‘பீஸ்ட்’ வைத்த வில்லங்கம்… எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்…; ஏஆர். ரஹ்மான் போல சிக்கிய நெல்சன்

‘பீஸ்ட்’ வைத்த வில்லங்கம்… எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்…; ஏஆர். ரஹ்மான் போல சிக்கிய நெல்சன்

விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

இந்த படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரைலரில் ஒரு ஷாப்பிங் மால் காம்ப்ளக்ஸை தீவிரவாதிகள் சிறைப்பிடிப்பதாக உள்ளது.

அங்குள்ளவர்களை ரா பிரிவை சார்ந்த விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தை கதை என தெரிய வந்துள்ளது.

இது யோகிபாபு நடித்த ‘கூர்கா’ படத்தின் கதை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

பான் இந்தியா படமாக THALAIVAR 169..; இந்தியர்களை கவர மாஸ் டைட்டில் வைக்கும் நெல்சன்

எனவே ‘பீஸ்ட்’ படத்தை ‘கூர்கா பார்ட் 2’ என நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் படமே வெளியாகாத நிலையில் படம் இப்படிதான் இருக்கும் என ஒரு முடிவில் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் ‘தலைவர் 169’ படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் நிலைமை தன் தலைவர் படத்திற்கும் வந்துவிடுமோ.? என ரஜினி ரசிகர்கள் உள்ளத்தில் பயம் தொற்றிக் கொண்டுள்ளது.

எனவே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நெல்சனுக்கு கோரிக்கைகளும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ENGLISH TITLE FOR THALAIVAR 169.? ரஜினியுடன் ஐஸ்வர்யாராய் சிவகார்த்திகேயன் வடிவேலு

உலகளவிலும் ரஜினிக்கு மார்கெட் உள்ளது. படத்தை நல்ல படியாக வித்தியாசமாக இயக்கினால் உங்களுக்கும் நல்ல மார்கெட் வேல்யூ கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் இதுவரை ஸ்டார்களை இயக்கி கொண்டீருந்தீர்கள். இனி சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறீர்கள். அதை கருத்தில் கொள்ளுங்கள் எனவும் எச்சரிக்கை வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெல்ஸ்… பத்திரமா பாத்துக்குங்க…

கூடுதல் தகவல்…

1995ஆம் ஆண்டில் ரஜினியின் ‘முத்து’ படத்திற்கு தான் முதன்முறையாக இசையமைத்தார் ஏஆர். ரஹ்மான். பட ரிலீசுக்கு 2 மாதங்களுக்கு முன் பாடல் கேசட்டுகள் வெளியானது. அப்போது இது ரஜினி பட பாடல்கள் போல இல்லை என ரஹ்மானை எச்சரித்தவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பின்னர் முத்து ரிலீசான பின் பாடல்கள் பட்டைய கிளப்பி ஜப்பான் வரை ஹிட்டானது என்பதெல்லாம் வேற மாரி.. வேற மாரி… ரஜினியிசம்.

Rajini fans warns Beast director Nelson

RRR 800 கோடி வசூல்.. மெகா ஹிட்… தங்க நாணயத்தை அள்ளி வழங்கிய ராம்சரண்

RRR 800 கோடி வசூல்.. மெகா ஹிட்… தங்க நாணயத்தை அள்ளி வழங்கிய ராம்சரண்

மார்ச் 25ல் உலகமெங்கும் ரிலீசாகி வசூல் வேட்டையாடி வருகிறது ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம்.

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 800 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

மிகப்பிரம்மாண்டமாக உருவான இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உழைத்துள்ளனர்.

எனவே அவர்களது பணியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் உழைத்த டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் ஆகிய 35 நபர்களுக்கு தலா 11 கிராம் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் நடிகர் ராம்சரண்.

Quit OTT.. RRRun to theatRRRe..; ஆர்ஆர்ஆர் விமர்சனம் 4.25/5

உழைப்பாளிகளுடன் உணவருந்தி தங்க நாணயத்தை வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை ராம்சரண் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Charan surprised them all by gifting each of them a gold coin weighing 1 tola (11.6 gms). This gesture by Ram Charan has sure won the hearts.

Ram Charan gifts gold coins to 35 technicians from RRR unit

‘மஹாவீர்யார்’-காக 3வது முறையாக இணைந்த நிவின் பாலி & அப்ரித் ஷைனி

‘மஹாவீர்யார்’-காக 3வது முறையாக இணைந்த நிவின் பாலி & அப்ரித் ஷைனி

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையை தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும், முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

இஷான் சாப்ரா இப்படத்திற்கு இசையமைக்க, விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படக்குழுவில் மனோஜ் (எடிட்டர்), விஷ்ணு கோவிந்த் (ஒலிக்கலவை), அனீஸ் நாடோடி (கலை இயக்கம்), சந்திரகாந்த் & மெல்வி J (ஆடைகள்), லிபின் மோகனன் (ஒப்பனை), பேபி பணிகர் (இணை இயக்குனர்) பணிகளை செய்துள்ளனர்.

Mahaveeryar teaser: Nivin Pauly Asif Alis genre busting film

விஜயகாந்த் படத்தலைப்பில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

விஜயகாந்த் படத்தலைப்பில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

அனில்காட்ஸ் என்பவர் இயக்கத்தில் வரலட்சுமி நடிப்பில் ‘சபரி’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதுமையான வேடத்தில் நடிக்கிறாராம் வரலட்சுமி.

இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க கோபி சுந்தரின் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

மகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து வருகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக துவங்கப்பட்டது.
இந்தப்படம் ஒரு உளவியல் த்ரில்லர் என கூறப்படுகிறது.

ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் உள்ள சில அழகான இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதே ‘சபரி’ என்ற படத்தலைப்பில் கடந்த 2007ல் சுரேஷ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், ஜோதிர்மயி ஜோடியாக நடித்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi Sarathkumar surprises as Sabari

விஷால் எடுத்த ‘லத்தி’-க்காக 12வது முறையாக இணைந்த யுவன்

விஷால் எடுத்த ‘லத்தி’-க்காக 12வது முறையாக இணைந்த யுவன்

விஷால் நடித்து அண்மையில் வெளியான படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்தப் படத்தில் விஷாலுக்கு தங்கையாக ரவீணா ரவி நடித்திருத்தார்.

இப்படத்துக்குப் பிறகு ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே சமர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஏப்ரல் 6ல் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

போலீஸ் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘லத்தி’ படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஷால் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இது 12-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal collaborates with Yuvan Shankar Raja for the 12th time

சூர்யா இல்லாமல் விஜய்யின் ‘நேருக்கு நேர்’..; மினி திரையில் மீண்டும்.!

சூர்யா இல்லாமல் விஜய்யின் ‘நேருக்கு நேர்’..; மினி திரையில் மீண்டும்.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, செல்வராகவன், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளையும் படைத்தது .

இதன் பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. இந்த பாடலும் சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி (ஒரு நாள் முன்னதாக) திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று ‘பீஸ்ட்’ பட ட்ரைலர் வெளியாகி 25 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 10 இரவு 9 மணிக்கு பீஸ்ட் புரோமோசன் நிகழ்ச்சி தொடர்பாக ‘நேருக்கு நேர்’ என்ற நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதில் நடிகர் விஜய்யை டைரக்டர் நெல்சன் நேர்காணல் காண்கிறார். 10 வருடத்திற்கு பிறகு விஜய் நேர்காணலில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Nelson interview Beast Promotion on full swing.

கூடுதல் தகவல்…

1997 ஆண்டில் வசந்த் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ படத்தில் விஜய் சூர்யா இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது ‘நேருக்கு நேர்’ என்ற தன் பட டைட்டில் நிகழ்ச்சியில் விஜய் கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி டைட்டில் கனெக்ட் பண்ணிட்டோம்னு பாத்தீங்களா.?

More Articles
Follows