தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விவேகம் படத்தை அடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார்? அப்படத்தை தயாரிப்பது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
ஆனால் இன்று திடீரென அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்ட்டின் படி படத்தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி வரை அனைத்தையும் அறிவித்து விட்டனர்.
சிவா இயக்கவுள்ள இப்படத்திற்கு விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை அடுத்த வருடம் 2018 ஜனவரியில் தொடங்கி 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பொதுவாக அஜித் படம் என்றால் படத்தின் சூட்டிங் பாதி முடிந்தவுடன் தான் தலைப்பை அறிவிப்பார்கள். அதன்பின்னர் டீசர், டிரைலர் என ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
ஆனால் இம்முறை தலைப்பை அறிவித்து விட்டு சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.
இந்த திடீர் மாற்றம் ஏன்? என்று விசாரிக்கையில்… விவேகம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
எனவேதான் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்காமல் முன்பே அறிவித்துவிட்டார்களாம்.
ரஜினியின் காலா, கமலின் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் படத்தலைப்பு அறிவித்த பின்னரே சூட்டிங்கை தொடங்கினார்கள்.
அதே வழியில் தற்போது அஜித் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.






