2021ல் பாத்துக்கலாம்… ரஜினியை அடுத்து அஜித்-சூர்யா முடிவு

2021ல் பாத்துக்கலாம்… ரஜினியை அடுத்து அஜித்-சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajith suriyaகொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கிட்டதட்ட 3 மாதங்களாக அமலில் உள்ளது.

சினிமா சூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

கமலின் இந்தியன்2, ரஜினிகாந்த்தின் அண்ணாத்த’, அஜீத்தின் ’வலிமை’ உள்ளிட்ட பல படங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவில் இருக்கிறாராம் ரஜினி.

அண்ணாத்த படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.

அதுபோல தான் அஜித்தும் முடிவில் இருக்கிறாராம்.

இவர்களை அடுத்து சூர்யாவும் ’அருவா’ பட சூட்டிங்கை ஜனவரியில் தொடங்க நினைக்கிறாராம்.

படக்குழுவினர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என இந்த ஹீரோக்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அடுத்த லாக்டவுன் வேண்டாம்ன்னா வீட்டிலேயே இருங்க.. முதல்வர் அதிரடி

அடுத்த லாக்டவுன் வேண்டாம்ன்னா வீட்டிலேயே இருங்க.. முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karnataka cmகொடிய வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் பல்வேறு மரண செய்திகளை கேட்டு வருகிறோம்.

இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளது.

அதுபோல் கர்நாடகாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது.

முக்கியமாக பெங்களுருவில் இந்த வைரஸ் பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

எனவே ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அண்மையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க வேண்டாம் என்றால் மக்களை வீட்டிலேயே பாதுக்காப்பாக இருக்க வலியுறுத்துங்கள் என தெரிவித்திருந்தாராம்.

ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் என அறிவித்த மாநிலங்கள்

ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் என அறிவித்த மாநிலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lockdown 5.0கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளதால் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவே மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துவிட்டார்.

இந்த மாநிலங்களை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொது முடக்கத்தை நீடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputகிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டியவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதான இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் ‘குட்பை சுஷாந்த்’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவாக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிறு வயதில் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் அவர் வளர்ந்த வீட்டை நினைவில்லமாகவும் மாற்ற உள்ளார்களாம். அதில் சுஷாந்த் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவருடைய டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் உள்ளிட்டவற்றை அவருடைய ரசிகர்களுக்காகவும், ஆர்வலர்களுக்காகவும் வைக்க உள்ளனர்.

மேலும் சுஷாந்த உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய கணக்குகளை அவருடைய நினைவாக தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

போலீஸை தாக்கும்போது கண்டித்த ரஜினி… கொலை செய்த போலீசாரை கண்டிக்கலையே.. ஏன்..?

போலீஸை தாக்கும்போது கண்டித்த ரஜினி… கொலை செய்த போலீசாரை கண்டிக்கலையே.. ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇந்திய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கில் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணமடைந்தனர்.

இந்த செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அவர்களை தாக்கிய போலீசை சஸ்பெண்ட் செய்தும் ஆயுதப்படைக்கும் மாற்றி உள்ளது காவல்துறை.

மேலும் தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்துள்ளது.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது-

#JusticeForJayarajAndFenix என்கிற ஹேஷ்டேகில் கோலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என உச்ச நட்சத்திரங்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

நீங்கள் எப்போது மெளனத்தைக் கலைக்கப்போகிறீர்கள்” என இவர்களின் ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து மற்றொரு புகாரும் எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி பிரச்சினையின் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்ற போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது போலீஸை ஒரு ஜிம் பாய் தாக்கிய வீடியோ வெளியானது.

அதை ரஜினி கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதில், ”வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

தற்போது போலீஸின் கொடூரமான தாக்குதலால் இரண்டு உயிர்கள் போய்விட்டது.

போலீசை தாக்கியவர்களை கண்டித்த ரஜினி, இரு அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்யவில்லையே என கேட்டு வருகின்றனர்.

விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra trailer‘சக்ரா ‘படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது.

விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் இன்று 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.ட்ரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.

இதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள் :

வசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.

வசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.

வசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு…

வசனம் 4 : நாயகன் : இது ஏதோ பற்றிக்குலர் ஏரியாவுல, இல்ல பற்றிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.

வசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு

வசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா, மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்?

வசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா?

வசனம் 8: நாயகன்: மிலிடரி …!

வசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்

வசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..

வசனம் 11
: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்…..

வசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்ருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்

வசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க…

வசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் …..

வசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.

WELCOME TO DIGITAL INDIA…

என்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால்தான் புரியும் என்கிறார்
இப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

More Articles
Follows