தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர்.
1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார்.
அவர் நடத்தும் ரத்த வங்கிக்குத் தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராஜசேகரும் ஜீவிதாவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.
இதையடுத்து, சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகரும் ஜீவிதாவும் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17- வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், 12 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சாய் சுதா நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையைத் தவறாகப் பேசியது நிரூபணம் ஆனதால் ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், நடிகை ஜீவிதா ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajasekhar and Jeevitha receive one year jail sentence