சீனுராமசாமியின் ஆசையை நிறைவேற்றிய ‘தர்மதுரை’ ரஜினி

Rajini Seenu Ramasamyரஜினியை ஒரு படத்திலாவது தான் இயக்கிட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்குனரின் கனவாக இருக்கும்.

அல்லது அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்று தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்வார்கள்.

அப்படித்தான் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதை பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில், சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது.

இதற்கான ஷீல்டை அந்த நாள் தர்மதுரையான ரஜினியிடம் கொடுக்க படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் அவர்களும் உடன் இருந்தார்.

அனைவரையும் வரவேற்ற ரஜினி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீனுராமசாமி கூறியுள்ளதாவது…

“சினிமாவுக்கு போகனும்,ஒரு படம் பண்ணனும், கூலிங்கிளாஸ் போட்டு தலைவருடன் போட்டோ எடுக்கனும் என்ற என் லட்சியம் நிறைவேறியது. ரஜினி சார் லவ் யூ” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்…
...Read More
ஆந்திராவில் பிரபலமான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின்…
...Read More
சுந்தரபாண்டியன்' படம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர்…
...Read More

Latest Post