கலர் கலர் சட்டைகளில் கலக்கிய நிகில் முருகனுக்கு காக்கி சட்டை போட்டுவிட்ட விஜய் ஸ்ரீ

கலர் கலர் சட்டைகளில் கலக்கிய நிகில் முருகனுக்கு காக்கி சட்டை போட்டுவிட்ட விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PRO Nikkil Murugan‘பவுடர்’ படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ-வான நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

பிரஸ்மீட் மேடைகளில் அனைவரையும் கவரும் வண்ணம் கலர் கலர் ஆடைகளை அணிவது நிகில் முருகன் ஸ்டைல்.

மேலும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஒரு ஆடையும் தொடங்கிய பின் வேறொரு ஆடையும் அணிவார் நிகில். இதனால் ஹீரோயின்களே இவரை பொறாமையாக பார்ப்பதுண்டு.

தற்போது தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ.

இவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ‘பவுடர்’. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் மனோபாலா,வையாபுரி,
ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்க படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ நிகில் முருகன்.

நிகில் முருகனின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது…

“நிகில் முருகனை திரையுலகம் 25 ஆண்டு காலமாக சிறந்த பிஆர்ஓவாக அறியும்.

முன்னணி சினிமா பிஆர்ஓ.,வுக்கே உரித்தான பாணியில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவரை, லாக் டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன்.

முதலில், இந்த ஸ்க்ரிப்ட்டுடன் நான் அவரை அணுகியபோது, ‘எனக்கு நடிப்பதில் விருப்பமே ஆனால் பிஆர்ஓ., ஆகவே காலூன்றி பணி புரிந்து வருகிறேனே!’ என்று தயங்கினார். அதன்பின்னர் சில சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் சம்மதித்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், எனது பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன். 10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை மக்கள் மத்தியில் தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன்.

சினிமாவில் பொதுவாக இந்த ஆர்டிஸ்ட் இந்த கேரக்டர் தான் என்று பொருத்தி வைத்திருப்பார்கள். அந்த வரையறைகளை உடைத்து வெற்றி காண்பதே எனது பாணி மற்றும் இலக்கு. அதன்படி, தாதா 87-ல் நடிகர் சாருஹாசனை நான் ஒரு டானாக காண்பித்தபோது ரசிகர்கள் அதை ஏற்று மகிழ்ந்தனர்.

அந்த வரிசையில் இப்போது, திரையுலகினரால் பிஆர்ஓ-வாக மட்டுமே அறியப்பட்ட நிகில் முருகனை மக்கள் முன்னால் நடிகராக களமிறக்கிவுள்ளேன். இதில், நிச்சயம் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையிருக்கிறது.

நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன்.

ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன்.

படத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்த நாள் முதலே நிகில் முருகன் நடிப்புப் பயிற்சி, உடற்பயிற்சி என தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். உடலை கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் வலிமையாக்கி திரையில் சிறப்பாகப் பொருந்தியுள்ளார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்வேன்.

நிகில் முருகன் பங்குபெறும் காட்சிகள் பெரும்பாலனவை, தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம்.

நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும்.

வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சான்றோர் சொல்வார்கள். நிகில் முருகன் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்”
இவ்வாறு அவர் கூறினார்.

ஒளிப்பதிவு- ராஜா பாண்டி RP
இசை-லீயாண்டர் லீ மார்ட்டி

கதை,திரைக்கதை
வசனம், இயக்கம் – விஜய்ஶ்ரீஜி

ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் 2021 பவுடர் திரையில் வெளியாகும்.

PRO Nikhil Murugan makes an acting debut with the film Powder

400 பேருக்கு கோல்ட்..; 200 பேருக்கு வேட்டி சேலை.. ‘ஈஸ்வரன்’ டீமுக்கு சிம்புவின் தீபாவளி கிப்ட்

400 பேருக்கு கோல்ட்..; 200 பேருக்கு வேட்டி சேலை.. ‘ஈஸ்வரன்’ டீமுக்கு சிம்புவின் தீபாவளி கிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eeswaranநடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார்.

உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது.

சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.

மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சியை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Simbu gifted Gold chains and dresses to Eeswaran team

வெறித்தனமான டீஸர்.. சூப்பர் ஹிட்டான தன் படத்தலைப்பையே மீண்டும் வைத்த கமல்..; டைட்டில் பஞ்சமா லோகேஷ்.?

வெறித்தனமான டீஸர்.. சூப்பர் ஹிட்டான தன் படத்தலைப்பையே மீண்டும் வைத்த கமல்..; டைட்டில் பஞ்சமா லோகேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிக்கவுள்ள அவரின் 232வது பட அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியானது.

இந்த படத்தை கமலே தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த பட அறிவிப்பு வெளியான போது #எவனென்று நினைத்தாய் என்ற வாசகமும் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 7) கமல் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்துக்கு ‘விக்ரம்’ என அறிவித்து பட ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் டீஸரையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

விக்ரம் என்ற படத்தலைப்பில் ஏற்கெனவே கமல் தயாரித்து நடித்துள்ளார். அந்த படத்தில் சத்யராஜ், அம்பிகா, லிசி, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

1986ல் ரிலீசான இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ராஜசேகர் இயக்கியிருந்தார்.

Kamal Haasan 232 is titled Vikram

Kamal 232 Vikram

திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்ரி

திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gayathriஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துக்கொள்வதுண்டு.

அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு படத்தை இயக்குதல். அதில் சவாலான விஷயம், 50 மணி நேரத்திற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட கதை வகையில் தனது குழுவினரின் துணைக்கொண்டு புதிய கதையை விவாதித்து பின் அதை படமாக உருவாக்க வேண்டும்.

இந்த போட்டியில் நடிகை காய்த்திரி ரோட் டு தும்பா (Road To Thumba) எனும் குறும்படத்தை இயக்கி Gold Film of the Year விருதை பெற்றுள்ளார்.

‘Stop at Nothing’ என்று தலைப்பு தரப்பட்ட வகையில் கதையை தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட மொபைல் போன் கேமரா (One Plus) மூலம் இப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

நடிகை காயத்திரி கூறுகையில், “தரப்பட்ட 50 மணி நேரத்தில் 20 மணி நேரம் கதை விவாததிற்கே செலவாகி விட்டது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சுயசரிதையில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை எடுக்க நினைத்தேன். பின் அவர் மிதிவண்டியில் ராக்கேட் பாகங்கள் எடுத்து செல்வது போன்ற புகைப்படத்தை பார்த்தேன். பின் அதன் பின்னனியை அடிப்படையாக கொண்ட கதையை முடிவு செய்தோம்.

இந்தியாவில் முதல் ராக்கேட்டை விண்வெளியில் செலுத்த சரியான இடம் அமையாத காலத்தில், ஒரு தேவாலயம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்கின்றனர். ஆலயம் உள்ள அந்த இடத்தை பெற முடிந்ததா? ஆன்மிகமும் – அறிவியலும் இரு துருவங்கள், ஆனால் நாட்டிற்காக இவை இரண்டும் ஒன்றினைந்ததா என்ற நிஜ வரலாறின் பின்னனியில் இப்படத்தை இயக்கினேன்.

தேவாலயத்தின் பாதிரியார் வேடத்தில நடிகர் பகவதி பெருமாளும் (பக்ஸ்), விக்ரம் சாராபாய் வேடத்தில் நடிகர் T.M.கார்த்திக்கும் நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது. மேலும் பகவதி பெருமாள் பேசிய வசனங்கள் பெரும்பாலும் அவரே எழுதினார். இறுதியில் பாதிரியார் பேசும் வசனங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த வசனங்களை தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு பிரபல யூடுபர் அப்துல் லீ உதவி செய்தார்.

இந்த குறும்படத்தின் ஒளிப்பதிவை கழுகு படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் மேற்கொண்டார். இசை அனிருத் விஜய்.

இந்த விருது எனது குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்தது. இப்படத்தை தேர்வு செய்த போட்டி நடுவர்களுக்கும், India Film Project தளத்திற்க்கும் எங்களது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.’ என்று கூறினார்

படத்தினை பார்க்க – https://youtu.be/qy8b34ajPGY

Actress Gayathri wins at Indian film project

அப்பா மகன் சண்டை சகஜம்..; விஜய்க்கு கிரிமினல்ஸால ஆபத்து இருக்கு. – எஸ்ஏசி

அப்பா மகன் சண்டை சகஜம்..; விஜய்க்கு கிரிமினல்ஸால ஆபத்து இருக்கு. – எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay SACநடிகர் விஜயை சுற்றி மிகவும் டேஞ்சரான ஒரு விஷயம் நடந்து கொண்டிருப்பதாக அவரது தந்தை எஸ்ஏசி கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யுடன் சில கிரிமினல்கள் இருப்பதாகவும் அவர்களால் விஜய்க்கு ஆபத்து நேரிடலாம் எனவும் எஸ்ஏசி பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது தந்தை எஸ்ஏசி தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து எஸ்ஏசியின் மனைவியும் விஜயின் தாயுமான ஷோபாவும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் பேசிய எஸ்ஏசி, தான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜயின் நன்மைக்கு தான் என்று கூறியுள்ளார்.

இதனை விஜய் விரைவில் புரிந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது புகைப்படம் மற்றும் பெயரை கட்சியில் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக விஜய் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய எஸ்ஏசி, கூறயது போல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து தன்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றம் என்பது தன்னுடைய அமைப்பு என்றும் அதனை இயக்கமாக மாற்றிய போது நிறுவனராக தாமே இருந்ததாகவும் எஸ்ஏசி கூறியுள்ளார்.

எனவே அந்த இயக்கத்தை தற்போது தான் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எல்லா தந்தை மகனைப் போலவே தங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும் என்றும் இருவரும் பேசாமல் இருப்பது சாதாரணமான விஷயம் தான் என்றும் எஸ்ஏசி கூறியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார் அதிலிருந்து அவரை காப்பாற்றவே தான் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும் அவர்களால் விஜயை சுற்றி ஒரு டேஞ்சரான விஷயம் நடந்து கொண்டிருப்பதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை அவராக வெளியிட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Vijay has stopped talking to his dad

தீபாவளிக்குள் தியேட்டர்கள் திறப்பதில் சிக்கல்..; அமைச்சர் உத்தரவுக்கு கட்டுப்படுமா திரையுலகம்?

தீபாவளிக்குள் தியேட்டர்கள் திறப்பதில் சிக்கல்..; அமைச்சர் உத்தரவுக்கு கட்டுப்படுமா திரையுலகம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theatre owners and Movie producers clash Will Theatre reopen before Diwaliகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

வருகிற நவம்பர் 10முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தான் VPF கட்டணத்தை செலுத்த முடியாது என, பாரதிராஜாவை தலைவராக கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தினர் என்ற தகவலை பார்த்தோம்.

நவம்பர் 10ல் தியேட்டர்கள் திறந்தாக வேண்டும். தயாரிப்பாளர்கள் பிரச்சினையை இப்போது பேச வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜீ அறித்திருந்தார்.

இது தொடர்பாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் தியேட்டர்கள் தீபாவளிக்கு திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்களும் புதுப்படங்களை பார்க்க முடியாமல் போகுமா? என்ற வருத்தத்தில் உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

புதிய தலைமை நிர்வாகிகள் அமைந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திரையங்குகளை திறந்து கொள்ளலாம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Theatre owners and Movie producers clash Will Theatre reopen before Diwali

More Articles
Follows