தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் ‘காலா’. இதில் காலா சேட்டு என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார்.
இவருடன் ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.
இதன் இசை வெளியீட்டு விழா இன்று மே 9ஆம் தேதி மாலை நடைபெறவுள்ள நிலையில், பாடல்களை மட்டும் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியிடவுள்ளனர்.
இதனை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






