Breaking : தணிக்கை செய்யப்பட்ட சர்காரை தடுப்பதா.?; ரஜினி கண்டனம்

Breaking : தணிக்கை செய்யப்பட்ட சர்காரை தடுப்பதா.?; ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini supports Vijays Sarkar team and he condemns TN Sarkarகடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் ஆளும் அதிமுக அரசை கண்டிக்கும் வகையில் சில காட்சிகள் இருந்தமையால் இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் உருவானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட சர்கார் திரையிடப்படும் தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை இதனால் உருவானது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டது.

இது திரையுலகினரின் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுக்க நினைப்பது சரியல்ல என சர்கார் படக்குழுவுக்கு தன் ஆதரவை தெரிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சற்றுமுன் 5 நிமிடங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

Rajinikanth‏Verified account @rajinikanth 4m4 minutes ago

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Rajini supports Vijays Sarkar team and he condemns TN Sarkar

Breaking : நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.; விஜய்க்கு கமல் ஆதரவு

Breaking : நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.; விஜய்க்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal supports Sarkar movie team in controversial scenes issueதீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் அரசுக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாக கூறி ஆளுங்கட்சியான அதிமுக அரசு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளியை பயன்படுத்தியுள்ளதாகவும் அதையும் நீக்க வேண்டுமென கடுமையாக எதிர்த்தனர்.

இதன்படி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் சர்கார் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இதுபோன்ற பல பிரச்சினைகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

Kamal supports Sarkar movie team in controversial scenes issue

Breaking அடிப்பணிந்தது விஜய்யின் சர்கார்.; காட்சிகளை நீக்க முடிவு

Breaking அடிப்பணிந்தது விஜய்யின் சர்கார்.; காட்சிகளை நீக்க முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar team agree to remove controversial scenes after ADMK party protest

விஜய்யின் சர்கார் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

இதை முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக்கியிருந்தார் முருகதாஸ்.

தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி தீயில் எறிவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றன.

மேலும் இப்படத்தில் வரலட்சுமியின் வில்லி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை (கோமளவள்ளி) சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.

எனவே அதிமுக அமைச்சர்கள் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள சர்கார் பேனர்கள் அகற்றப்பட்டது.

சென்னை ராயபேட்டையிலும் திரையரங்கு முன்னதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும்.

காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவினர் புண்படக்கூடாது என்பதை எங்களுடைய இலக்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Sarkar team agree to remove controversial scenes after ADMK party protest

மெரினா புரட்சி-க்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை

மெரினா புரட்சி-க்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marina Puratchi movie and 2nd Revising Committee news updatesஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் M.S. ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த Censor Board Examination Committee எந்த காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee க்கு அனுப்பினர்.

தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.

ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்.

Marina Puratchi movie and 2nd Revising Committee news updates

பூர்ணா நடிப்பில் உருவாகும் சமூக த்ரில்லர் படம் *புளு வேல்*

பூர்ணா நடிப்பில் உருவாகும் சமூக த்ரில்லர் படம் *புளு வேல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Poorna Starring Blue Whale will be a social thriller movieகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது.

இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது.

இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு.

ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.

அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும்.

மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர்.

அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.

சமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா.

அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Poorna Starring Blue Whale movie will be a social thriller

3 வாரத்தில் 50 லட்சம் செலவில் *அமுதா*வை இயக்கிய அர்ஜூன்

3 வாரத்தில் 50 லட்சம் செலவில் *அமுதா*வை இயக்கிய அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amudha movie completed within 3 weeks with 50 lakhs PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமுதா”. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள் , யார் கொலையாளி , எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் PS அர்ஜுன்.

படத்தில் மூன்று பாடல்கள், ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்கள். இசை அருண் கோபன்.

மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான ஒரு திரில்லர் படத்தை குறைந்த பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.

விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.

Amudha movie completed within 3 weeks with 50 lakhs

More Articles
Follows