தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார்.
விக்னேஷ் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் நானும் ரவுடிதான்.
விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்து இருந்தனர்.
இந்த படத்தை தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்
படமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்
இப்பட சூட்டிங்கின் போதே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர அது தற்போது வரை நீடித்து வருகிறது.
ஏற்கெனவே பிரபுதேவா, சிம்பு ஆகியோரை கழட்டிவிட்ட நயன்தாரா இவரையாவது திருமணம் செய்வார் என கூறப்படுகிறது.
இதனிடையில் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன். ஆனால் பட பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை ஜோடியாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.