5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya welcomes TN Govt order about 5 and 8 std Public examஅகரம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா.

அவர்களுக்கு உதவிட நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்று தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?

இதனால் நிறைய குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடும் என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

தற்போது 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய நடைமுறையே தொடரும்’ என்று பள்ளிக் கல்வித்துறை எனவும் அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்த நடிகர் சூர்யா கூறியதாவது…

‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.

மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என கூறியுள்ளார்.

Suriya welcomes TN Govt order about 5 and 8 std Public exam

அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

அங்கிள் ஆண்ட்டி வராதீங்க..; ‘நான் சிரித்தால்’ விழாவில் ஆதியின் ஆணவ பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hip Hop Aadhi Controversial speech at Naan Sirithaal eventமீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் சிரித்தால்’.

இந்த படத்தையும் அவ்னி மூவிஸ் சார்பாக சுந்தர் சி தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ளார்.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இவருடன் வழக்கம்போல ஹிப் ஹாப் ஆதியின் நண்பர்கள் படை இணைந்துள்ளது.

மேலும் கே.எஸ். ரவிக்குமார், ரவிமரியா, படவா கோபி, சுஜாதா, ஷா ரா, எருமை சாணி விஜய், முனிஷ்காந்த், உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் ரிலீசாகவுள்ளது.

காந்தி பெயரில் தல-தளபதியை கலாய்த்த ஹிப் ஹாப் ஆதி

இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்டமாக நடத்தினர்.
வழக்கம்போல விழாவாக இல்லாமல் யூத்களை கவர்கிற அளவுக்கு வித்தியாசமான முறையில் விழாவை நடத்தினர்.

படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் பெயர்களில் கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஐஸ்வர்யாவின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் ஒவ்வொரு பாடலையும் பாடிக் கொண்டிருந்தார் ஹிப் ஹாப் ஆதி. பார்வையாளர்களை எழுந்து ஆட சொன்னார். ஆனால் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்தும் யாரும் எழுந்து ஆடவில்லை.

இறுதியாக நான் சிரிச்சா வேற லெவல் பாடல் வெளியிடப்பட்டது. அப்போதும் எழுந்து ஆட சொன்னார் ஆனால் யாரும் எழுந்து ஆடவில்லை. ஓரிரு இளைஞர்கள் அவர் கெஞ்சி கேட்டதற்காக ஆடினர்.

இதனிடையில் சிரித்துக் கொண்டே இது யூத் பங்ஷன். இங்கே நிறைய அங்கிள் ஆண்ட்டிகள் வந்துள்ளனர். அதனால்தான் யாரும் ஆடவில்லை. இனிமே வராதீங்க என்றார்.

ஆண்ட்டி.. ப்ளீஸ்.. உங்க அங்கிளை ஆட விடுங்க. அனுமதி கொடுங்க என்றார்.

திடீரென அதற்குள் சுதாரித்துக் கொண்டு இது குடும்ப படம். எல்லாரும் காண வேண்டிய படம் என்றார்.

ஆனால் இவரின் படத்தை இளைஞர்கள் மட்டும் பார்த்தால் படம் ஓடி விடுமா? படிக்கும் மாணவர்களுக்கு / இளைஞர்களுக்கு பணம் கொடுப்பதே அவர்களை பெற்றவர்கள் தான்.

அவர்கள் இல்லாமல் ஹிப் ஹாப் ஆதி எதிர்பார்க்கும் யூத் கூட்டம் வந்துவிடுமா? என பார்வையாளர்கள் பேசிக் கொண்டனர். இது அங்கு சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.

Hip Hop Aadhi Controversial speech at Naan Sirithaal event

Naan Sirithaal event

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றபோது கலவரம் வெடித்தது.

அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூற தூத்துக்குடிக்குச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகவும், அது தமக்கு தெரியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து ரஜினியிடம் விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் “அயலான் “ !

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் “அயலான் “ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayalaan sivakarthikeyanநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட்டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ரஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

24 AM நிறுவனம் தயாரிப்பாளர் RD ரஜா கூறியதாவது….

எங்கள் 24AM நிறுவனம் சார்பில் தயாராகும் அயலான் படத்தின் தலைப்பிற்கு இணையமே கலங்கும், மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. மேலும் எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் A R ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே A R ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். எங்களையும் படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.

“அயலான்” என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பது அர்த்தம். ( Destination earth ) சென்றடையும் இலக்கு பூமி எனக்குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. தமிழின் பிரமாண்டமான் அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிகஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் 24AM ஆன எங்கள் நிறுவனதிற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்.

24AM நிறுவனம் சார்பில் RD ரஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அகாடமி அவார்ட் வின்னர் A R ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

Title Motion Poster: https://www.youtube.com/watch?v=0YL1DTjEfS8

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public star Durai Sudhakarதமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று
அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட
இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த
கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர்,
தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள்
வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.

இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை
தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக்
கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம்
வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில்
ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக
ஆர்வலருமான துரை சுதாகார், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார்.

கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

athiyum thaandi punithamanathuவேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அதையும் தாண்டி புனிதமானது’.

ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன், எடிட்டிங் – ஆர்.கே, இயக்கம் –ஆர்.வெங்கட்டரமணன்,
தயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி.

தயாரிப்பு – N.பழனிவேல். மேலும் Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K. பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி, Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத்தேவர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More Articles
Follows