‘ரெமோ’ அப்டேட்ஸ்; வேற லெவல் விளம்பரங்கள்

‘ரெமோ’ அப்டேட்ஸ்; வேற லெவல் விளம்பரங்கள்

remo cupidபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் ரெமோ.

இப்படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இன்று சென்சாருக்கு சென்றுள்ளது.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலரை இதுவரை 45 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது.

எனவே படத்தின் புரோமோஷனை சிறந்த முறையில் செய்து வருகிறார் இதன் தயாரிப்பார் ஆர்.டி.ராஜா.

எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மன்மதன் சிலைகள் (CUPID) வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் குழந்தைகள் முதல் இளைஞர்கள் செஃல்பி எடுத்து வருகின்றனர்.

மேலும் மக்கள் அதிகம் சேரும் இடங்களிலும் ரெமோ விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

sanghaviவிஜய், அஜித்தின் ஆரம்ப கால படங்களில், அவர்களுடன் நடித்தவர் சங்கவி.

அதன்பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார்.

தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து வருகிறார்.
இதில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்த இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

கொளஞ்சி படம் எனக்கு, 99வது படம். இரண்டு குழந்தைகளுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

புஷ்பா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நாத்திகவாதியாக சமுத்திரக்கனி நடிக்கிறார். தன்ராம் சரவணன் இயக்குகிறார்.

அஜித், விஜய்யுடன் நடித்தது குறித்து கேட்டதற்கு…

அமராவதி படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்தேன்.

அவர்கள் இருவரும் இப்படி இவ்வளவு பெரிய நடிகர்களாக வருவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியுமே இதற்கு காரணம்.” என்றார் சங்கவி

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

dhanush and soundarya rajini joins for new projectதொடரி படம் வெளியானதை தொடர்ந்து, கொடி படத்தை தீபாவளி விருந்தாக தரவிருக்கிறார் தனுஷ்.

இதனிடையில் ராஜ்கிரண் நடிக்க, பவர் பாண்டி என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வருகிறார்.

விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

இவையில்லாமல், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரிக்க போகிறாராம்.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை கூட இப்படத்திற்காக தேர்வு செய்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையானை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னேகாவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்க இதான் காரணம்!

ஸ்னேகாவுக்கு விஜய் சேதுபதியை பிடிக்க இதான் காரணம்!

snehaதன் புன்னகையால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் ஸ்நேகா.

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் நடிக்கிறார்.

மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில், இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்சேதுபதி என தெரிவித்துள்ளார்.

அவரின் கேரக்டர், வசன உச்சரிப்பு என அனைத்தும் ஹீரோயிஸம் இல்லாமல் மிகவும் யதாத்தமாக இருக்கிறது என்றார்.

இதை விஜய்சேதுபதியிடமே ஒரு முறை தெரிவித்தும் இருக்கிறாராம்.

குஷ்பு-சுஹாசினி-ராதிகா-ஊர்வசி ஆகிய நால்வரையும் இயக்கும் பிரபலம்

குஷ்பு-சுஹாசினி-ராதிகா-ஊர்வசி ஆகிய நால்வரையும் இயக்கும் பிரபலம்

Radhika Urvashini Suhasini Kushboo20-25 வருடங்களுக்கு தங்கள் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவந்தவர்களில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி ஆகிய நால்வருக்கும் முக்கிய இடம் உண்டு.

இவர்களில் சிலர் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்களாம்.

இப்படத்தை பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன்பே, ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘சிவான்னு பேரு மாத்தினதும் சதீஷ் ஓகே சொன்னார்’ – விஜய்சேதுபதி

‘சிவான்னு பேரு மாத்தினதும் சதீஷ் ஓகே சொன்னார்’ – விஜய்சேதுபதி

rekka vijaysethupathiரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜாரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் றெக்க.

இமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது…

“சதீஷ் மற்றும் ஹரீஷ் உத்தமன் இருவரும் இப்படத்தில் நடித்தற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சதீஷிடம் நடிக்க கேட்டதற்கு முதலில் கால்ஷீட் இல்லை. முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் இப்படத்தில் என் கேரக்டர் பெயரை சிவா என மாற்றிய பின் நடிக்க ஒப்புக் கொண்டார்.” என பேசினார்.

சதீஷின் நெருங்கிய நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது தாங்கள் அறிந்ததே

More Articles
Follows