ் முத்து சிற்பி கிராமத்து மணம் வீசும் குரலில் இப்பாடலை பாடியுள்ளார். வெளியான நொடியில் இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றுள்ளது.

“வீணானதே தாய் தந்த பாலும்.. ” போன்ற வரிகளால் அர்த்தமுள்ளப் பாட்டாக படைத்திருந்தார் கவிஞர் யுகபாரதி.

அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி.ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் அனைவரையும் கவனிக்க வைக்கும் படமாக உருவாகியுள்ளது.

படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .

இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர்.

எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம்.

கலை – முகமது.

சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர்.

நடனம் – தஸ்தா.

மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் ஒரு கிராமிய பாடகர் அறிமுகம்! #முத்துசிற்பி
“எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..”
#ஐஸ்வர்யாமுருகன்
மூன்றாவது பாடல் வெளியீடு!
#iswaryamurugan #muthusirpi

youtu.be/3UY6mh1jMe8

Super Singer fame Muthu Sirpi joins Iswarya Murugan

மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

மீண்டு(ம்) வரும் சிட்டிசன் பட டைரக்டர்.; எஸ்ஏசி நாஞ்சில் சம்பத் ரங்கராஜ் பாண்டே வாழ்த்து

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்,

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.

நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்.. தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங் களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம்

ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும்.

படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைபடுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்ப வனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறை யாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன்.

செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக்கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார்.

திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார் அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன்.

அதேபோல் பி டி செல்வகுமார் கலப்பை அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞ்னை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றன் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு தமிழ் இந்துவில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறேன். எல் கேஜி படத்தில் நான் நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்துக்கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும்.

ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:

திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் பத்திரிகை மீடியாவில் கிடைத்தைவிட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது.

சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது.

அப்படிப்பட்ட வீரியம் திரையுலகுக்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகிவிட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரபித்து விட்டார்கள்..

சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்னையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

இயக்குனர் ரவிமரியா பேசியதாவது:

திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின் பேச்சை கேட்க வந்திருக்கிறேன். அதேபோல் ரங்கராஜ் பாண்டே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்று சொன்னார். பி டி செல்வகுமார் இன்றைக்கு ஆபத் பாண்டவராக இருக்கிறார்.. ஜெயில் படம் வெளிவரமுடியாத சூழல் இருந்தபோது அதை வெளிக்கொண்டு வர எல்லா உழைப்பும் தந்தவர். மீண்டும் பட ஹீரோவை பற்றி சொல்லி ஆக வேண்டும் கிட்டதட்ட முழுநிர்வாணமாக இந்த படத்தில் கதிரவன் நடித்திருக்கிறார். டிரைல்ரை பார்க்கும்போது கண்கலங்கிவிட்டேன்.

அவருக்கு பெரிய இடம் சினிமாவில் காத்திருக்கிறது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு திருப்பதி லட்டு மாதிரி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களெல்லாம் மீண்டும் படத்தை பார்த்து இயக்குனர் சரவணன் சுபையாவை பாராட்டிவிட்டார்கள். இந்த படத்தில் இரண்டு அப்பாக்கள் ஒரு அம்மா என்ற கதை அம்சம் கொண்டது. மீண்டும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

இவ்வாறு பேசினார்கள்.

Celebrities wishes to citizen director’s Meendum movie

09-09-2022-ல் இந்திய சினிமா வரலாற்றில் எழுதப்படவுள்ள ஓர் அத்தியாயம்

09-09-2022-ல் இந்திய சினிமா வரலாற்றில் எழுதப்படவுள்ள ஓர் அத்தியாயம்

பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.

SS.ராஜமௌலியின் பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் வழங்கினார்.

இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அடுத்தாண்டு செப்டம்பர் 9, 2022 அன்று இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது. மேலும் இந்த பிரம்மாண்டமான மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்தது, இதன் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி போன்ற திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குனர் இந்த படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு.

இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில்,

பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது,

இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து உருவாக்கபட்டுள்ளது.

எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும். அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும், மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது…

இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விசயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இயக்குநர் கரண் ஜோஹர் கூறியதாவது…
“பிரம்மாஸ்திரம் மிகப்பெரும் ஆச்சர்யங்கள் தரும், வியத்தகு படைப்பாகும். இந்த தொலைநோக்கு திரைப்படத்தில் நானும் பாங்கேற்றிருப்பது பெருமை. பிரம்மாஸ்திரம் என்பது அயனின் பார்வை, அவர் வளர்த்த குழந்தை.

இப்படம் மிகப்பிரமாண்டமானது உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் தகுதி கொண்டது. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், இட மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து நமது முதல் உண்மையான தேசியத் திரைப்படமாக உயர்ந்தது, அதே போலான உயரத்தை இந்த பிரம்மாஸ்திரம் படமும் அடைய, இப்படத்தில் இணைவதில் இயக்குநர் ராஜமௌலியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை! இது என் மனதிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது, அவர் இப்போது இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது என் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில்…

“பிரம்மாஸ்திரம்” நான் பல ஆண்டுகளாக கண்டு வரும் கனவு. இது ஒரு மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு. இதுவரையிலான பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. இந்தப் படத்திற்காக நான் அனைத்தையும் தந்திருக்கிறேன். நான் தொடர்ந்து இதில் என்னால் முடிந்த பணியினை செய்து கொண்டே இருப்பேன். எஸ்.எஸ்.ராஜமௌலி சார் போன்ற ஒரு அற்புதமான வழிகாட்டி இந்தப்படத்திற்குள் வருவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவரது பாகுபலி திரைப்படம் தான் எனது கனவை தைரியமாக தொடர எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவரது பெயர் பிரம்மாஸ்திரம் படத்துடன் இணைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பிரம்மாஸ்திரம் படம் குறித்து…

பிரம்மாஸ்திரம் – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Ranbir Kapoor and Alia Bhat’s Brahmastra gets a release date

‘ஒபாமா’ படத்தை ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதி..; நானி பாலாவின் ப்ளாஷ்பேக்

‘ஒபாமா’ படத்தை ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதி..; நானி பாலாவின் ப்ளாஷ்பேக்

J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் ” ஒபாமா “

இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – தினேஷ் ஸ்ரீனிவாஸ்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டிங் – B.லெனின்
நடனம் – சேகர்
ஸ்டண்ட் – தபதி தினேஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்
தயாரிப்பு – ஜெயசீலன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நானி பாலா.

படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது..

இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார்.

ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ் அவர்கள் என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவரு 96 படத்தின் டைரக்டர் பிரேம் அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய்சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார்!

அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியலே! அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.

உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எழுதி 96 படத்தின் இயக்குனருக்கு வாட்ஸ் அப் செய்ய, அதை அவர் விஜய் சேதுபதி சாருக்கு அனுப்ப அதை படித்த அவர் என் போன் நம்பர் வாங்கி என்னிடம் Brother படிச்சு பார்த்தேன் நல்லாருக்கு நேரில் டிஸ்கஷன் செய்து எடுப்போம் என்றார்.

பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் காட்சியை அவரோடு நேரில் டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

நான் ஆண்பாவம் படம் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன் பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த ஒபாமாவின் ஆட்டத்தை திரையில் காணலாம் என்கிறார் இயக்குனர் நானி பாலா.

Vijay Sethupathi plays cameo role in Obama

More Articles
Follows