‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

bairavaa stillsபைரவா படத்தில் விஜய்யுடன் கீர்த்திசுரேஷ், அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பரதன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதில் 3வது வில்லனாக பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து அவர் கூறியதாவது….

“நான் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மற்றபடி நான் பைரவா படத்தில் நடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார் இந்த மருது வில்லன் ஆர்.கே.சுரேஷ்.

விஜய்-செல்வராகவன் சந்திப்பு; புதிய பட அறிவிப்பு எப்போது?

விஜய்-செல்வராகவன் சந்திப்பு; புதிய பட அறிவிப்பு எப்போது?

vijay and selvaraghavanவிஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பைரவா.

இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் திருநாளில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி பல நாட்களாக கோலிவுட்டில் வலம் வருகிறது.

விஜய் 61 படத்தை அட்லி இயக்க, சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என செய்திகளும் வந்தன.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் விஜய்யை நேரில் சந்தித்து பேசினாராம்.

அப்போது விஜய்கேற்ற வகையில் கதை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் கதையை கேட்ட விஜய் என்ன தெரிவித்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஒருவேளை கூட்டணி முடிவாகும் பட்சத்தில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அஜித்துக்காக குரல் கொடுக்க காத்திருக்கும் தனுஷ்

அஜித்துக்காக குரல் கொடுக்க காத்திருக்கும் தனுஷ்

ajith and dhanushதனுஷ் நடிப்பில் விரைவில் தொடரி மற்றும் கொடி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

தற்போது தொடரி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்களது குரல் யாருக்கு பொருத்தமாக இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது, அஜித் அவர்களுக்கு எனது குரல் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் வெற்றிமாறன், செல்வராகவன் ஆகியோரின் இயக்கத்தில் இலவசமான நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் சினிமா ரசிகனின் பவரை சிவகார்த்திகேயன் எப்போது உணர்ந்தார்?

தமிழ் சினிமா ரசிகனின் பவரை சிவகார்த்திகேயன் எப்போது உணர்ந்தார்?

sivakarthikeyan stillsபொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.

இப்படத்தை தொடர்ந்து இவரின் மார்கெட் வேல்யூ ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.

இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அவரை வாழ்த்தி நம் தளத்தில் “சிவகார்த்திகேயன் பவரை தமிழ் சினிமா உணர்ந்த தருணம் இது” என்று பதிவிட்டு இருந்தோம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் நம் தளத்திற்கு பதிலளிக்கும்போது கூறியுள்ளதாவது..

“தமிழ் சினிமா ரசிகனின் பவரை நான் உணர்ந்த தருணம் என்றும் கூட சொல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

சிம்புவின் அடுத்த ஜோடி தமன்னா; மூன்றாவது ஜோடி யார்?

சிம்புவின் அடுத்த ஜோடி தமன்னா; மூன்றாவது ஜோடி யார்?

Simbu Tamanna romance‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் மூன்று கெட்டப்பில் சிம்பு நடிக்க, ஒவ்வொரு கெட்டப்பின் சூட்டிங்கை முடித்து வருகிறார் இயக்குனர்.

மதுரை மைக்கேல் கெட்டப்புக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். இந்த கெட்டப்பின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

அடுத்த கெட்டப்புக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முமூன்றாவது கெட்டப்பின் ஜோடி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

‘விஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்வேன்…’ – தனுஷ் ஓபன் டாக்

‘விஜய்சேதுபதிக்கு சிபாரிசு செய்வேன்…’ – தனுஷ் ஓபன் டாக்

dhanush vijay sethupathiபிஸியான நடிகராக வலம் வருகிற போதும், சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் விஜய்சேதுபதி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில், நீங்கள் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்க முடியாமல் போனால், யாரை சிபாரிசு செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் விஜய்சேதுபதியை சிபாரிசு செய்வன்’ என்று பதிலளித்தார்.

More Articles
Follows