நிறைவு பெற்றான் ‘எதற்கும் துணிந்தவன்’..; விஜய்-சூர்யா சந்திப்பு எப்படி.?

நிறைவு பெற்றான் ‘எதற்கும் துணிந்தவன்’..; விஜய்-சூர்யா சந்திப்பு எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார்

இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு 2022 ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் இந்த சூட்டிங் செட்டுக்குள் சந்தித்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை பெருங்குடி என்ற பகுதியிலுள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்த படங்களில் சூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விஜய்யும் சூர்யாவும் சந்தித்து பேசிக் கொண்டுள்ளனர்.

Reason behind Vijay Suriya sudden meet?

மெட்ரோ ரயிலில் அஜித்தின் ரீல் சிஸ்டர் குத்தாட்டம்

மெட்ரோ ரயிலில் அஜித்தின் ரீல் சிஸ்டர் குத்தாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கும்கி’ திரைப்படத்தின் மலையாள நடிகை லட்சுமிமேனனை தமிழ் சினிமாவி அறிமுகம் செய்தார் பிரபு சாலமன்.

பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட்டான நிலையில் தமிழில் ராசியான நடிகையானார்.

சசிகுமார் உடன் ‘சுந்தரபாண்டியன்’, விஷால் உடன் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், கார்த்தி உடன் கொம்பன், விஜய் சேதுபதியுடன் றெக்க என பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

தன்னுடைய மேற்படிப்புக்காக சினிமாவில் இருந்து விலகினார்.

இதன்பின்னர் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கேரளாவில் கொச்சி மெட்ரோ ரயிலில் இவர் போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.

கிழிந்த ப்ளாக் கலர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் போட்டுக் கொண்டு இவர் போட்ட டான்ஸ் இப்போது ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

Ajith’s reel sister dance goes viral

மோகன்லாலை மான்ஸ்ட்ராக மாற்றும் ‘புலி முருகன்’ டைரக்டர்

மோகன்லாலை மான்ஸ்ட்ராக மாற்றும் ‘புலி முருகன்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவை பிரம்மாண்டமான சினிமாவாக அடுத்த கட்டத்திற்கு சென்ற படங்களில் ஒன்று ‘புலி முருகன்’ என்று சொன்னால் அது மிகையன்று.

மோகன் லால், நமீதா, பாலா, லால், கமாலினி முகர்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் வைசாக் இயக்கியிருந்த இந்த படத்தின் கதையை உதயகிருஷ்ணா எழுதியிருந்தார்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என டைட்டில் வைத்து படம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தையும் வைசாக் இயக்க இந்த படத்தின் கதையை உதயகிருஷ்ணா எழுதுகிறார்.

இதில் லக்கி சிங் என்கிற சர்தார்ஜி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

அவர் நடிக்கும் கேரக்டர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இன்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Mohanlal reunites with Puli Murugan team

நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..; புனீத் மறைவிற்கு ரஜினி இரங்கல்

நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..; புனீத் மறைவிற்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த‌ அக்டோபர் மாதம் 29‍-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46).

இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.

அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புனித் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

இதனால் அவருக்கு இந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை. அதனால் புனித் மறைவுக்கு அவர் இரங்கலும் தெரிவிக்கவில்லை.

தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் அவர் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தன் 2வது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியில் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:

‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார் புனீத்.

அந்த செய்தி எனக்கு பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன்.

என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.

அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Rajinikanth’s emotional condolence message to Punith Rajkumar

தமிழக முதல்வர் தொடங்கி இந்திய பிரபலங்களில் பாராட்டு மழையில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’

தமிழக முதல்வர் தொடங்கி இந்திய பிரபலங்களில் பாராட்டு மழையில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலியின் சத்தம் தான் அதிகம்.

நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ வெளியானது.

இதனை கண்டு ரசித்த பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிமன்றத்தை மையப்படுத்திய ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களின் பாராட்டுகளை இடையறாமல் வழங்கி வருகிறார்கள்.

இயக்குநர் தா செ ஞானவேல், கலைஞர்கள் சூர்யா, லிஜோ மோள் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் என இந்த படத்தில் நடித்த அனைவரும் நடிகர்களாக திரையில் தோன்றாமல், அந்தந்த கதாபாத்திரத்திற்கு உரிய இயல்புடன் நடித்ததால் ஏராளமானவர்கள் பாராட்டுகிறார்கள்.

தமிழக முதல்வரான மாண்புமிகு மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களின் ஆதரவை மனமுவந்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரை உலகின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்களும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

முன்னணி நடிகராக இருக்கும் மாதவன்,…

”சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ள தூண்டுகின்றன. சூர்யா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத்திறன், படத்தை ஈடுபாட்டுடன் காணத் தூண்டுகிறது.

உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது.” என பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய பதிவிில்.. “படக்குழுவினருக்கு நன்றி. ‘ ‘ஜெய் பீம்’ என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய கட்டுரையில்…

,”ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு.” என பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகரான நானி தன்னுடைய பதிவில்…

,”ஜெய் பீம் படம் பார்த்தேன். சூர்யா சாருக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி மற்றும் ராஜாகண்ணுவாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. ஒப்புயர்வற்ற மாணிக்கம் போன்ற இந்தப் படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய கட்டுரையில்,…

”சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்! ”என பதிவிட்டிருக்கிறார்.

இதனை தவிர்த்து இந்திய அளவில் சமூக வலைதளப் பக்கத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஊடகவியலாளர் சோலி அமண்டா பெய்லி, நடிகர் சித்தார்த், நடிகர் யோகிபாபு, நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா, கொல்கத்தா ஐஐடியில் பணி புரியும் ஆணையர் சுக்ரீவ் மீனா, ஒடிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் விஜய் ஐஏஎஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றும் சந்தோஷ் சிங் ஐபிஎஸ், தகவல் தொடர்பு துறையில் தொழில் முனைவோராக திகழும் மயூர் சேகர் ஜா, தமிழ் திரையுலகின் அதிரடி விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட ஏராளமானவர்களின் நேர்மறையான பாராட்டை பெற்றிருக்கிறது.

ரசிகர்களின் பேராதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ படத்தின் அற்புத தருணங்களையும், உன்னதமான படைப்பினையும் இதுவரை கண்டு ரசிக்காதவர்கள் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் காணக் கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘ஜெய் பீம்’ தமிழகத்தில் 1990களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சிந்தனையை தூண்டும் வகையில் வேகமான திரைச்சித்திரமாக உருவாகியிருக்கிறது.

கடின உழைப்பாளிகளான செங்கேணி மற்றும் ராஜாகண்ணு தம்பதியினரின் வாழ்க்கையை அணுக்கமாக காண நம்மை அழைத்துச் செல்கிறது. ராஜாகண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகிறார்.

அதன்போது அவர்களின் உலகம் சிதைகிறது. செங்கேணி தனது கணவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார்.

வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக்கொணர்வதற்காகவும், பழங்குடியின பெண்ணுக்கு நீதி கிடைக்கவும் அனைத்துவகையான இடையூறுகளையும் எதிர்த்து போராடி ரசிகர்களின் மனதை வெற்றி கொள்கிறார்.

Jai Bhim continues roaring and winning hearts!

உண்மைக்கதை… பழைய பம்பாய்.. 3 வருட திரைக்கதை.. 5 மொழிகள்..; ‘குருப்’ பற்றி துல்கர் சல்மான்

உண்மைக்கதை… பழைய பம்பாய்.. 3 வருட திரைக்கதை.. 5 மொழிகள்..; ‘குருப்’ பற்றி துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி “குரூப்” – இன் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”.

இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

“குரூப்” படம் குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது..

இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார்.

எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது மீண்டும் சில வருடங்கள் முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது.

கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம்.
குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை!

ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம்.

அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது.

மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையெய் அமைத்தேன். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.

‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்றார்.

“குருப்” திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளார்.

“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார்.

திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து
எழுதியுள்ளனர்.

Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.

ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார்.

‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 நவம்பர் 12 திரையரங்குகளில் வெளியாகிறது.

#Kurup , India’s longest hunted fugitive. Deranged mastermind? Accidental conman?
Find out on 12 November in cinemas worldwide.

Tamil, malayalam, Telugu and kannadam languages:

Dulquer Salman’s Kurup will release on November 12

More Articles
Follows