தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேட்ட பட பாடல்களை வெளியீட்டுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.
மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் ‘பேட்ட’ திரைப்பட ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக கூறுகிறார்களே அது குறித்து உங்கள் கருந்து என்ன? என்றும் கேட்டனர்.
‘பேட்ட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம்.
ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே எனது வேலை.
பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்.” என்றார்.
Rajinikanth reaction towards Petta release and fans response