மோடி & ஸ்டாலினை வச்சு செய்த விஜய்ஸ்ரீ.; ‘பவுடர்’ பட டிரைலர் சம்பவம்.; சென்சாரில் கட்.!

மோடி & ஸ்டாலினை வச்சு செய்த விஜய்ஸ்ரீ.; ‘பவுடர்’ பட டிரைலர் சம்பவம்.; சென்சாரில் கட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.

மனிதக்கறி தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்து இருந்தார் விஜய்ஸ்ரீ.

நவம்பர் 25ஆம் தேதி ‘பவுடர்’ படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி பவுடர் படத்தின் டிரைலர் வெளியானது.

இதில்.. மோடி அரசை கலாய்த்து சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு காட்சியில்… “உங்களுக்கு வேணும்னா கைதட்ட சொல்லுவீங்க.. விளக்கு ஏற்ற சொல்லுவீங்க.. ” என்று கொரோனா காலத்தில் நடந்த சம்பவங்களை ஆதவன் பேசுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காட்சிகளுக்கு சென்சாரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த காட்சிகளை கட் செய்யாமல் அந்த வசனங்களை மீயூட் செய்துள்ளனர்.

னவே அந்த காட்சிகளை இந்த ட்ரெய்லரில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் விஜய்ஸ்ரீ.

மேலும் மற்றொரு (படத்தில் இடம் பெற்றுள்ளது) காட்சியில்.. “ஒரு அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி மொட்ட ராஜேந்திரனிடம்.. “சிசிடிவி கேமரா இருக்கிறதா? என கேட்கிறார் போலீஸ் நிகில் முருகன்.

அதற்கு சிசிடிவி கேபிள் ஒயர்களை அணில் கடித்து விட்டது என்கிறார்.. “யோவ் என்னய்யா சொல்ற என மீண்டும் கேட்கிறார்.. மின்சார ஒயர்களை அணில் கடிக்கும் போது கேபிள் ஒயர்கள் அணில் கடிக்காதா? என ஸ்டாலின் திமுக அரசையும் கலாய்த்துள்ளார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

Powder movie Trailer troll Modi and Stalin Governments

Here’s Powder – Official Trailer

Powder – Official Trailer

கூடுதல் தகவல்..

கடந்த 2021ல் திமுக அரசு பதவி ஏற்ற சில மாதங்களிலேயே… “மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘அப்போது்.. ’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்து இருந்தார் அமைச்சர்.

JUST IN பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்.; அவரது வாழ்க்கை குறிப்பு இதோ..

JUST IN பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்.; அவரது வாழ்க்கை குறிப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) இன்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார்.

முகவரி: மாதா கேஸல்,
20/35, நாதமுனி தெரு, தி நகர், சென்னை

மகன்: ஏ. ரவிச்சந்தர்
மகள்கள்: ஏ. தாராதேவி மற்றும் ஏ. ஆஷாதேவி

நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.. பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்….

தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயர் யேசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.

1960களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரத்தின் படங்களுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார். இவரது வசனங்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

எம்ஜிஆர் நடித்த …. தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?,

சிவாஜிகணேசன் நடித்த… பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, அன்புள்ள அப்பா.

ஜெமினிகணேசன் நடித்த… வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

ஆரூர் தாஸ் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். https://t.co/9C0zRnWzSj

அவரது அறிக்கை இதோ…

BREAKING பிரசிடென்ட் மரணத்தில் தேவா பாட்டு; தமிழ் மீடியா கண்டுக்கல.; ரஜினி ஓபன் டாக்

BREAKING பிரசிடென்ட் மரணத்தில் தேவா பாட்டு; தமிழ் மீடியா கண்டுக்கல.; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையால் கட்டி போட்டவர் தேனிசை தென்றல் தேவா.

1992 இல் வெளியான ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் படு பிரபலமானார் தேவா.

இந்த படத்திற்கு ரஜினி என்ற பெயருக்கு இவர் போட்ட டைட்டில் மியூசிக் தான் 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் ரஜினி படங்களுக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரஜினியின் அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தேவாவின் இசை தான் பிரபலம். தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் விஜய்.

அதுபோல் அஜித்தின் ஆசை, வாலி படத்திற்கும் இசையமைத்துள்ளார்..

மேலும் பிரஷாந்த் விஜயகாந்த் கார்த்திக், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார் தேவா.

கானா பாடல்கள் என்றாலே தேவா தான் என்றளவில் படு பிரபலமாக இருந்தார்.

அதன் பின்னர் படிப்படியாக தன் படங்களை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 20 தேவாவின் பிறந்தநாளையும் அவரது 30 வருட சினிமா பயணத்தையும் முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் ரஜினி பேசும்போது..

“சிங்கப்பூர் பிரசிடெண்ட் செல்லப்பன் ராமநாதன் ஒரு உயில் எழுதி வைத்தார்.

அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான்.

அவர் எழுதிய உயிலில் நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும் முன் தேவா இசையமைத்த “தஞ்சாவூர் மண்ணெடுத்து….” என்ற பாடல் ஒலிக்க வேண்டும். அதன் பின்னரே என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார்.

(இந்த பாடல் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்றது வைரமுத்து பாடல் எழுதியிருந்தார். முரளி & மீனா நடித்திருந்தனர்)

அவரின் ஆசை படியே அவர் இறந்த பின்னர் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

இந்த செய்தியானது சிங்கப்பூர் மலேசியா ஹாங்காங் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. பல நாடுகளில் அந்தப் பாடலின் அர்த்தங்களையும் பிரதிபலித்தனர்.

ஆனால் தமிழ்நாட்டில் எந்த பத்திரிகையும் அந்த செய்தியை கண்டுக்கவில்லை. அது தொடர்பான ஒரு செய்தியும் வெளியிடவில்லை.

நம் தமிழரின் பெருமையை பத்திரிகைகள் போற்ற வேண்டும். நெகட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பாசிட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

BREAKING ஒரே மாதிரி படம் பண்ணுவேன்.; இந்த டைரக்டருக்கு புரொடியூசர் கார் கொடுக்க கூடாது – சசிகுமார்

BREAKING ஒரே மாதிரி படம் பண்ணுவேன்.; இந்த டைரக்டருக்கு புரொடியூசர் கார் கொடுக்க கூடாது – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஹேமன்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘காரி’.

படத்தின் நாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்துள்ளார்.

முக்கிய வேடங்களில் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை தீ நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது…

“நான் எப்போதும் கிராமத்து படங்களை செய்வதாக பலரும் கேட்கின்றனர். என்னுடைய பூர்வீகம் அதான்.

அந்த கலாச்சாரத்தில் தான் வளர்ந்தேன். எனவே கிராமத்து படங்களை தான் நான் செய்தேன்..

மேலும் இந்தியாவை விட்டு பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற கிராமத்து படங்களை பார்ப்பதில் தான் நாம் நாட்டோடு ஒன்றிணைப்பது போல இருக்கும். அவர்களும் அது போல தான் கேட்கிறார்கள்.

எனவே நான் கிராமத்து படங்களை தான் தொடர்ந்து செய்வேன். இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஹேமண்த் நன்றாக இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றி அடையும் போது படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு கார் கொடுக்கக் கூடாது.

அதற்கு பதிலாக அவர் நடிகர் கார்த்தி படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுக்க வேண்டும். கார்த்திக் அவருக்கு நண்பர். நெருக்கமானவர்.”

இவ்வாறு சசிகுமார் பேசினார்

தனுஷ் விலகியதால் அந்த இடத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ரஜினியின் புது ஹீரோ

தனுஷ் விலகியதால் அந்த இடத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ரஜினியின் புது ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

இதற்கான நிகழ்வு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகை அர்ச்சனா மற்றும் விஜய் டிவி பாலா ஆகியோர் தொகுத்து வழங்கனர்.

படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்த ட்ரைலர் இறுதியில் படத்தை டிசம்பர் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் முன்பு 2022 டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 2023 பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனவே டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ள வரிசையில் இருந்து தனுஷ் விலகியதால் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் அதே தேதியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் விஷ்ணு விஷால் நடித்த படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டி எஸ் பி (DSP) என்ற படமும் டிசம்பர் 2ம் தேதி தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்:…

ரஜினிகாந்த் நடிப்பில் (கெஸ்ட் ரோல்) உருவாக உள்ள ‘லால் சலாம்’படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணி மன்றங்களையும் நடத்தி வருகிறார் விஜய்.

இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி வருவது விஜய்யின் வழக்கம்.

இன்று நவம்பர் 20ல் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய சென்னை ECR பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களைப் பார்த்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே..’ பாடல் ஸ்டைலில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

More Articles
Follows